தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அன்னாவுக்கு சென்னையில் கறுப்பு கொடி : ஆதரவாளர்கள் அதிர்ச்சி

Go down

அன்னாவுக்கு சென்னையில் கறுப்பு கொடி : ஆதரவாளர்கள் அதிர்ச்சி  Empty அன்னாவுக்கு சென்னையில் கறுப்பு கொடி : ஆதரவாளர்கள் அதிர்ச்சி

Post by முஸ்லிம் Sun Dec 18, 2011 5:58 pm

சென்னை: ஊழலுக்கு எதிராக நாடு தழுவிய
போராட்டங்களை நடத்தியதின் மூலம் பிரபலமான அன்னா ஹசாரே தற்பொழுது நாடு
முழுவதும் மாநாடுகளை நடத்தி ஆதரவு திரட்டி வருகிறார். ஊழலுக்கு எதிரான
இயக்கம் ஆரம்பித்த பின் முதல் முதலாக சென்னை வந்த அன்னாவுக்கு கறுப்பு கொடி
காட்டப்பட்டது.. இதனால் அன்னா ஆதரவாளர்கள் பேரதிர்ச்சியடைந்தனர்.



தனது சுற்றுபயணத்தில் ஒரு பகுதியாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இன்று
சென்னை வந்திறங்கினார். அப்போது அவருக்கு பெரியார் தி.க., 17 இயக்கம்,
மக்கள் இயக்கம் உள்ளிட்டவை எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டின.
நாடெங்கும் ஆதரவு கிடைத்து வரும் வேளையில் சென்னையில் கருப்புக் கொடி
காட்டப்பட்டது அவரது ஆதரவாளர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.


அன்னாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெரியார் தி.க.வினர் அன்னா ஜனநாயகத்திற்கு
எதிராக, சர்வாதிகாரி போல செயல்படும் ஒரு பயங்கரவாதி என்று குற்றம்
சாட்டினர். மேலும் இந்தி வெறியரான ஜனநாயகத்திற்கு எதிராக, சர்வாதிகாரி போல
செயல்படும் அன்னாவும் ஒரு பயங்கரவாதி தான். இந்தி வெறியரான அன்னா இட
ஒதுக்கீட்டுக்கு எதிரானவர் என்றும் அவர் இந்தியில் மட்டுமே பேசுகிறார்
என்றும் பெரியார் தி.க.வினர் குற்றம் சாட்டினர்.

பலத்த போலீஸ்
பாதுகாப்புடன் விமான நிலையத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட அன்னாவுடன்
கிரண் பேடியும் உடன் வந்திருந்தார். இன்று மாலை ஊழலுக்கு எதிராக ஜன்
லோக்பால் கொண்டு வருவதை ஆதரித்து பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் அன்னா
பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




அன்னாவுக்கு சென்னையில் கறுப்பு கொடி : ஆதரவாளர்கள் அதிர்ச்சி  Logo
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10920
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» யோகாவின் பெயரால் செக்ஸையும் நிர்வாணத்தையும் பரப்பும் ஐரோப்பிய கும்பல் சென்னையில் – அதிர்ச்சி விபரங்கள்
» பாக்.கொடி ஏற்றம்:ஸ்ரீராமசேனாவை தடைச்செய்ய எதிர்கட்சிகள் கோரிக்கை
»  சென்னையில் கடத்தப்பட்டதொழிலதிபர் மகன் மீட்கப்பட்டார்!
» யுனெஸ்கோ தலைமையகத்தில் இனி ஃபலஸ்தீன் கொடி பறக்கும்
» கர்நாடகா: பாக். கொடி ஏற்றிய 6 பேர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum