தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

லிபிய மக்கள் புரட்சியின் பலனை அடைய ஒத்துழைக்க வேண்டும் – டாக்டர்.யூசுஃப் அல் கர்தாவி

Go down

லிபிய மக்கள் புரட்சியின் பலனை அடைய ஒத்துழைக்க வேண்டும் – டாக்டர்.யூசுஃப் அல் கர்தாவி  Empty லிபிய மக்கள் புரட்சியின் பலனை அடைய ஒத்துழைக்க வேண்டும் – டாக்டர்.யூசுஃப் அல் கர்தாவி

Post by முஸ்லிம் Thu Dec 15, 2011 7:09 pm

திரிபோலி:புரட்சிக்கு பிந்தைய லிபியாவில்
கலந்தாலோசித்தல், ஜனநாயகம், சுதந்திரம் ஆகியவற்றின் அடிப்படையிலான அரசியல்
சட்டம் அமுலுக்கு வர லிபியாவின் குடிமக்கள் முயற்சிக்க வேண்டும் என சர்வதேச
இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் சபை தலைவரான ஷேக் டாக்டர் யூசுஃப் அல்
கர்தாவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

லிபியாவின் புரட்சி கவுன்சில் மற்றும்
மார்க்க அறிஞர்களின் அழைப்பை ஏற்று லிபியாவிற்கு சென்ற ஷேக் கர்தாவி
பெங்காசியில் அமைந்துள்ள மஸ்ஜித் பாப் அஜ்யாஸில் நடத்திய ஜும்ஆ
பேருரையிலும், லிபர்டி அரங்கில் நடந்த பொதுக் கூட்டத்திலும் கலந்துகொண்டு
உரையாற்றினார்.

மேலும் அவர் கூறியதாவது: சிவிலியன்கள்
ஆயுதங்களை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். இஸ்லாம் கற்று தந்துள்ள
முறையில் நம்பிக்கையை வெளிப்படுத்த வேண்டும். கத்தாஃபியின் சர்வாதிகார
ஆட்சி முடிவுக்கு வந்ததன் பலன் தேசத்திற்கு கிடைக்க வேண்டுமெனில்
விட்டுக்கொடுத்தல், மன்னிப்பு வழங்குதல் கலாச்சாரத்தை கடைப்பிடிக்க
அனைவரும் தயாராக வேண்டும்.

பொதுத்துறையில் பெண்களுக்கு அதிக வாய்ப்பை
அளிக்க வேண்டும். புரட்சியின் காலக்கட்டத்தில் தியாகத்தின் முன்மாதிரியாக
திகழ்ந்த மக்களை வாழ்த்துகிறேன். இவ்வாறு கர்தாவி உரையில் குறிப்பிட்டார்.

கர்தாவியின் லிபியா சுற்றுப்பயணம் அரசியல்
நோக்கமுடையது எனவும், இஃவானுல் முஸ்லிமீன் இயக்கத்திற்கு பலம்
சேர்ப்பதற்கு என்றும் பரப்புரை செய்வது தவறு என மார்க்க அறிஞர்கள் குழுவின்
தலைவர் கைஸ் அல் ஃபாகிரியும் பிரச்சார குழுவின் தலைவர் வனீஸ் மப்ரூக் அல்
ஃபாஸியும் கூறியுள்ளனர்.


லிபிய மக்கள் புரட்சியின் பலனை அடைய ஒத்துழைக்க வேண்டும் – டாக்டர்.யூசுஃப் அல் கர்தாவி  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10898
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» இஸ்லாமியவாதிகளின் வெற்றி அரபு வசந்தத்தின் தொடர்ச்சி – ஷேக் யூசுஃப் அல் கர்தாவி
» பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞர் ஷேக் யூசுஃப் அல் கர்தாவி மருத்துவமனையில் அனுமதி
» நேட்டோ தாக்குதலுக்கிடையேயும் தொலைக்காட்சியில் தோன்றிய லிபிய அதிபர்!
» நைஜீரியா:சர்ச்சுகள் மீது நடந்த தாக்குதல்களுக்கு டாக்டர்.யூசுஃப் அல் கர்ழாவி கண்டனம்
» டாக்டர் கலீல் ஜிஸ்தியை விடுதலை செய்ய வேண்டும்-மகேஷ் பட்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum