ஷரீஅத் சட்டத்தை நடைமுறைப்படுத்த கோரி மாலத்தீவில் பேரணி

View previous topic View next topic Go down

ஷரீஅத் சட்டத்தை நடைமுறைப்படுத்த கோரி மாலத்தீவில் பேரணி

Post by முஸ்லிம் on Sun Dec 25, 2011 8:28 pm

மாலி:மாலத்தீவில் இஸ்லாமிய சட்டத்
திட்டங்களை அமுல்படுத்தக் கோரியும், இஸ்லாத்திற்கு எதிரான செயல்களை
முடிவுக்கு கொண்டுவரவும் மாலத்தீவின் தலைநகரான மாலியில் ஆயிரக்கணக்கானோர்
பேரணி நடத்தினர்.

பல்வேறு முஸ்லிம் அமைப்புகளும், முக்கிய எதிர்கட்சியான அதாலத் கட்சியும் இணைந்து இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தன.

இஸ்லாமிய ஷரீஅத் (சட்டத்திட்டங்கள்)
அமைதிக்கு சமமானது என எழுதப்பட்ட அட்டைகளை பேரணியில் கலந்துக்கொண்டவர்கள்
உயர்த்தி பிடித்திருந்தனர்.

இஸ்ரேலுக்கு நேரடியான விமானப்போக்குவரத்தை
நிறுத்தவேண்டும், மதுபானத்திற்கு தடை விதிக்கவேண்டும் என கோரிக்கை
விடுத்த மக்கள், அதிபர் முஹம்மது நஷீத் ஷரீஅத் சட்டங்களுக்கு மதிப்பு
அளிக்கவில்லை என குற்றம் சாட்டினார்கள்.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை
ஈர்ப்பதற்காக அதிபர், மதுபானத்திற்கும், விபச்சாரத்திற்கும் மெளன அனுமதியை
வழங்கியுள்ளதாக அவர்கள் புகார் கூறுகின்றனர்.

இதற்கிடையே ஒரு பிரிவினர் அதிபருக்கு
ஆதரவாகவும் போராட்டம் நடத்தினர்.ஆனால், இஸ்லாத்தின் நடுநிலை நிலைப்பாட்டை
கடைப்பிடிக்க வேண்டும் என அதிபரின் அலுவலக செய்திக்குறிப்பில் கோரிக்கை
விடுக்கப்பட்டது.

நாட்டில் வளர்ச்சி சாத்தியமாக வெளிநாட்டு முதலீடு தேவையாகும் என அச்செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.




"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.
avatar
முஸ்லிம்
FOUNDER
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
மதிப்பெண் மதிப்பெண் : 8549
மதிப்பீடு மதிப்பீடு : 42
வயது வயது : 29
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum