தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

சமூக வலைத்தளங்கள் குறித்த கபில் சிபலின் நடவடிக்கைக்கு பிரஸ் கவுன்சில் தலைவர் கட்ஜு ஆதரவு

Go down

சமூக வலைத்தளங்கள் குறித்த கபில் சிபலின் நடவடிக்கைக்கு பிரஸ் கவுன்சில் தலைவர் கட்ஜு ஆதரவு  Empty சமூக வலைத்தளங்கள் குறித்த கபில் சிபலின் நடவடிக்கைக்கு பிரஸ் கவுன்சில் தலைவர் கட்ஜு ஆதரவு

Post by முஸ்லிம் Tue Dec 13, 2011 5:16 pm

புதுடெல்லி:மதத் தலைவர்கள் குறித்தோ
அல்லது அரசியல்வாதிகள் குறித்தோ சமூக வலைத்தளங்களில் தீய விமர்சனங்கள்
வெளியிட்டால் அதனை அந்த சமூக வலைத்தளங்களை நடத்தும் நிறுவனங்கள் தடை செய்ய
வேண்டும் மேலும் இதுபோன்றவை மக்களுக்குள் கலவரத்தை ஏற்படுத்தும் என்பதால்
அதனை முழுமையாக கண்காணித்து தடுக்க வேண்டும் என்றும் அது தொடர்பான சட்டம்
கொண்டு வர வேண்டும் எனும் மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் கபில்
சிபலின் கருத்துக்கு முன்னால் உச்சநீதிமன்ற நீதிபதியும் தற்போதைய பிரஸ்
கவுன்சிலின் தலைவருமான மார்கண்டேய கட்ஜு ஆதரவு தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்ட சில
மதத்தினை அவமத்திக்கும் விதமாக கேலிச் சித்திரங்களை வெளியிடுவதும் ஆபாச
படங்களை வெளியிடுவதும் சமீபத்தில் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற விசயங்கள்
இருபிரிவினருக்கு இடையில் வெறுப்பையும் மத தொடர்பான பிரச்சனைகளையும்
உருவாக்கும் என்றும் கட்ஜு கூறியுள்ளார்.

மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர்
கபில் சிபலின் கருத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தைத் தொடர்ந்து கட்ஜு
கபில் சிபலுக்கு தனது ஆதரவை வெளிபடுத்தியுள்ளார்.

மேலும் கட்ஜு கூறியுள்ளதாவது; ‘சிபலின்
கருத்துக்கு எதிர்ப்பு வந்ததைத் தொடர்ந்து தாம் அவ்வாறு சமூக
வலைத்தளங்களில் வெளியிடப்படும் ஆவணங்கள் படங்கள் ஆகியவையை தீவிரமான
பரிசீலித்தாகவும் அவை கடுமையாக வெறுப்பூட்டக் கூடியதாக இருந்ததாகவும்’
தெரிவித்துள்ளார். மேலும் வெளியிடப்பட்டுள்ள படங்கள் ஒரு குறிப்பிட்ட
சமூகத்தினரின் மத உணர்வுகளை புண்படுத்துவதுடன் அல்லாமல்
அதிர்ச்சியூட்டுவதாகவும் கலவரத்தை தூண்டும் வகையிலும் இருந்ததாகவும்
தெரிவித்தார். மேலும் இது போன்ற விசயங்கள் நாட்டில் அமைதியை குலைக்கவும்
மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனைக்கு வழிவகை செய்யும் விதமாக இருக்கும்
என்றும் கூறியுள்ளார்.

கட்ஜு மேலும் கூறியதாவது; ‘இந்திய
குற்றவியல் சட்டம் 153A வின் படி இருதரப்பினருக்கு இடையில் வெறுப்பை
உண்டாக்குதல், சமூக அமைதியை குலைக்க முயற்சி செய்தல், இரு மதத்தினருக்கு
இடையில் வெறுப்பை உருவாக்குதல் மற்றும் பொதுமக்களின் அமைதியை குலைத்தல்
ஆகிய பிரிவுகளில் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்’ என்றும்
கூறியுள்ளார். எனவே இதுபோன்ற சமூகங்களிடையே வெறுப்பை உண்டாக்கி அமைதியை
குலைக்கும் தீய விமர்சனங்களை சமூக வலைத்தளங்கள் உடனடியாக நீக்க வேண்டியது
அவசியம் என்றும் கூறியுள்ளார்.


சமூக வலைத்தளங்கள் குறித்த கபில் சிபலின் நடவடிக்கைக்கு பிரஸ் கவுன்சில் தலைவர் கட்ஜு ஆதரவு  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10920
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» குண்டு வெடிப்புக்களுடன் முஸ்லிம்களை மட்டும் தொடர்பு படுத்துவது பிரித்தாளும் சூழ்ச்சி - பிரஸ் கவுன்சில் தலைவர் பேச்சு!
» தொலைக்காட்சி சேனல்களையும் ப்ரஸ் கவுன்சில் வரம்பிற்குள் கொண்டுவரவேண்டும்-பிரதமரிடம் மார்க்கண்டேய கட்ஜு கோரிக்கை
» ஹேமந்த் கர்கரே குறித்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் பேச்சுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
» ஊடகங்களுக்கு கட்டுப்பாடு: கட்ஜுவின் கருத்திற்கு துணை குடியரசு தலைவர் ஆதரவு
» பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் சமூக நீதி மாநாடு: அரசியல், சமூக பிரமுகர்கள் பங்கேற்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum