கிரிக்கெட் வீரர்கள்,சினிமா நடிகர்களுக்கு பாரத ரத்னா: உயர் விருதை அவமதிக்கும் செயல் – கட்ஜு கண்டனம்

Go down

கிரிக்கெட் வீரர்கள்,சினிமா நடிகர்களுக்கு பாரத ரத்னா: உயர் விருதை அவமதிக்கும் செயல் – கட்ஜு கண்டனம்

Post by முஸ்லிம் on Thu Dec 22, 2011 6:08 pm

புதுடெல்லி:கிரிக்கெட் வீரர்களுக்கும்,
திரைப்பட நடிகர்களுக்கும் பாரத ரத்னா விருது வழங்குவது, நாட்டின் உயர்
விருதை அவமதிக்கும் செயல் என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும், ப்ரஸ்
கவுன்சிலின் சேர்மனுமான மார்க்கண்டேய கட்ஜு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து அவர் கூறியதாவது: ‘எவ்வித
சமூக ஆர்வமும் இல்லாத கிரிக்கெட் வீரர்களையும், திரைப்பட நடிகர்களையும்
ஆராதிப்பவர்கள் உண்மையான கதாநாயகர்களை அவதிக்கின்றனர். தேசத்தை முன்னேற்ற
பாதையில் கொண்டு செல்பவர்கள்தாம் நமக்கு தேவை. அத்தகைய நபர்களுக்குத்தான்
விருது வழங்கவேண்டும்.

கிரிக்கெட் வீரர்களுக்கும், திரைப்பட நடிகர்களுக்கும் விருதை வழங்கி பாரதரத்னாவின் மகத்துவத்தை கெடுத்துவிடாதீர்கள்.’ இவ்வாறு
கட்ஜு கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின்
டெண்டுல்கருக்கும், ஹாக்கி வீரர் தியான் சந்திற்கும் பாரதரத்னா விருது
வழங்கவேண்டும் என பலதரப்பிலும் கோரிக்கை எழுந்ததையொட்டி கட்ஜு தனது கருத்தை
வெளியிட்டுள்ளார்.




"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.
avatar
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 8816
Points Points : 42
வயது வயது : 29
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum