கடைசி சிறைக் கைதியை அமெரிக்க ராணுவம் ஈராக்கிடம் ஒப்படைத்தது

Go down

கடைசி சிறைக் கைதியை அமெரிக்க ராணுவம் ஈராக்கிடம் ஒப்படைத்தது

Post by முஸ்லிம் on Sun Dec 18, 2011 5:49 pm

பாக்தாத்:அமெரிக்க ராணுவத்தின் காவலில்
இருந்த கடைசி சிறைக் கைதியும் ஈராக் அரசிடம் ஒப்படைக்கப்பட்டார். லெபனானில்
ஹிஸ்புல்லாஹ் உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் அலி மூஸா தக்தகி
என்பவர்தாம் இறுதியாக ஈராக் அரசிடம் ஒப்படைக்கப்பட்டார்.

2007-ஆம் ஆண்டு கர்பலாவில் ஐந்து அமெரிக்க
ராணுவத்தினரை கடத்திச் சென்று கொலைச்செய்த வழக்கில் அலி மூஸா கைது
செய்யப்பட்டார். கைதி ஒப்படைக்கப்பட்டதை குறித்து பதிலளிக்க மறுத்த
ஈராக்கில் அமெரிக்க ராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் புக்கன்னான்
இக்கேள்வியை வாஷிங்டனில் இருப்பவர்களிடம் கேளுங்கள் என கூறினார்.

அதேவேளையில் அலி மூஸாவை அமெரிக்காவிடம்
ஒப்படைப்பார்கள் என ஒபாமா அரசு நம்புவதாக வெள்ளைமாளிகை செயலாளர் ஜெ.கார்ணி
தெரிவித்துள்ளார். ராணுவ கமிஷன் முன்பாக அலி மூஸா விசாரணை செய்யப்படுவார்.
இது தொடர்பாக ஈராக் தலைமையுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது. அலி மூஸா மீதான
குற்றத்திற்கு அவரை விசாரணை செய்யலாம் என்ற உறுதி கிடைத்துள்ளதாக கார்ணி
தெரிவித்தார்.

ஒபாமா அரசு அமெரிக்க மக்களை
ஏமாற்றியுள்ளது என குடியரசு கட்சியின் தலைவர் ஜான் மெக்கய்ன் குற்றம்
சாட்டியுள்ளார். அதேவேளையில் அலி மூஸா, அமெரிக்க ராணுவத்தினரை கொலைச்
செய்தார் என்பதற்கு தெளிவான ஆதாரம் இல்லை என ஈராக் நீதிமன்ற அதிகாரி
தெரிவித்துள்ளார். ஆதாரம் இல்லை என்பது நீதிமன்றத்தில் நிரூபணமானால் அலி
மூஸாவை விடுதலைச் செய்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.




"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.
avatar
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 8792
Points Points : 42
வயது வயது : 29
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum