ருமேனியாவிலும் சி.ஐ.ஏவுக்கு ரகசிய சிறைச்சாலை

View previous topic View next topic Go down

ருமேனியாவிலும் சி.ஐ.ஏவுக்கு ரகசிய சிறைச்சாலை

Post by முஸ்லிம் on Mon Dec 12, 2011 11:41 pmபுகாரஸ்ட்:ருமேனியா
நாட்டில் சி.ஐ.ஏ இயக்கி வரும் ரகசிய சிறைச்சாலை குறித்த தகவல்
வெளியாகியுள்ளது. அசோசியேட் ப்ரஸ் செய்தியாளர் மாட் அபுஸா ருமேனியா
தலைநகரில் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ நடத்தும் ரகசிய சிறைச்சாலை
குறித்த செய்தியை வெளியிட்டுள்ளார்.

ப்ரைட் லைட் என பெயரிடப்பட்டுள்ள ரகசிய
சிறையில் வைத்து ஆப்கானிஸ்தானில் இருந்து பிடிக்கப்பட்ட இஸ்லாமிய போராளிகளை
கடுமையான சித்திரவதை செய்துள்ளனர்.

தாய்லாந்து, லித்வேனியா, போலந்து, எகிப்து
ஆகிய நாடுகளில் உள்ள சி.ஐ.ஏவின் ரகசிய சிறை நெட்வொர்க்கின் ஒரு பகுதிதான்
ருமேனியாவில் உள்ள ப்ரைட்லைட் ரகசிய சிறை என கருதப்படுகிறது.

2003-ஆம் ஆண்டு சி.ஐ.ஏ ருமேனியாவில்
இச்சிறைச்சாலையை துவக்கியுள்ளது. ரகசிய ஆவணங்களை பாதுகாக்கும் ஒரு ருமேனிய
ஏஜன்சியின் கட்டுப்பாட்டில் உள்ள கட்டிடத்தின் தளப்பகுதியும், முதல்
மாடியும் சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. சிறைச்சாலை ஆறு அறைகளை கொண்டது.
கிப்லாவை காண்பிக்கும் சின்னங்கள் சிறையில் இருந்ததால் இங்கு பெரும்பாலும்
முஸ்லிம்கள்தாம் அடைக்கப்பட்டிருந்தார்கள் என கருதப்படுகிறது.

சிறைக் கைதிகளை தூங்கவிடாமல் தடுப்பது,
தலையை தண்ணீரில் ஆழ்த்துவது ஆகியன இச்சிறையில் உள்ள முக்கிய
சித்திரவதைகளாகும். அல்காயிதா தலைவர்கள் என அமெரிக்காவால் பரப்புரை
செய்யப்படும் காலித் ஷேக் முஹம்மது, ரம்ஸி பினல்ஸிப், அப்துல் நஸீரி,
முஹம்மது அல் அத்தாஸ், அபூ ஃபராஜ் அல்லிப்பி ஆகியோர் ருமேனிய ரகசிய
சிறையில் அடைக்கப்பட்டார்கள் என கூறப்படுகிறது. இவர்கள் தற்பொழுது
குவாண்டனாமோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

லிபியாவிடம் ஒப்படைக்கப்பட்ட அல் லிப்பியை
கத்தாஃபியின் ஏஜண்டுகள் கொலைச்செய்துவிட்டு பின்னர் தற்கொலை என பரப்பினர்.
ருமேனியாவிற்கு சி.ஐ.ஏ விமானம் அனுப்புவது குறித்து ஏற்கனவே மனித உரிமை
அமைப்புகள் தங்களது சந்தேகத்தை வெளியிட்டன. ருமேனிய அதிபர் சி.ஐ.ஏவின்
ரகசிய சிறை குறித்து மறுத்துள்ளார்.
"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.
avatar
முஸ்லிம்
FOUNDER
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
மதிப்பெண் மதிப்பெண் : 8551
மதிப்பீடு மதிப்பீடு : 42
வயது வயது : 29
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum