நாங்க படிச்சா, ஆபீஸரா ஆகுவோமா?

Go down

நாங்க படிச்சா, ஆபீஸரா ஆகுவோமா?

Post by முஸ்லிம் on Tue Jan 03, 2012 6:03 pm

"நம்ம அப்பா செத்துட்டாராண்ணா?"
"ஆமாண்டா!"
"நம்ம அம்மா வரமாட்டாங்களா?"
"ஆமாண்டா தம்பி!"
கால் சட்டை பட்டன்கள்கூட சரிவர போடத் தெரியாத இந்தப் பிஞ்சு உள்ளங்கள் பேசுவதை இதற்கு மேல் கேட்டால் யாரும் அழாமல் இருக்க முடியாது.

அன்புக்கும்
பாசத்திற்கும் ஏங்கி நிற்கும் அந்த மூன்று சிறுவர்களைப் பார்த்தால் கல்
மனதும் கரைந்துவிடும். ஆனால், 80 வயதில் வரக்கூடிய மன வலிமையும் உறுதியும்
இந்த மூன்று சிறுவர்களுக்கும் வந்துள்ளதைக் கண்டு ஊரே வியந்து பார்க்கிறது.

இதயம்
நொறுங்கும் சோகங்களை எளிதாகச் சுமந்து கொண்டு, ‘எதையும் தாங்கும் இதயம்'
எங்களுக்கும் இருக்கிறது என்பதைப்போல் வாழ்ந்து காட்டும் அண்ணன் தம்பிகளான
இந்த மூன்று பேரை சந்திக்க கரூர் அருகேயுள்ள சூரப்பநாயக்கனூருக்கு அதிகாலை
சென்றோம்.

குடிசை வீடு. வீட்டின் வாசலில் எட்டு வயதே நிரம்பிய
திருக்கண்ணன், அவனது தம்பிகளான முனியப்பன், ஹரீஷ் குமாருக்கு பாடம்
சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான். நம்மைக் கண்டதும் யாரோ என்னவோ
ஏதோவென்று மூவரும் விழித்தனர்.

நாம் யார் என்பதை விளக்கிச் சொன்னதும் பேச ஆரம்பித்தனர்.

"எங்கப்பா
நீலமேகம், அம்மா முத்தழகு. அப்பா கூலி வேலைக்கு போய்க்கிட்டு இருந்தாரு.
ஆறு மாசத்துக்கு முன்னாடி ஒரு நாள் எங்கப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டை
வந்திடுச்சு. நாங்க பள்ளிக்கூடத்துக்கு போயிட்டோம். அப்பா வேலைக்கு
போயிட்டாரு. அந்த நேரம் எங்கம்மா உடம்புல தீ வைச்சுட்டாங்க. உடம்பெல்லாம்
வெந்து ஆஸ்பத்திரியில சேர்த்தாங்க. பிழைச்சுக்கிட்டாங்க. ஆனா பேச முடியாம
படுத்த படுக்கையா இருந்ததால திண்டுக்கல் நத்தம் பக்கத்துல எங்க தாத்தா
வீட்டுக்கே கொண்டு போயிட்டாங்க. எங்க மூணு பேத்தையும் எங்கப்பா இங்க
கூட்டிட்டு வந்து வேலைக்கு போயி படிக்க வெச்சிக்கிட்டிருந்தாரு. ரெண்டு
மாசத்துக்கு முன்னாடி எங்கப்பா, எந்த வண்டி அடிச்சதுனு தெரியல ரோட்டுல
செத்துக்கிடந்தாரு. அப்புறம் ஊர்க்காரங்க எல்லாம் எங்கப்பாவை வீட்டுல
கொண்டு வந்து போட்டாங்க. போலீஸ் எல்லாம் கூட வந்தாங்க. ‘நம்ம அப்பா
செத்துட்டாரா’னு என் தம்பிக கேட்டானுக. ‘ஆமாடா’னு சொல்லிட்டு எல்லாரும்
அழுதாங்க.

நாங்களும் அழுதோம். எங்கப்பா செத்ததுக்கு எங்கம்மாவால வர முடியல. காதுல சொன்னாங்களாம், அப்பவும் நெனப்பே இல்லாம படுத்திருஞ்சுதாம்.

எங்கம்மா வீட்டு சொந்தக்காரங்க, என்னைய கட்டிப்புடிச்சு அழுதாங்க. அப்புறம் அவங்க அவங்க ஊருக்குப் போயிட்டாங்க.

எங்கப்பா இருக்கிற வரைக்கும் கூலி வேலைக்குப் போய் பணம் கொண்டு
வரும். அவரே சோறாக்கி எங்களுக்கும் குடுப்பாரு. இனிமேல் அவரும் இல்லையேனு
அழுகாச்சா வந்துச்சு. என் தம்பிகளும் தேம்பித் தேம்பி அழுதாங்க. பக்கத்து
ஊருல இருக்கிற எங்க பாட்டி வந்து, ‘என்னால முடிஞ்ச அளவுக்கு நான்
காப்பத்றேன்’னு சொன்னாங்க. எனக்கு படிக்கலாம்னு ரொம்ப ஆசை. என்
தம்பிகளுக்கும்தான். எங்கப்பா செத்து நாலு நாளுக்கப்புறம் ஸ்கூலுக்கு
போனோம். ஸ்கூல், பக்கத்து ஊரான வேலஞ்செட்டியூரில் இருக்குது. பசங்கெல்லாம்
கேட்டாங்க. சாரும் கேட்டாங்க.

'பள்ளிக்கூடத்த விட்டு நின்னுடாதே'னு
சாரு சொன்னாரு. ‘நாங்க நிக்கமாட்டோம் சார். ஒரு உதவிங்க சார். மத்தியானம்
தர்ற சத்துணவ கொஞ்சம் அதிகமா குடுங்க சார்’னு கேட்டோம். ‘தர்றேன்'னு
கொடுக்க ஆரம்பிச்சார். அதிகமா வாங்குற சத்துணவு சாப்பாட்டை நைட் வீட்டுக்கு
கொண்டு வந்து சாப்பிட்டுக்குவோம். ஒரு நாள் ராத்திரிக்கு எங்க பாட்டியும்
கூட வந்து படுத்துக்கும். காலைல இருந்துச்சுன்னா சோறாக்கி, தலை சீவி
விடும். இல்லீனா, சொந்தக்காரங்க யாராவது சாப்பாடு குடுத்தா வாங்கி
சாப்பிட்டுட்டு ஸ்கூலுக்கு வந்திருவோம்.

‘படிக்கலீனா கூலி
வேலைக்குத்தான் போகணும்; படிச்சாத்தான் ஆபீஸராக முடியும்’னு எங்கப்பா
சொல்லுவாரு. நாங்க ஆபீஸராகணும். அதுக்குத்தான் படிக்கிறோம்" என்று
சொல்லிக்கொண்டே துணிக்கடைப் பையில் புத்தகத்தை போட்டுக்கொண்டு காலில்
செருப்பு கூட இல்லாமல் 2 கி.மீ. தூரமுள்ள பள்ளிக்கு நடந்து செல்ல
ஆரம்பித்தார்கள்.

அப்போது நம்மைப் பார்த்த திருக்கண்ணன், "சார்,
நாங்க படிச்சா, ஆபீஸரா ஆகுவோமா சார்?" என்றபோது, நம்மையறியாமல் கண்கள்
கலங்க, "நிச்சயம் நீங்க ஆபீஸராவீங்க" என்றோம்.

நன்றி: குமுதம்
"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.
avatar
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 8972
Points Points : 42
வயது வயது : 30
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum