ஒ.பி.சி இடஒதுக்கீடு:அரசு தீர்மானம் குறித்து அரசியல் கட்சிகளிடையே முரண்பாடு

Go down

ஒ.பி.சி இடஒதுக்கீடு:அரசு தீர்மானம் குறித்து அரசியல் கட்சிகளிடையே முரண்பாடு

Post by முஸ்லிம் on Sat Dec 24, 2011 6:19 pm



புதுடெல்லி:அரசு
வேலை வாய்ப்புகளில் தற்போதைய 27 சதவீத ஒ.பி.சி(இதர பிற்படுத்தப்பட்ட
பிரிவினர்) ஒதுக்கீட்டில்4.5 சதவீதம் சிறுபான்மையின மக்களுக்கு உள்
ஒதுக்கீடு செய்வதாக மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதற்கு எதிராக பல்வேறு
அரசியல் கட்சிகள் கருத்துக்களை வெளியிட்டுள்ளன.

பா.ஜ.கவும்,ராஷ்ட்ரீய ஜனதா தளமும்
சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு வழங்கியுள்ளதற்கு கடும் எதிர்ப்பை
தெரிவித்துள்ளன. மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சியும், முலாயம்சிங்கின்
சமாஜ்வாடி கட்சியும் காங்கிரஸ் அறிவித்துள்ள ஒ.பி.சி உள் ஒதுக்கீடு
குறித்து கருத்து தெரிவிக்கையில், ’இது வெறும் பெயரளவில் மட்டுமே ஆகும்.
இடஒதுக்கீட்டின் சதவீதத்தை உயர்த்த வேண்டும்’ என கூறியுள்ளன. அதேவேளையில்
ஆளுங்கட்சியான காங்கிரஸ் அரசு நடவடிக்கையை வரவேற்றுள்ளது. ’அமைச்சரவையின்
நடவடிக்கை பாராட்டத்தக்கது’ என அக்கட்சி கருத்து கூறியுள்ளது.

பா.ஜ.கவின் தலைவர்களில் ஒருவரான
அனந்தகுமார் கூறுகையில், ’அரசு வேலைவாய்ப்பிலும், உயர் கல்வியிலும்
இடஒதுக்கீட்டிற்குள் உள் ஒதுக்கீடு செய்வது தவறானது. கட்சி இதனை
எதிர்க்கும். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சமூகநீதி கிடைக்கவேண்டும்.
அவர்கள் சக்திப்பட வேண்டும் என்பதுதான் பா.ஜ.கவின் நிலைப்பாடு’ என அவர்
தெரிவித்துள்ளார்.

சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங்
கூறுகையில், ’அரசின் தீர்மானம் ஏமாற்று மோசடி ஆகும். சிறுபான்மையினருக்கு
குறைந்த 18 சதவீதம் இட ஒதுக்கீடாவது வழங்க வேண்டும். எனது பரிந்துரை
அரசியல் ஆதாயத்திற்காக அல்ல’ என அவர் கூறியுள்ளார்.

அதேவேளையில்,லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் மத்திய அரசின் முடிவை வரவேற்றுள்ளார்.




"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.
avatar
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 8823
Points Points : 42
வயது வயது : 29
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum