காணாமல் போன இந்திய ஹஜ் பயணிகள்: விசாரணை தொடங்கியது

View previous topic View next topic Go down

காணாமல் போன இந்திய ஹஜ் பயணிகள்: விசாரணை தொடங்கியது

Post by முஸ்லிம் on Mon Dec 26, 2011 5:46 pm

ஜெத்தா:இந்தியாவின் மேற்கு வங்காளத்தை
சேர்ந்த பெரும்பாலான ஊனமுற்றோர்களை உள்ளடக்கிய நூற்றுக்கும் மேற்பட்ட ஹஜ்
யாத்ரிகர்கள், கடந்த மாதம் இறுதியில் தங்கள் ஹஜ்ஜை நிறைவேற்றிய பின்
காணாமல் போனதை தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் இதற்கான வழக்கு
அறிவிப்பை இந்திய அரசாங்கத்திற்கு அனுப்பியுள்ளதாகவும் ஜெத்தாவில் உள்ள ஹஜ்
மற்றும் இந்திய தூதரகத்தின் தலைவர் பி.எஸ்.முபாரக் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்; ‘மேற்கு
வங்காளத்திற்கான கடைசி விமானம் டிசம்பர் 5-ஆம் தேதி அதன் தலைநகர்
கொல்கத்தாவிற்கு புறப்பட்டு சென்றது. ஆனால் காணமால் போன அனைவரும்
முர்ஷிதாபாத் நகரத்தை சேர்ந்தவர்கள் அவர்களுக்கு சவூதி அரேபியாவை குறித்து
ஒன்றும் அறியாதவர்கள். இவ்வருடம் இந்தியாவில் உள்ள 21 மையங்களில், அனைத்து
மாநிலங்களிலிருந்தும் கோட்டாவிற்கு அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப்
பெற்றது, ஆனால் மேற்கு வங்காளத்தில் இருந்து மட்டும் கோட்டவிற்கு கீழே
விண்ணப்பங்கள் இருந்ததால் அனைவரும் அனுமதி பெற்றுள்ளனர். எண்ணற்ற
விண்ணப்பங்கள் உள்ள இடத்தில் அவர்கள் ஊனமுற்றோர்களா? என்று கண்டறிவது
அத்தனை எளிதல்ல’ என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சினையை பாரளுன்மன்றத்திற்கு
கொண்டு வந்த கம்யயூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மொய்னுள் ஹசன் பொறுப்பற்று
பாராமுகமாக செயல்படும் தேசிய மற்றும் மாநில ஹஜ் கமிட்டியின் மீது தகுந்த
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து இந்தியாவின் மத்திய ஹஜ்
கமிட்டியை சேர்ந்த மூத்த தலைவர் ஷாகிர் ஹுசைன், இத்தனை எண்ணிக்கையை உடைய
ஊனமுற்றோர்ளை பயணிக்க அனுமதி அளித்த மேற்கு வங்காளத்தின் மாநில ஹஜ் கமிட்டி
மற்றும் கொல்கத்தாவை சேர்ந்த பாஸ்போர்ட் அலுவலகத்தின் மீதும் குற்றம்
சாட்டியுள்ளார்.

ஆனால் இவர்களை பற்றிய வெளியான தகவலின் படி
இவர்களில் பெரும்பாலானோர் ஊனமுற்றோர்கள் என்றும், அவர்கள் ஹஜ் விசாவில்
பயணிக்க வைத்தது ஹஜ் செய்வதற்காக அல்ல, அவர்கள் ஊனத்தை பயன்படுத்தி பிச்சை
எடுக்க வைக்கும் நோக்குடனே ஹஜ்ஜிற்கு அனுப்பட்டுள்ளதாகவும், இதனால் ஹஜ்
செய்த முடிந்த பின் இவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கபட்டோ அல்லது தலைமறைவாகி இருக்கவோ அதிக வாய்ப்பு இருக்கிறது என்றும்
செய்தி வெளியாகி உள்ளது.

இது போன்ற தேவையற்ற குழப்பத்தை
தவிர்க்கவே, ஹஜ் மற்றும் உம்ரா விசாவின் பேரில் நடத்தப்படும் சுரண்டலை
தடுக்க கடந்த வருடம் சவூதி அமைச்சகம் அனைத்து ஹஜ் மற்றும் உம்ரா விசாவை
வழங்கும் அலுவலகங்களுக்கு மிகவும் வயதான மற்றும் ஊனமுற்றோர்கள் புனித
சடங்கை செய்ய திறனற்றவர்கள் என்ற அறிவிப்பை வழங்கி இருந்தது.

புனித யாத்திரிகையின் பேரில்
ஊனமுற்றோர்களை வைத்து தொழில் செய்யும் சந்தேகத்திற்குரிய நபர்கள் குறித்து
ஒரு ஆய்வு மேற்கொள்ளபட வேண்டும் என்று மத்திய ஹஜ் கமிட்டியின் தலைமை
நிர்வாகி ஷாகிர் ஹுசைன் மற்றும் துணை தலைவர் ஹசன் அஹ்மத் ஆகியோர்
தெரிவித்துள்ளனர்.
"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.
avatar
முஸ்லிம்
FOUNDER
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
மதிப்பெண் மதிப்பெண் : 8579
மதிப்பீடு மதிப்பீடு : 42
வயது வயது : 29
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum