திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள்

Go down

திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள்

Post by முஸ்லிம் on Sun Oct 31, 2010 5:26 pm

திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள்:-رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

1. எங்கள் இறைவா! எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக! (2:201)          


             

رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِنْ نَسِيْنَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلاَنَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِيْنَ

2. எங்கள் இறைவனே! நாங்கள் மறந்து விட்டாலோ, அல்லது தவறிழைத்து விட்டாலோ எங்களை தண்டித்துவிடாதே! எங்கள் இறைவனே! எங்களுக்கு முன் சென்றோர் மீது சிரமத்தை சுமத்திய போன்று எங்கள் மீது சுமத்திவிடாதே! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கு அப்பாற்பட்டதை எங்கள் மீது சுமத்திவிடாதே! எங்கள் பாவங்களை பொறுத்து எங்களை மன்னிப்பாயாக! எங்களுக்கு கருணை புரிவாயாக! நீயே எங்கள் அதிபதி! (உன்னை) மறுக்கும் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக! (2:286)


                              

رَبَّنَا لاَ تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ

3. எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் உள்ள‌ங்களை தடம் புர‌ளச் செய்துவிடாதே! இன்னும் எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளனாக இருக்கிறாய்! (3:8)


            

رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ

4. எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எனவே எங்கள் பாவங்களை மன்னித்தருள்வாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக! (3:16)


             

رَبِّ هَبْ لِيْ مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيْعُ الدُّعَاءِ

5. என் இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு தூய்மையான‌ சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுப்போனாக இருக்கின்றாய். (3:38)


             

 رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَإِسْرَافَنَا فِيْ أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِيْنَ

6. எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்புமீறிச் செய்தவற்றையும் மன்னித்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக!(உன்னை)மறுக்கும் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு உதவி புரிவாயாக. (3:147)


             

رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِيْنَ

7. எங்கள் இறைவனே! நாங்கள் (இவ்வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம்; எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று) சாட்சி சொல்வோருடன் எங்களையும் பதிவு செய்வாயாக! (5:83)


             

رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُوْنَنَّ مِنَ الْخَاسِرِيْنَ

8. எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து அருள் செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம் (7:23)


             عَلَى اللَّهِ تَوَكَّلْنَا رَبَّنَا لاَ تَجْعَلْنَا فِتْنَةً لِلْقَوْمِ الظَّالِمِيْنَ وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكَافِرِيْن    

9. நாங்கள் அல்லாஹ்வையே சார்ந்துவிட்டோம். எங்கள் இறைவா! அநீதி இழைக்கும் கூட்டத்தின் கொடுமைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே! உனது அருளால் (உன்னை) மறுக்கும் கூட்டத்திலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக! (10:85,86)


            

رَبِّ إِنِّيْ أَعُوْذُ بِكَ أَنْ أَسْأَلَكَ مَا لَيْسَ لِيْ بِهِ عِلْمٌ وَإِلاَّ تَغْفِرْ لِيْ وَتَرْحَمْنِيْ أَكُنْ مِنَ الْخَاسِرِيْن 

10. என் இறைவனே! எனக்கு எதைப் பற்றி அறிவில்லையோ அதை உன்னிடத்திலே கேட்பதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன். நீ என்னை மன்னித்து எனக்கு அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோரில் நான் ஆகிவிடுவேன்.
 (11:47)
              رَبِّ اجْعَلْنِيْ مُقِيْمَ الصَّلاَةِ وَمِنْ ذُرِّيَّتِيْ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ

11. என் இறைவனே! என்னையும், என்னுடைய சந்ததிகளையும் தொழுகையை நிலை நிறுத்துவோராக ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக! (14:40)


              

رَبَّنَا اغْفِرْ لِيْ وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِيْنَ يَوْمَ يَقُوْمُ الْحِسَابُ

 12. எங்கள் இறைவனே! என்னையும், என் பெற்றோர்களையும், நம்பிக்கைக் கொண்டோரையும் விசாரணை நடைபெறும்(மறுமை)நாளில் மன்னிப்பாயாக!  (14:41)

                                       

رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا

13.  எங்கள் இறைவனே! நீ உன் அருளை எங்களுக்கு வழங்குவாயாக! எங்கள் பணியை எங்களுக்கு சீராக்கித் தருவாயாக! (18:10)
              

رَبِّ زِدْنِيْ عِلْمًا

14. என் இறைவா! கல்வியறிவை எனக்கு அதிகப்படுத்துவாயாக! (20:114)
              

رَبِّ لاَ تَذَرْنِيْ فَرْدًا وَأَنْتَ خَيْرُ الْوَارِثِيْنَ

 15. என் இறைவனே! நீ என்னை (சந்ததியில்லாமல்) தனியாளாக விட்டுவிடாதே! நீயே வாரிசுரிமை கொள்வோரில் மிக்க மேலானவன்(21:89)          
                         

رَبِّ أَعُوْذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِيْنِ

16. என் இறைவனே! ஷைத்தானின் தூண்டுதல்களை விட்டும் உன்னிடத்தில் நான் பாதுகாவல் தேடுகிறேன்(23:97). 
                         

رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِيْنَ

17. எங்கள் இறைவனே! நாங்கள் (உன் மீது) நம்பிக்கைக் கொண்டோம். எங்கள் குற்றங்களை மன்னித்து அருள்புரிவாயாக! கருணையாளர்களிலெல்லாம் நீயே மிகச் சிறந்தவன்(23:109).                                         


   

رَبِّ اغْفِرْ وَارْحَمْ وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِيْنَ

18. என் இறைவனே! மன்னித்து அருள்புரிவாயாக! அருள்புரிவோரில் மிக்க மேலானவன் நீயே!(23:118)                                     


   

رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا

19. எங்கள் இறைவனே! எங்களைவிட்டும் நரகத்தின் வேதனையைத் தடுப்பாயாக! நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும்.(25:65) 
            

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ إِمَامًا

20. எங்கள் இறைவனே! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், எங்கள் சந்ததியரிடமிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்கியருள்வாயாக! (25:74)

                                                                              


 رَبِّ هَبْ لِيْ حُكْمًا وَأَلْحِقْنِيْ بِالصَّالِحِيْنَ وَاجْعَلْ لِيْ لِسَانَ صِدْقٍ فِي الْآخِرِيْنَ 

21. என் இறைவனே! எனக்கு அதிகாரத்தை அளிப்பாயாக. மேலும் நல்லவர்களுடன் என்னைச் சேர்த்து வைப்பாயாக! இன்னும், பின்வரும் மக்களிடம் எனக்கு நற்பெயரை ஏற்படுத்துவாயாக! (26:83,84)
          

وَاجْعَلْنِيْ مِنْ وَرَثَةِ جَنَّةِ النَّعِيْمِ

22. மேலும் இன்பம் நிறைந்த சுவனபதியின் வாரிசுகளில் என்னையும் ஆக்கிவைப்பாயாக! (26:85)
Last edited by Admin on Sun Oct 31, 2010 6:06 pm; edited 1 time in total


"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.
avatar
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 8966
Points Points : 42
வயது வயது : 30
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

Re: திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள்

Post by முஸ்லிம் on Sun Oct 31, 2010 5:27 pm

وَلاَ تُخْزِنِيْ يَوْمَ يُبْعَثُوْنَ

23. இன்னும் மனிதர்கள் உயிர் கொடுத்து எழுப்பப்படும் நாளில் என்னை இழிவு படுத்திவிடாதே! (26:87)                
                                                                                                                                                               

رَبِّ أَوْزِعْنِيْ أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِيْ أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنِيْ بِرَحْمَتِكَ فِيْ عِبَادِكَ الصَّالِحِيْنَ

23. என் இறைவா! என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்கு நான் நன்றி செலுத்தவும், நீ திருப்தியடையக்கூடிய நல்லறங்க‌ள் செய்யவும் எனக்கு உதவி செய்வாயாக! இன்னும் உன் அருளால் உன்னுடைய நல்லடியார்களில் என்னையும் சேர்த்தருள்வாயாக! (27:19)                

  

رَبِّ إِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ فَاغْفِرْ لِيْ
24. என் இறைவா! நிச்சயமாக என‌க்கே நான் அநியாயம் செய்துவிட்டேன்; என‌வே என்னை மன்னிப்பாயாக! (28:16)              

  

رَبِّ هَبْ لِيْ مِنَ الصَّالِحِيْنَ

25. என் இறைவனே! நல்லவர்களிலிருந்து எனக்கு வாரிசை தந்தருள்வாயாக.  (37:100)
               


رَبِّ أَوْزِعْنِيْ أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِيْ أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَصْلِحْ لِيْ فِيْ ذُرِّيَّتِيْ إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّيْ مِنَ الْمُسْلِمِيْنَ

26. என் இறைவனே! எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய நல்லவற்றை நான் செய்யவும் எனக்கு வாய்ப்பளிப்பாயாக! எனக்காக‌ என்னுடைய சந்ததிகளை சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன். இன்னும் நிச்சயமாக நான் முஸ்லிம்களில் ஒருவனாக இருக்கின்றேன். (46:15)
               


رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِيْنَ سَبَقُوْنَا بِالْإِيْمَانِ وَلاَ تَجْعَلْ فِيْ قُلُوْبِنَا غِلاًّ لِلَّذِيْنَ آمَنُوْا رَبَّنَا إِنَّكَ رَءُوْفٌ رَحِيْمٌ

27. எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்திவிட்ட எங்களுடைய சகோதரர்களையும் மன்னித்தருள்வாயாக! நம்பிக்கைக் கொண்டவர்கள் மீது எங்களுடைய உள்ள‌ங்களில் வெறுப்பை ஏற்படுத்திவிடாதே! எங்கள் இறைவா! நிச்சயமாக நீயே மிக்க இரக்கமுடையவன்; நிகரற்ற அன்புடையோன். (59:10)                                                                                                

رَبَّنَا لاَ تَجْعَلْنَا فِتْنَةً لِلَّذِيْنَ كَفَرُوْا وَاغْفِرْ لَنَا رَبَّنَا إِنَّكَ أَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ

28. எங்கள் இறைவனே! உன்னை மறுப்போருக்கு சோதனையாக எங்களை ஆக்கிவிடாதே!  எங்களுக்கு மன்னிப்பு அருள்வாயாக, எங்கள் இறைவா! நிச்சயமாக நீ (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன். (60:5)
              


رَبَّنَا أَتْمِمْ لَنَا نُوْرَنَا وَاغْفِرْ لَنَا إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ

29. எங்கள் இறைவனே! எங்களுடைய ஒளியை எங்களுக்கு முழுமையாக்கி வைப்பாயாக! எங்களை மன்னிப்பாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன். (66:8)
               

رَبِّ اغْفِرْ لِيْ وَلِوَالِدَيَّ وَلِمَنْ دَخَلَ بَيْتِيَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنَاتِ وَلاَ تَزِدِ الظَّالِمِيْنَ إِلاَّ تَبَارًا

30. என் இறைவா! எனக்கும், என் பெற்றோருக்கும், என் வீட்டில் நம்பிக்கையாளர்களாக நுழைந்தவர்களுக்கும், நம்பிக்கைக் கொண்ட‌ ஆண்களுக்கும், நம்பிக்கைக் கொண்ட‌ பெண்களுக்கும் மன்னிப்பளிப்பாயாக! மேலும், இந்த அநீதி இழைத்தோருக்கு அழிவைத் தவிர வேறு எதையும் அதிகமாக்காதே! (71:28)
              நன்றி : http://payanikkumpaathai.blogspot.com/


"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.
avatar
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 8966
Points Points : 42
வயது வயது : 30
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum