உயிர் தோற்றம் - இஸ்லாமிய பார்வையும், பரிணாம கொள்கையும்

View previous topic View next topic Go down

உயிர் தோற்றம் - இஸ்லாமிய பார்வையும், பரிணாம கொள்கையும்

Post by முஸ்லிம் on Sat Dec 03, 2011 7:30 pm

மத
நூல்களைப் படித்ததும் அதை அப்படியே ஏற்க வேண்டியதில்லை. பல் வேறு
கேள்விகள் கேட்டு , தெளிவு பெறுவது ஆரோக்கியமானதே. அந்த வகையில், சென்ற
பதிவில் எதிர் கேள்விகள் கேட்டவர்களை பாராட்டுகிறேன். அதற்கு உரிய பதில்
அளித்த ஆன்மீக நாட்டம் கொண்ட நண்பர்களுக்கு நன்றிகள்.இஸ்லாமிய கருத்துக்களை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டுமானால் , அந்த இஸ்லாமிய
சகோதரர்களின் பதிவுகளை பார்வையிடுமாறு கேட்டு கொள்கிறேன்.


இஸ்லாமியர்கள்
என அவர்களை அடையாளப்படுத்த விரும்பவில்லை. இஸ்லாம் சமுதாயத்தில் பிறந்த
அனைவருக்கும் இஸ்லாம் தத்துவங்கள் முழுமையாக தெரிந்து இருக்கும் என சொல்ல
இயலாது. இஸ்லாம் சமுதாயத்தில் பிறக்காத சிலருக்கு, அந்த தத்துவங்கள்
தெரிந்து இருப்பதும் உண்டு.ஆக
, சில சகோதரர்கள் இஸ்லாமிய கருத்துக்களை நன்றாக எழுதுகிறார்கள் என்றால்
அவர்களின் தத்துவ அறிவுக்கு தலை வணங்க வேண்டுமே தவிர, முஸ்லீம்கள் என்பதால்
அப்படி எழுதுகிறார்கள் என நினைக்க கூடாது. ஈடுபாடு இருந்தால்தான் இப்படி
எழுத முடியுமே தவிர , இஸ்லாமியராக பிறப்பதால் மட்டுமே அந்த மத அறிவு வந்து
விடாது.நான் எழுதுவது அறிவியல் பார்வையில், காமன் சென்ஸ் அடிப்படையில்.,
எனவே எளிய முறையில், சில கேள்விகளுக்கு பதில் அளிக்க கடமைபட்டு இருக்கிறேன். இது அறிவியல் பார்வையாகும்.


பார்க்கலாமா?


1 . பரிணாம வளர்ச்சி கொள்கையும் ,மத கொள்கையும் முரண் படுவது ஏன்?
குரங்கில்
இருந்து மனிதன் தோன்றினான் என்ற பரிணாம கொள்கை இந்தியா போன்ற
நாடுகளில்தான் முழு உண்மையாக கருத்தப்பட்டு வருகிறது. அறிவியலில் வளர்ந்த
நாடுகள், இந்த கொள்கையை ஒரு ஹைப்போதீசிஸாகத்தான் நினைக்கின்றன. இன்னும்
சிலரோ இந்த கொள்கையே தவறு, ஹைப்போதீசிஸ் என்ற தகுதியில் இருந்து
இறக்கப்பட்டு, ஒரு கட்டுக்கதை என்ற அந்தஸ்து கொடுக்கப்பட வேண்டும்
என்கின்றனர்.அதென்ன ஹைப்போதீசிஸ்?


சொல்கிறேன்.


பெட்ரோல்
விலை கூடிக் கொண்டே செல்கிறது. என்ன செய்யலாம் என யோசிக்கிறீர்கள். ஆய்வு
செய்கிறீர்கள். கடைசியாக இதற்கு ஒரு தீர்வை கண்டு பிடித்தே விட்டீர்கள்.கீரையில்
இருந்து பெட்ரோல் உருவாக்கலாம் என கண்டு பிடித்து விட்டீர்கள், ( ஒரு
உதாரணத்துக்காகத்தான் ) உங்கள் வீட்டு தோட்டத்தில் கீரையை பறித்து ,
உங்கள் வீட்டில் பெட்ரோல் செய்தும் பார்த்து விட்டீர்கள் என வைத்து
கொள்ளுங்கள். உங்கள் ஓட்டை பைக்கில் இந்த பெட்ரோல் நிரப்பி ஓட்டியும்
பார்த்து விட்டீர்கள் என வைத்து கொள்ளுங்கள்.இதற்காக உங்களுக்கு விழா எடுப்பார்களா? சிலை வைப்பார்களா?


மாட்டார்கள்.


உங்கள் கண்டுபடிப்பு ஓர் அனுமானம்தான். அது இறுதி உண்மை அன்று.


உங்கள் அனுமானம் இறுதி உண்மையாக ஏற்கப்பட வேண்டுமென்றால் , சில நிபந்தனைகள் உண்டு.


1. ரிப்பீட்டபிலிட்டி 2. கணிக்கும் ஆற்றல் 3 புற வய சோதனையில் தேறுதல்


இதில் ஏதாவது ஒன்றையாவது பூர்த்தி செய்ய வேண்டும்.


அதாவது,
ஒரு நாள் கீரையில் இருந்து பெட்ரோல் செய்தால் போதாது. எப்போது யார் வந்து
கேட்டாலும் , கீரையில் இருந்து பெட்ரோல் செய்து காட்ட வேண்டும்.இல்லை.
இன்று வெள்ளிக்கிழமை. இன்று செய்ய முடியாது.. என் வீட்டில்தான் செய்ய
முடியும் என்றெல்லாம் ஜகா வாங்கினால் , உங்கள் கண்டுபிடிப்பு தின
தந்தியில் இடம்பெற்று , பின் கேலி செய்யப்பட்டு, மறக்கப்படும்.வெளிப்படையாக
யார் வேண்டுமானாலும் சோதித்து பார்க்கும்படி இருக்க வேண்டும். என்
நண்பர்கள் செய்தால் மட்டுமே பெட்ரோல் உருவாகும் என்று சொன்னால் செல்லாது...எல்லா கண்டு பிடிப்புகளையும் இது போல சோதனை செய்ய இயலாது.


எனவே அவற்றுக்கு சலுகை உண்டு.


பிரபஞ்சம்
சுருங்கி கொண்டே வருகிறது என்ற ஒரு கண்டு பிடிப்பை ( ? !! ? )
வெளியிடுகிறீர்கள் என வைத்து கொள்ளுங்கள். ஆய்வு சாலையில் ஒரு
பிரபஞ்சத்தை வைத்து சோதித்து பார்க்க முடியாது.இந்த நிலையில், நீங்கள் சுருங்குவதால் ஏற்படும் விளைவுகளை கணித்து சொன்னால் போதும், உங்கள் கண்டுபிடிப்பு ஏற்கப்படும்.


பிரப்ஞ்சம்
சுருங்குவதால், பூமியின் வெப்பனிலை கூடும்., .. நட்சத்தைர ஒளி நீளத்தில்
மாற்றம் ஏற்பட்டு, நிறம் மாறும் . என சிலவற்றை கணித்து சொன்னால் போதும்.
உங்கள் கணிப்புகள் உண்மையானால், உங்கள் கண்டு பிடிப்பை ஏற்பார்கள்.பரிணாம வளர்ச்சி கொள்கை இந்த எந்த சோதனையிலுமே தேறவில்லை..


ஓர் உயிரில் இருந்து இன்னொரு வகை உயிரினம் உருவாவதை நாம் பார்க்கவே இயலவில்லை.


தகுதியுடவை
எஞ்சும் என ஒரு பம்மாத்து கொள்கை. தகுதி உடையவை மட்டும்தான் எஞ்சி
வாழ்கின்றன என்பதற்கு என்ன ஆதாரம் என கேட்டால் ஆதாரம் இல்லை.. தகுதியே
இல்லாதவை கூட குருட்டு அதிர்ஷ்டத்திலோ, கடவுளின் கருணையாலோ ( ? ! )
பிழைத்து இருக்க கூடுமே என கேட்டால் பதில் இல்லை..தகுதி உடைய உயிரினங்கள் கூட தற்செய்லலோ, இறை செயலாலோ ( ? ! ) அழிந்து போய் இருக்கலாமே என கேட்டாலும் பதில் இல்லை...


இவை
உயிர் வாழ்கின்றன.. என இவை தகுதி உடையவை.. இவை அழிந்து விட்டன. அவை தகுதி
அற்றவை என மேலோட்டமாக சொல்லி சென்று கொண்டே இருக்கின்றனர்.

ஒரு
காலத்தில் , அழுக்கு துணிதான் பரிணாம வளர்ச்சி அடைந்து எலியாக மாறுகிறது
என்பது அறிவியல் கண்டு பிடிப்பாக இருந்தது.. வீட்டில் போட்டு வைத்து
இருக்கும் பழைய துணியில் எலி இருப்பதை பார்த்து , இப்படி சொன்னார்கள்..
அடுத்த தலை முறையினர் , இந்த கண்டு பிடிப்பை கேலி செய்து தூக்கி போட்டனர்.அதே போல , பரிணாம கொள்கையும் அதிகார பூர்வமாக தூக்கி எறியப்படும் நிலையே நிலவுகிறது..


சரி.. குரங்கில் இருந்து மனிதன் வரவில்லை வேறு எப்படி உருவானான்?


களிமண்ணில் இருந்து படைக்கப்பட்டானா? குர் ஆன் அப்படி சொல்கிறதா?


இதை அரை குறையாக படித்தால் என்ன தோன்றும்?


பொற்கால,ம் படத்தில் முரளி செய்வது போல , யாரோ களிமண் பொம்மை செய்து , உயிர் கொடுத்து உலவ விடும் காட்சி மனதில் தோன்றும்.
ஆனால் முழுமையாக படித்தால் தோன்றுவது வேறு..

அவன் (அல்லாஹ்) தான் உங்களை களிமண்ணால் படைத்தான்.'' (அல் குர்ஆன் 6: 2)

இன்னும் அவன் (அல்லாஹ்) உங்களை மண்ணிலிருந்து படைத்திருப்பது அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்.'' (அல் குர்ஆன் 30: 20)


நிச்சயமாக நாம் அவர்களை பிசு பிசுப்பான களிமண்ணிலிருந்து படைத்திருக்கின்றோம்.அல்குர்ஆன்: 37:11உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரில் இருந்து அமைத்தோம் என்பதை மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? ( 21: 30 )
மண் , களி மண், தண்ணீர் என ஒவ்வொன்றும் அர்த்தம் மிக்கவை..


முன்பே சொன்னபடி, அறிவியல் என்பது தற்காலிக உண்மை .. இன்றைய அறிவியல் நாளைய குப்பை..


அப்படிப்பட்ட இன்றைய அறிவியலே கூட என்ன சொல்கிறது..


முதல் உயிரி தண்ணீரில்தான் தோன்றியது..


முதலில் மண் , அதாவது நிலம் தோன்றியது.. அதன் பின் தண்ணீர் ... அதன் பின் உயிரிகள் தோற்றம் என்பதுதானே அறிவியல்.


மேற்கண்ட வசனங்களை இந்த பின்னணியில் பாருங்கள்


சரி.. நம் உடல் எவற்றால் ஆனது?
கார்பன்,
கால்சியம் , பாஸ்பரஸ், பொட்டாசியம், சல்ஃபர், சோடியம் , மக்னீசியம்,.
தாமிரம், துத்தனாகம், செலினியம் , மாலிப்டினம் , ஃப்லோரின், க்லோரின்,
அயோடின், மாங்கனீசு, கோபால்ட், இரும்பு, லித்தியம், ஸ்ட்ராண்டியம் ,
அலுமினியம் , சிலிக்கான், காரீயம், வெனெடியம், ஆர்சனிக், ப்ரோமின் போன்ற
பொருட்களால் ஆனதுதான் என் உடம்பு, உங்கள் உடம்பு,இந்த தனிமங்கள் எல்லாம் மண்ணிற்கும் பொதுவானவை என்பவைதான் இதில் இருக்கும் சுவாரஸ்யம்.


ஆனால் மண்ணால் மட்டும் ஆனவன் அல்லன் மனிதன். களிமண், மண், ஈரமான மண், தண்ணீர் என்றெல்லாம் , வசனங்களில் வருவதை பாருங்கள்.


அதாவது,
மனிதன் உருவாவதற்கு ஏதுவான தனிமங்கள் கொண்ட மண் , அவன் உருவாக ஏதுவான நிலை
.. இவைதான் மனிதன் உருவாக காரணம் என்பது அறிவியல்..ஆனால் அதற்கு அடுத்த நிலையில்தான் அறிவியல் தடுமாறுகிறது.


இந்த
தனிமங்கள் எல்லாம் தானாகவே ஒன்று சேர்ந்து மனிதனாக உருவாகி விட்டதா? ஆம்..
அப்படித்தான் நிகழ்ந்தது என வீம்புக்காக அறிவியல் , அவனம்பிக்கையுடம்
சொல்லி வருகிறது.. ( கடவுள் அல்லது ஏதோ ஒரு இறை சக்திதான் காரணம் என்று
சொன்னால், அறிவியலும் ஆன்மீகமும் 100% இணைந்து விடும். இப்போதே கூட ஸ்டீவன்
ஹாக்கிங்ஸ் நூல்களை படித்தால் ஆன்மீக புத்தகம் படிப்பது போலத்தான்
இருக்கிறது..

ஆக,
மனிதன் தோன்றும்போதே மனிதனாகத்தான் தோன்றி இருக்க வேண்டும். இப்போதைய
தோற்றத்தில் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் ஆதி மனிதன் சற்று மாறி இந்த
வடிவை அடைந்து இருக்க கூடும், குரங்கு , பாம்பு, பல்லி , பன்றி போன்றவை
மனிதனாக மாறி இருக்க வாய்ப்பில்லை.. மனிதன் , ஒரு வெளி சக்தி உதவியின்றி,
தானகவே உருவாகி இருக்கவும் வாய்ப்பில்லைமத
நம்பிக்கைகளை விடுங்கள்.. காமன் சென்ஸ் அடிப்படையில் எது லாஜிக்கலாக
இருக்கிறது பாருங்கள்.. குரங்கில் இருந்து மனித்னா அல்லது அவன் தனி
பிறவியா?2 . ஜன தொகை அதிகரித்து வரும் நிலையில் , இஸ்லாம் குடும்ப கட்டுப்பாட்டை ஏன் எதிர்க்கிறது ?


ஓர் இஸ்லாமிய பெரியவருடன் பேசுகையில் அவர் சற்று வித்தியாசமான பதில் அளித்தார்.


இஸ்லாம்
மேல் செய்யப்படும் தவறான பிரச்சாரம் இது.. பாலுணர்வு என்பது
இய்ற்கையானது. அதில் தவறு இல்லை. ஆனால் குடும்ப கட்டுப்பாடு சாதனங்களை
பயன்படுத்தி , முறைகேடான பாலியல் உறவுகளில் ஈடுபடுவது தவறு. உடல் உற்வை
வெறும் கிளர்ச்சிக்காக ப்யனபடுத்த இந்த தடுப்பு சாதனங்கள் பயன்படுபவது
தவறு.இன்னும் மோசமான போன் செக்ஸ் சாட், இண்டர் நெட் சாட் போன்றவை இயற்கையான பாலியல் முறைகள் அல்ல.. இதுவெல்லாம்தான் தவறு.
ஆக, உண்மையாகவே எல்லொரும் ஆன்மீக உணர்வில் இருந்தால் , குடும்ப கட்டுப்பாடு சாதனங்களின் தேவையே இருக்காது என்பதே உண்மை


என்றார் அவர்...


3 குர் ஆனில் இடைச்செருகல் உள்ளதா?
குர் ஆனில் இடைசெருகல் இருப்பது கடினம்..


மூலப் பிரதிகள் இன்றும் கூட பல இடங்களில் பாதுகாத்து வரப்படுகின்றன. வேறு எந்த வேதத்துக்கும் இந்த பெருமை இல்லை.


பெரும்பாலான
குர் ஆன் நூல்களில், எந்த மொழி பெயர்ப்பாக இருந்தாலும் , மூல எழுத் து
வடிவங்களும் கொடுக்கப்படும்,. எனவே யாராவது தவ்று செய்தாலும், அந்த தவறு
உடனடியாக களையப்படும்.

4 மனிதன் நாகரீக வளர்ச்சி பெற்ற பின் தானே குர் ஆன் அருளப்பட்டது? ஏன் அப்படி? அதற்கு முன் இறைத்தூதர் ஏன் அனுப்பபடவில்லை?


முகமது நபிக்கும் முன் பல நபிகள் அனுப்பப்பட்டுள்ளனர் என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. இந்த கேள்வி அர்த்தம் அற்றது..

நன்றி : பிச்சைக்காரன்
avatar
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 8638
Points Points : 42
வயது வயது : 29
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

Re: உயிர் தோற்றம் - இஸ்லாமிய பார்வையும், பரிணாம கொள்கையும்

Post by quadhirababil on Sun Dec 04, 2011 3:53 pm

ஆக , சில சகோதரர்கள் இஸ்லாமிய கருத்துக்களை நன்றாக எழுதுகிறார்கள் என்றால் அவர்களின் தத்துவ அறிவுக்கு தலை வணங்க வேண்டுமே தவிர, முஸ்லீம்கள் என்பதால் அப்படி எழுதுகிறார்கள் என நினைக்க கூடாது. ஈடுபாடு இருந்தால்தான் இப்படி எழுத முடியுமே தவிர , இஸ்லாமியராக பிறப்பதால் மட்டுமே அந்த மத அறிவு வந்து விடாது." இஸ்லாமிய கோட்பாடையையே தகர்க்கும் இந்த வர்தகளை முதலில் நீக்குங்கள் . தலை வணங்குதல் இறைவன் ஒருவனுக்கே.
avatar
quadhirababil
New Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 1
ஸ்கோர் ஸ்கோர் : 2275
Points Points : 2
வயது வயது : 59

View user profile

Back to top Go down

Re: உயிர் தோற்றம் - இஸ்லாமிய பார்வையும், பரிணாம கொள்கையும்

Post by முஸ்லிம் on Sun Dec 04, 2011 7:35 pm

quadhirababil wrote:ஆக , சில சகோதரர்கள் இஸ்லாமிய கருத்துக்களை நன்றாக எழுதுகிறார்கள் என்றால் அவர்களின் தத்துவ அறிவுக்கு தலை வணங்க வேண்டுமே தவிர, முஸ்லீம்கள் என்பதால் அப்படி எழுதுகிறார்கள் என நினைக்க கூடாது. ஈடுபாடு இருந்தால்தான் இப்படி எழுத முடியுமே தவிர , இஸ்லாமியராக பிறப்பதால் மட்டுமே அந்த மத அறிவு வந்து விடாது." இஸ்லாமிய கோட்பாடையையே தகர்க்கும் இந்த வர்தகளை முதலில் நீக்குங்கள் . தலை வணங்குதல் இறைவன் ஒருவனுக்கே.


அஸ்ஸலாமு அலைக்கும் சகோ....

இது ஒரு மாற்று மத நண்பர் எழுதிய கட்டுரை.அது அவரின் கருத்து.அதில் நாம் தலையிட முடியாது சகோ.

புரிந்து கொவீர்கள் என்ற நம்பிக்கையுடன்

நிறுவனர்,
இஸ்லாமிய பூங்கா
avatar
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 8638
Points Points : 42
வயது வயது : 29
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

Re: உயிர் தோற்றம் - இஸ்லாமிய பார்வையும், பரிணாம கொள்கையும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum