மாப்பிள்ளை வீட்டாரா??? பிச்சை எடுக்கும் நபர்களா???

Go down

மாப்பிள்ளை வீட்டாரா??? பிச்சை எடுக்கும் நபர்களா???

Post by முஸ்லிம் on Sun Oct 16, 2011 5:30 pm

உறவினர்
ஒருவரை வங்கியில் சந்திக்க நேர்ந்தது. நகைக்கடன் வாங்கும்/மீட்கும்
பிரிவில் நின்றுக்கொண்டிருந்தார். சில தினங்களுக்கு முன்பு தான் தன்
சம்மந்தி ( தன் பெண்ணின் மாமியார்) இறந்ததாக தகவல் சொல்லி சென்ற நினைவு. நல
விஷாரிப்புக்கு பின்னும் நாகரிகம் கருதி அந்த மாமியிடம் என்ன காரணம்
என்றும் கேட்கவில்லை. அம்மாவிடம் விசாரித்த போது தான் சொன்னாங்க "கத்தம்
பாத்திஹா(??!!) ஓதுவாங்கல? (காரியம்/தவசம்) யார்வீட்ல ஆள் இறந்து போனாங்களோ
அந்த வீட்ல சம்மந்தம் பண்ண பொண்ணுவீட்டுக்காரங்க தான் கத்தத்துக்கு
வரவங்களுக்கு சாப்பாடு போடணும்". பதில் பேச முடியவில்லை.

வரதட்சணை, சீர்ன்னு எல்லா பணபறிப்பு பத்தியும் தெரியும். ஆனா இந்த காரணம்
ரொம்பவே புதுசு......... ஒருவேள சில ஏரியால மட்டும் தான் இந்த முறை இருக்கா
அல்லது எனக்கு தான் தெரியலையான்னு தெரியல. ஆனா எந்த வகையிலலாம் பணம்
பறிக்கணுமோ அதுக்காக புதுசுபுதுசா காரணத்த தேடி கண்டுபிடிக்கவே ரூம்
போட்டு யோசிப்பாங்கன்னு மட்டும் தெரியுது.
________________
தோழி ஹேமாவின்
வளைகாப்பு நிகழ்ச்சியில் அவள் வீட்டு தரப்பிலிருந்து 7 வகை சாப்பாடு
செய்து, தாம்பூல தட்டில் பழங்கள், தேங்காய், வெத்தல பாக்கு மற்றும் சில
ஆயிரங்களை வைத்து கொடுத்த போது வாங்கிக்கொண்டே மாப்பிள்ளை வீட்டார், “என்
மகளுக்கு ஐய்யாயிரமும் 9 வக சாப்பாடும்ல போட்டேன்?” என சொன்னார். மனதில்
கோபம் இருந்தும் வெளிபடுத்தாமல் “ஏதோ எங்கனால முடிஞ்சதுமா” என அடுத்த
வேலையில் மும்முரமானார்கள் பெண்வீட்டார். என் தோழியின் கண்ணில்
கண்ணீர்.......

குழந்தைக்காகவும், கர்ப்பவதியின் மன மகிழ்ச்சிக்காகவும் நடத்தப்படும்
நிகழ்ச்சியில் அப்பெண்ணுக்கு மன உளைச்சல் தான் மிச்சம். 5ம் மாதத்தில்
குங்குமப்பூ கொடுக்கும் நிகழ்ச்சி வேறு நடந்ததாம். அந்த குங்குமபூவையும்
பெண்வீட்டார் தான் கொடுக்கணுமாம். (விட்டா குழந்தைக்கு மொட்ட
போடணும்.அதுக்கு சலூன் கடக்காரனுக்கு மாச மாசம் 25 ரூபா கொடுத்துடுங்கன்னு
சொன்னாலும் சொல்லுவாங்க)
____________
வீரசோழன் என்னும்
ஊரில் சில காலம் வசித்த போது அவ்வபோது மாலை வேளைகளில் தாம்பூல தட்டுக்கள்
ஏந்தி பெண்கள் கூட்டம் போவது கண்டதுண்டு. காரணம் “உன் மகள் கர்ப்பவதி
ஆகிவிட்டாள்” என மாப்பிள்ளை வீட்டார் சொன்ன அன்றே பெண் வீட்டார் ஒற்றைபடை
எண்ணிக்கையில் பழ வகைகளும், தேங்காய், ஹார்லிக்ஸ், பெண்ணுக்கும்,
மாப்பிள்ளைக்கும் துணிமணி சகிதம் சீர் கொண்டு போக வேண்டுமாம். (பாவம்
இதெல்லாம் மாப்பிள்ளை வீட்டாரால் வாங்க முடியாது பாருங்க)

____________

தன் பெண்ணை திருமணம் செய்து கொண்ட ஆணுக்கு அன்பின் வெளிப்பாடாய் சிறு
பொருள் ஒன்றை எவனோ ஒருவன் கொடுத்து வேரொன்றை நட்டுவிட்டு போக ஒவ்வொரு
காலகட்டத்திலும் பலவாறு பரிமாணம் புகுத்தப்பட்டு இன்று வரதட்சணை,சீர்,
சீமந்த சாப்பாடு,பிரசவ செலவு, தாய்மாமன் சீர், தலதீபாவளி/ரம்ஜான்க்கு
புத்தாடை என பல விழுதுகளை தாங்கிய அசைக்க முடியாத ஆலமரமாகி ஊரையே நாசம்
செய்துவிட்டது......

ஆசைபட்டதெல்லாம் கேட்ட நொடியிலேயே வாங்கி தர சக்தியுடையவர்கள் கூட மகனை
திருமணம் செய்து கொடுக்கும் போது மட்டும் ( சாகும் வரை) திருஓட்டை ஏந்திய
பிச்சைக்காரர்களாக மாறும் பெற்றோர்கள்........ஐய்யோ பரிதாபம் (இறைவா இந்த
பிச்சைஎடுக்கும் இழிநிலையை ஒருபோதும் எங்களுக்கோ இனிவரும் எங்கள்
சந்ததியினருக்கோ கொடுக்காமல் பாதுகாத்திடு)

ஆசையாய்,அன்பாய் வளர்த்து, படிக்க வைத்து பராமரித்த மகனை(மாட்டை) 25
வயதுக்கு மேல் திருமண சந்தையில் அதிகமாய் பணம் கொடுப்பவர்களுக்கு விற்கும்
வியாபாரிகள்............ ஐய்யோ கேவலம்

தன் ரத்தத்தில் உருவான முதல் உயிரை வயிற்றில் சுமந்தும் அதை பராமரிக்க
அருகதை இல்லாமல் மாமனார் வீட்டுக்கு அனுப்பும் கணவன்மார்கள்......... ஐய்யோ
வெட்ககேடு


பிச்சைக்காரர்களின் நியாயமான (??!!) காரணங்கள்
அதானே மொற!! (எவுக தான் இத கண்டுபிடிச்சாக? கைல கெடச்சா...........!!!)

பணம் கொட்டி படிக்க வச்சுருக்கோம்ல? சும்மாவா??!! ( அடடே...... அப்ப பொண்ண பெத்ததும் வீட்டுவேலைக்கு அனுப்பி வச்சுடுவாகளோ?)

அவுக வீட்டு பொண்ணுக்கு தானே இனி சம்பாதிச்சு கொடுக்க போறான் (
ஐய்யோடா...... வரதட்சணைய நாங்க வச்சு காலத்த தள்ளிக்கிறோம். இனி மகன்
சம்பாதிக்கிறதெல்லாம் மருமகளுக்கு தான்னு எழுதி கொடுக்க தயாரா? அல்லது
மருமக சம்பளத்த அவ அம்மா வீட்டுக்கே கொடுக்கலாம்னு சொல்ல தைரியம் இருக்கா?)

அதெல்லாம் வாங்கலன்னா பையனுக்கு கொற இருக்குன்னு நாலு பேரு நாலுவிதமா
சொல்லுபுடுவாகளே ( பார்ர்ர்ர்டா.......அதிகமா ஒரு பொண்ணுக்கு பணத்த
கொடுத்து தள்ளிவிட்டா அப்ப அந்த பொண்ண பத்தி அதே நாலு பேரு நாப்பதாயிரம்
விதமா நார் போல் கிழிக்க மாட்டாகளா?)


நிறையா கொண்டு வந்தா அந்த பொண்ணுக்குதேனே பெரும..... ( என்ன ஒரு
நல்லெண்ணம். உங்க மானத்த அடகு வச்சுட்டு மருமகளுக்கு பெரும
சேக்குறீகளாக்கும்?)

கடைசி வரைக்கும் அந்த புள்ளைய நாங்க தானே வச்சு வரவு செலவு பாக்க போறோம்.
அப்ப கொஞ்சமாவது செய்யலைன்னா எப்படி? (நோ கமெண்ட்ஸ்.... வாமிட் வந்துடும்)

இப்படியாக
பெண்ணுக்கு நிச்சய தார்த்தம் அன்று வரும் பட்டாளம் படைகளுக்கு சாப்பாடு

திருமணத்திற்கு வரதட்சணை

குடிக்குறதுக்கு டம்ளர்ல இருந்து பெட்சீட் வரைக்கும் சீர்வரிசைகள்

மண்டப செலவு, ரிசப்ஷன் செலவு, கல்யாண விருந்து செலவு

மறுவீட்டுக்கு அழைக்க போகும் போது சீர்

கர்ப்பம் ஆனா சீர்

குங்குமபூ கொடுக்கும் நிகழ்ச்சி

வளைகாப்பில் 5,7,9,13...... வகை சாப்பாடு, பணம்

தலை தீபாவளி/ரம்ஜான்/பொங்கல்................க்கு துணிமணியுடன் பணம்

பிரசவ செலவு

பிறந்த குழந்தைக்கு செயின், மோதிரம், கொழுசு,.....................

இது வரைக்கும் பெத்தவங்க பாடு. அடுத்தது வைக்கப்படும் ஆப்பு தாய்மானனுக்கு........

மொட்டை போட, காதுகுத்த இதெல்லாம் தாய்மாமன் கால்ல உக்காந்து செஞ்சா மட்டும் தான் முடி இறங்கும்/ காதுல ஓட்டை விழும் போல

பருவம் எய்தியதும் நடத்தும் விழா (?!!)

அப்பறம் பழையபடி திருமண படலம்.... அதுலையும் தாய்மாமா சீர்,துணி நகை(ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா.... சோடா ப்ளீஸ்....... )இன்னும் எதையாவது விட்டு வச்சுர்க்காங்களா? இல்ல நான் தான் தெரியாததுனால விட்டுட்டேனா???

இனைக்கு காலத்துல அரசன் இருந்தா பன்மையன்றி ஒரு பெண் பிள்ளை பெற்றால்
போதும் நடுரோட்டுக்கு வந்துடலாம் (ஆரம்பிச்சு விட்டதே இவங்களா தான்
இருப்பாங்களோன்னு டவுட்டு)

மாப்பிள்ளை வீட்டாருக்கு
தயவு செய்து அவரவரின் நிலையிலிருந்து யோசித்து பாருங்கள். வரதட்சணை கொடுக்க
இயலாமல் எத்தனை பெண்களின் கனவுகள் கண்ணீரில் மூழ்கிகிடக்கிறது? எத்தனை
எத்தனை கனவுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது? எத்தனை பேரின் இளமை
புதைகுழிக்குள் திணிக்கப்பட்டுள்ளது? இன்றில்லை என்ற போதும் என்றாவது
உங்களால் பணம் சம்பாதிக்க முடியும். உயிரை எவ்வாறு மீட்பீர்கள்? இளமையை
எவ்வாறு திருப்பி தருவீர்கள்? வாழாவெட்டிகளின் கண்ணீருக்கு என்ன பதிலை தர
போகிறீர்கள்? உங்கள் குடும்பத்தில் இதற்கு பிறகு பெண் வாரிசு வராமல்
போய்விடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். திருமண செலவில் பாதியை கூட சுமக்க
வேண்டாம். உபரி வருமானங்களையாவது விட்டுக்கொடுக்கலாமே..... :-( பிச்சை
எடுப்பதை விடவா ஒரு இழிநிலை இருக்க முடியும்? இறுதியில் இறைவனிடத்தில்
இக்குற்றத்திற்காக என்ன பதில் சொல்ல போகிறீர்கள்?

யோசிங்க


மனமாற்றம் நிகழும் போது மட்டுமே ஒவ்வோர் விழுதுகளும் வெட்டப்பட்டு மரம் கூட இருந்த இடமும் சுவடும் தெரியாமல் போகும்.
வெட்டப்படும் என்ற நம்பிக்கையில்........

உங்கள் சகோதரி
ஆமினா

குட்டி சுவர்க்கம்


avatar
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 8972
Points Points : 42
வயது வயது : 30
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum