பாலஸ்தீனம் என்றொரு நாடு கிடையாது - அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்

Go down

பாலஸ்தீனம் என்றொரு நாடு கிடையாது - அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்

Post by முஸ்லிம் on Sun Dec 11, 2011 5:45 pm

பாலஸ்தீன மக்கள் இஸ்ரேலை அழிப்பதற்காக உருவாக்கப்பட்டவர்கள் என்று நியுட்
கிங்ரிச் தெரிவித்துள்ள கருத்து பலத்த கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. இவர்
2012 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் ஒபாமாவை
எதிர்த்து குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட உள்ளவர் என்பது
குறிப்பிடத்தக்கது.

பாலஸ்தீனம் என்றொரு தனி நாடே இருந்ததில்லை என்றும் உதுமானியப்
பேரரசின் ஒரு பகுதியாகத்தான் 20 ஆம் நூற்றாண்டின்ஆரம்பம் வரை அது இருந்து
வந்துள்ளது என கிங்ரிச் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தில் உள்ள அரபுக்கள்
பல இடங்களுக்கு செல்ல வசதியிருந்தும் அரசியல் காரணங்களினால் 1940 முதல்
இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈடுபட்டிருப்பது கவலையளிப்பதாக உள்ளது என்றும்
அவர் கூறியுள்ளார். வெள்ளியன்று ஒரு யூத தொலைக்காட்சி நிறுவனத்துக்கு
அளித்துள்ள பேட்டியில் கிங்ரிச் இவ்வாறு உண்மைக்கு புறம்பான கருத்துக்களை
தெரிவித்திருப்பதற்கு பாலஸ்தீன மக்கள் கடும் கண்டனங்களைத்
தெரிவித்துள்ளனர்.

யூதர்களின் ஆதரவைப் பெறுபவர்கள்தான் அமெரிக்க
அதிபராக வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதால் கிங்ரிச் இவ்வாறு இஸ்ரேலுக்கு
ஆதரவான கருத்துக்களை கூறி வருகிறார். பாலஸ்தீன அரசும் ஹமாஸ் இயக்கமும்
இஸ்ரேலை அழிப்பதற்கு தீவிர ஆசைக் கொண்டிருப்பதாகவும் கிங்ரிச்
தெரிவித்துள்ளார்.

இனவாதக் கருத்துக்களை தெரிவித்துள்ள கிங்ரிச்
அதிபர் தேர்தலில் நிற்பதற்கு தகுதியற்றவர் என்று ஹனன் அஷ்ரவி என்ற
பாலஸ்தீனத்தைச் சார்ந்த அரசு உயர் அதிகாரி கண்டனம் தெரிவித்துள்ளார். 1969
ஆம் ஆண்டு இஸ்ரேலை ஆண்ட கோல்ட்மேயரைப் போன்று கிங்ரிச் கருத்து
தெரிவித்துள்ளதாக அஷ்ரவி தெரிவித்துள்ளார். கிங்ரிச்சின் கருத்துக்கு
பதிலளித்துள்ள ஸயீப் எரிகாத் , இதைவிட குறைவாக யாரும் சிந்திக்க முடியாது
என்று கூறியுள்ளார். இவர் பாலஸ்தீன ஜனாதிபதி அரசியல் ஆலோசகர்
குறிப்பிட்டுள்ளார். இதுவரை வழிபாட்டுஉரிமைகள் வாழ்வாதாரங்களை மறுத்து
வந்தவர்கள் தற்போதுதங்களின் இருப்பையே மறுதலிப்பதையே இது காட்டுகிறது என
எரிகாத் குறிப்பிட்டுள்ளார்.

1948ல் நடைபெற்ற போருக்கு பிறகு
ஏறத்தாழ 11 மில்லியன் பாலஸ்தீன மக்கள் அகதிகளாக உலகெங்கும் வாழ்ந்து
வருகின்றனர். 4 மில்லியன் பாலஸ்தீனர்கள் பாலஸ்தீனத்தில் உள்ள காஸா மற்றும்
மேற்குக்கரை என்ற இரு இடங்களில் வசித்து வருகின்றனர்.
"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.
avatar
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 8818
Points Points : 42
வயது வயது : 29
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum