கேள்விக் குறியாகும் அன்னா ஹஸாரேவின் நேர்மை!

Go down

கேள்விக் குறியாகும் அன்னா ஹஸாரேவின் நேர்மை!

Post by முஸ்லிம் on Thu Oct 13, 2011 5:09 pm

அரியானா மாநிலத்தில் இன்று(அக்டோபர் 13)
நடக்கும் ஹிஸார் நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் காங்கிரஸ்
சார்பில் ஜெயபிரகாஷ், அரியானா ஜன்கித் காங்கிரஸ் சார்பில் முன்னாள்
முதல்வர் பஜன்லாலின் மகன் குல்தீப் பிஷ்னாய், இந்திய தேசிய லோக்தள்
சார்பில் அஜய்சிங் சவுதாலா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
"ஹிஸார் இடைத் தேர்தலில் காங்கிரஸ்
கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து
காங்கிரசை வரலாறு காணாத தோல்வி காணச் செய்வோம்" என்று களமிறங்கியுள்ளனர்
அன்னா ஹசாரே குழுவினர். அன்னா ஹசாரே குழுவில் அங்கம் வகிக்கும் சமூக சேவகர்
அர்விந்த் கேஜ்ரிவால், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி கிரண் பேடி ஆகியோர்
ஹிஸார் தொகுதியில் முகாமிட்டு, "ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்றாத
காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டாம்" என பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அன்னா ஹசாரே குழுவினரின் ஆதங்கம்
நியாயமானதுதான். ஜன்லோக்பால் மசோதாவைக் கொண்டு வராத காங்கிரசை எதிர்க்க
வேண்டியதும்தான். ஆனால், காங்கிரசை எதிர்க்கும் அன்னா குழுவினர் என்ன
செய்திருக்க வேண்டும்? "தங்கள் குழு சார்பில் ஒருவரை ஹிஸார் தேர்தலில்
நிறுத்தி இவருக்கு வாக்களியுங்கள்" எனக் கூற வேண்டும். அதை விடுத்து
"காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டாம்" என்று மட்டும் கூறி விட்டால்
காங்கிரஸ் வேட்பாளரைத் தவிர பாஜக ஆதரவுடன் போட்டியிடும் அரியானா ஜன்கித்
காங்கிரஸ் வேட்பாளர் குல்தீப் பிஷ்னாய், இந்திய தேசிய லோக்தள் வேட்பாளர்
அஜய்சிங் சவுதாலா, சுயேச்சை வேட்பாளர்கள் என அனைவரும் ஊழலே புரியாத
உத்தமர்கள் எனக் கூற வருகிறார்களா?

இது குறித்து அன்னா குழுவில் உள்ள
அர்விந்த் கெஜ்ரிவாலிடம் கேட்டால் ''எங்கள் குழுவினரின் காங்கிரஸ்
எதிர்ப்புப் பிரச்சாரத்தால் எதிர்க் கட்சிகள் பலன் அடைந்தால் அதற்கு
நாங்கள் பொறுப்பல்ல'' எனப் பதில் சொல்கிறார். என்னதொரு பொறுப்பற்ற பேச்சு!
நாட்டைச் சீரழிக்கும் ஊழலை ஒழிக்கப்புறப்பட்டவர்கள் தங்களின் எதிர்ப்பு,
ஊழலில் ஊறிப்போயுள்ள எவருக்குமே சாதகமாக அமைந்துவிடாமல் இருப்பதில்
தனிக்கவனம் செலுத்த வேண்டாமா?

இனி நாட்டில் ஊழல் மட்டுமேவா ஒழிக்கப்பட
வேண்டிய பிரச்சனை?. நாட்டைச் சீரழிப்பது ஊழல் என்றால், நாட்டு மக்களைக்
கூறுபோட்டு நாட்டைத் துண்டாக்கும் ஊழலைவிட மிக மோசமான வைரஸாக மதவாதம்
உள்ளதே? அது ஒழிக்கப்பட வேண்டாமா?. ஊழலுடன் மதவாதமும் இந்தியாவில் இருந்து
வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறியப் பட வேண்டும் என்பதில்
யாருக்கும் மாற்றுக் கருத்திருக்க முடியாது!

அன்னா குழுவினரின் காங்கிரஸ் எதிர்ப்பும்
பொறுப்பற்ற பேச்சுகளும் ஊழலுக்கு எதிராகப் போராடுவதாகக் காட்டப் பட்டாலும்
பாஜகவின் மதவாதம் குறித்த கவலை அன்னா குழுவுக்கு எள்ளளவும் இருப்பதாகத்
தெரியவில்லை. அன்னா ஹஸாரே குழுவினரின் ஊழல் எதிர்ப்புக்கு ஆர்.எஸ்.எஸ் தனது
ஆதரவைப் பகிரங்கமாகவே தெரிவித்திருப்பது, ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர்
சுரேஷ் ஜோஷி அன்னா ஹஸாரேவுக்கு அனுப்பிய கடிதம் மூலம் தெளிவாகியுள்ளது. அது
மட்டுமில்லாமல், சுமார் 3000 முஸ்லிம்களைக் கொன்றொழித்த குஜராத்
கலவரத்தில், உச்ச நீதிமன்றத்தாலேயே கடுமையாக விமர்சிக்கப்பட்ட மோடிக்குத்
தன் ஆதரவை ஹஸாரே ஆரம்பத்தில் தெரிவித்து, எதிர்ப்பு எழுந்ததும் விலக்கிக்
கொண்டதும் மறப்பதற்கில்லை. இந்நிலையில், "காங்கிரஸைத் தோற்கடிப்போம்;
அதனால் எதிர்க்கட்சிக்குப் பயன் ஏற்பட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல"
என்று கூறுவது பொறுப்பற்றத்தனம் மட்டுமல்லாமல், ஹஸாரே குழு பாஜகவுக்கு
ஆதரவாக செயல்படுகிறது என்ற தோற்றத்தையும் வெளிப்படையாகவே ஏற்படுத்தி
விடக்கூடியதுமாகும்.

அதே போன்று, ஊழலில் பாஜகவும் உத்தமர்கள்
எனக் கூறி விட முடியாது. ஊழலில் ஊறித் திளைத்ததால் எதிர்க் கட்சிகளின்
தீவிர எதிர்ப்பு காரணமாக இரு மாநில பாஜக முதல்வர்கள் மாற்றப் பட்டது
நாடறிந்த விஷயம்.

அன்னா குழுவில் இடம்பெற்றுள்ள நீதிபதி
சந்தோஷ் ஹெக்டே கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் கர்நாடக முதல்வர்
எடியூரப்பா பதவி விலகியது அனைவரும் அறிந்ததே. அம்மாநிலத்தில் அண்மையில்
கொப்பல் சட்டமன்றத்துக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் ஊழல் பாஜக மீண்டும்
வெற்றி பெற்றது. அங்குச் சென்று தங்களின் ஊழல் எதிர்ப்புப் பிரச்சாரத்தை
அன்னா ஹசாரே குழு ஏன் மேற்கொள்ளவில்லை.

மாமியார் உடைத்தால் மண்சட்டி மருமகள்
உடைத்தால் பொன்சட்டி என்ற நிலையில் இருந்து வரும் அன்னா ஹசாரே குழு, ஜன
லோக்பால் மசோதாவை நிறைவேற்ற உரிய கால அவகாசம் அளித்து ஆளும் மத்திய அரசை
வலியுறுத்த வேண்டும். மேலும் தங்கள் குழுவினரின் நடுநிலை குறித்த சந்தேகம்
கேள்விக்குறியாக்கப் பட்டு வரும் நிலையில், ஹஸாரே தெளிவான நிலையை எடுக்கா
விட்டால் ஒரு நல்ல போராட்டம் மக்கள் மத்தியில் நீர்த்துப் போகும்
நிலைக்கும் தள்ளப்பட்டு விடும் என்பதை நினைவில் நிறுத்தட்டும்!.


இந்நேரம்
avatar
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 8940
Points Points : 42
வயது வயது : 30
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum