தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஈரானுக்கு எதிரான மசோதாவில் ஒபாமா கையெழுத்து

Go down

ஈரானுக்கு எதிரான மசோதாவில் ஒபாமா கையெழுத்து  Empty ஈரானுக்கு எதிரான மசோதாவில் ஒபாமா கையெழுத்து

Post by முஸ்லிம் Mon Jan 02, 2012 10:01 pm

வாஷிங்டன்:அணுசக்தி விவகாரம் தொடர்பாக
மேற்கத்திய நாடுகளுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என ஈரான் அறிவித்த பிறகு,
ஈரானுக்கு எதிரான புதிய தடைகளுக்கு அனுமதிகோருவது உள்ளிட்ட பரிந்துரைகள்
அடங்கிய 66,200 கோடி டாலருக்கான சர்ச்சைக்குரிய மசோதாவில் அமெரிக்க அதிபர்
பாரக் ஒபாமா கையெழுத்திட்டுள்ளார். ஈரான் மத்திய வங்கியுடன் தொடர்பு
வைத்திருக்கும் வெளிநாட்டு அமெரிக்க நிதிநிறுவனங்களை அமெரிக்க பங்கு
சந்தையிலிருந்து விலக்குவதற்கு வகைச்செய்வதுதான் இத்தடை நடவடிக்கை.

ஈரான் மீதான தடைக்கு அனுமதி கோருவது தவிர
தீவிரவாதத்துடன் தொடர்புடையவர்களை விசாரணை இல்லாமல் சிறையில் அடைக்கவும்,
விசாரணை நடத்தவும் சட்டப்பிரிவு இம்மசோதாவில்
சேர்க்கப்பட்டுள்ளது.தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களை விசாரணை
இல்லாமல் சிறையில் அடைப்பது தொடர்பாக காங்கிரசுக்கும், வெள்ளை மாளிகைக்கும்
இடையே கருத்து வேறுபாடுகள் நிலவும் சூழலில் சிறிய மாற்றங்களுடன்
இம்மசோதா கையெழுத்தாகியுள்ளது.காங்கிரஸின்(அமெரிக்க பாராளுமன்றம்)
மசோதாவிற்கு அனுமதி அளித்திருந்தது.

பயங்கரவாதத்துடன் தொடர்பு
இருப்பதாக சந்தேகிக்கப்படும் அமெரிக்க குடிமகன்களுக்கு விசாரணையை மறுக்கும்
பிரிவு மசோதாவில் நீக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், வெளிநாட்டினர்
உள்பட அமெரிக்காவிற்கு எதிராக தாக்குதல் நடத்தியதற்காக
கைதுச்செய்யப்படுபவர்கள் ராணுவத்தின் கஸ்டடியில் வைத்துக்கொள்ள மசோதா
அனுமதி அளித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு பயங்கரவாதத்திற்கு எதிரான
போருக்காக அளிக்கப்படும் நிதியுதவியான 850 மில்லியன் டாலரில் 510 மில்லியன்
டாலர் நிறுத்திவைக்கப்படுகிறது.
ஈரான் மத்திய வங்கி மற்றும் இதர நிதி நிறுவனங்களுக்கு தடை
விதிப்பது தொடர்பான மசோதாவின் பிரிவு தற்போதைய சூழலில் சர்வதேச எண்ணெய்
சந்தையில் கடுமையான எதிர்விளைவுகளை உருவாக்கும் என கருதப்படுகிறது.

தடை விதிப்பது தொடர்பாக ஒபாமாவிற்கும்,
காங்கிரஸிற்கும் இடையே கருத்துவேறுபாடு நிலவுகிறது.வலுவான தடைவிதிப்பு
ஈரானுக்கு எதிரான சர்வதேச ஒற்றுமையை ஏற்படுத்த திட்டமிடும் ஒபாமாவின்
முயற்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

ஈரான் மத்திய வங்கியுடன் வர்த்தக தொடர்பை
வைத்திருக்கும் ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் மத்திய வங்கிகள் தடையை
அங்கீகரிக்க தயாராகவில்லை என்றால் அமெரிக்கா பின்னடவை
சந்திக்கும்.மசோதாவில் கையெழுத்திட்ட ஒபாமா கூறுகையில்,’இம்மசோதாவில்
கையெழுத்திட்டேன் என்பதற்காக இதன் அனைத்து அம்சங்களையும் ஏற்றுக்கொண்டேன்
என்பது பொருளல்ல’ என தெரிவித்துள்ளார்.

ஆனால், அமெரிக்காவின் நடவடிக்கையை ஈரான்
நிராகரித்துள்ளது.அமெரிக்காவின் நடவடிக்கையை நியாயப்படுத்த முடியாது என
ஈரான் சேம்பர்ஸ் ஆஃப் காமேர்ஸின் தலைவர் முஹம்மது நஹாவன்தியான்
கூறியுள்ளார்.அமெரிக்காவின் தடை விபரீத பலனை உருவாக்கும் என தெரிவித்த அவர்
வர்த்தக-பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஈரான் மாற்றுவழியை ஆராயும் என
கூறினார்.


ஈரானுக்கு எதிரான மசோதாவில் ஒபாமா கையெழுத்து  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10899
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஈரானுக்கு எதிரான தாக்குதலுக்கு ஈராக் மண்ணை அனுமதிக்கமாட்டோம் – நூரி அல் மாலிகி
» இரோம் ஷர்மிளாவின் போரட்டத்திற்கு ஆதரவாக நாடு தழுவிய கையெழுத்து போராட்டம் மற்றும் விழுப்புணர்வு பிரச்சாரம்
» அணுசக்தி:ஈரானுக்கு எதிராக ஐ.ஏ.இ.ஏ தீர்மானம்
» சி.ஐ.ஏ உளவாளியை விடுவிக்க ஈரானுக்கு அமெரிக்கா கோரிக்கை
» தடையை எதிர்கொள்ள ஈரானுக்கு ஆசிய நாடுகள் உதவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum