யுனெஸ்கோ தலைமையகத்தில் இனி ஃபலஸ்தீன் கொடி பறக்கும்

View previous topic View next topic Go down

யுனெஸ்கோ தலைமையகத்தில் இனி ஃபலஸ்தீன் கொடி பறக்கும்

Post by முஸ்லிம் on Wed Dec 14, 2011 6:12 pm



ஐ.நா:ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி-விஞ்ஞான-கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவின் தலைமையகத்தில் இனி ஃபலஸ்தீன் கொடியும் பறக்கும்.

பாரிஸில் யுனெஸ்கோ தலைமையகத்தில் நடந்த
கொடி ஏற்று நிகழ்ச்சியில் ஃபலஸ்தீன் ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸ், யுனெஸ்கோ
இயக்குநர் ஜெனரல் இரினா பொகோவா ஆகியோர் பங்கேற்றனர்.

ஃபலஸ்தீன் தேசிய கீதத்தின் பின்னணியில்
பச்சை, கறுப்பு, வெள்ளை ஆகிய மூவர்ண கொடி ஏற்றப்பட்டது. ஃபலஸ்தீனுக்கு
யுனெஸ்கோவில் பூரண உறுப்பினர் பதவி கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி
வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து யுனெஸ்கோவின் தலைமையகத்தில் ஃபலஸ்தீன்
கொடி ஏற்றப்பட்டுள்ளது.

ஃபலஸ்தீனின் பூரண உறுப்பினர் பதவியை
அங்கீகரித்ததன் மூலம் ஃபலஸ்தீன் நாடு என்ற அங்கீகாரத்தை வழங்கிய முதல் ஐ.நா
அமைப்பாக யுனெஸ்கோ மாறியது.




"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.
avatar
முஸ்லிம்
FOUNDER
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
மதிப்பெண் மதிப்பெண் : 8551
மதிப்பீடு மதிப்பீடு : 42
வயது வயது : 29
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum