தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

15 சிறுவர்கள் உட்பட 73 பலஸ்தீனர்கள் கைது!

Go down

15 சிறுவர்கள் உட்பட 73 பலஸ்தீனர்கள் கைது!   Empty 15 சிறுவர்கள் உட்பட 73 பலஸ்தீனர்கள் கைது!

Post by முஸ்லிம் Tue Jan 03, 2012 6:18 pm

பலஸ்தீன் மேற்குக்கரை பிராந்தியத்தில் கடந்த வாரத்தில் மட்டும் 15 சிறுவர்கள் உட்பட 73 பலஸ்தீன் பொதுமக்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை (31.12.2011) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கைதுசெய்யப்பட்டவர்களில் அனேகமானவர்கள் அல் கலீல் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுமார் 28 பலஸ்தீனர்கள் இப்பிரதேசத்தில் இருந்து இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்புப் படையால் அடாவடியாகக் கைதுசெய்யப்பட்டவர்களில் ரமல்லா பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களும் அடங்குவர். அதில் ஒருவர் 52 வயது மூதாட்டியாவார். 12 - 18 வயதுக்கு இடைப்பட்ட 15 சிறுவர்களும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எந்தவித நியாயமான காரணங்களும் இன்றி பெண்கள், சிறுவர், வயோதிபர் என்ற வேறுபாடுகள் இல்லாமல் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் திடீர் திடீரெனக் கைதுசெய்யப்படும் பலஸ்தீன் பொதுமக்கள் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படாமல் வருடக்கணக்கில் தடுப்பு முகாம்களிலும், சிறைக்கொட்டடிகளிலும் அடைத்துவைக்கப்படும் அவலம் முடிவின்றித் தொடர்வதாக அங்கலாய்க்கும் பலஸ்தீனர்கள், சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையால் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் குரலெழுப்ப முன்வரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.


15 சிறுவர்கள் உட்பட 73 பலஸ்தீனர்கள் கைது!   Logo
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10898
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

15 சிறுவர்கள் உட்பட 73 பலஸ்தீனர்கள் கைது!   Empty மேலும் இரண்டு சிறுவர்கள் கைது: இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை அராஜகம்!

Post by முஸ்லிம் Tue Jan 03, 2012 6:20 pm

கடந்த
ஞாயிற்றுக்கிழமை (01.01.2012) பலஸ்தீனத்தின் கல்கிலியா பிரதேசத்தின் அஸுன்
கிராமத்தைச் சுற்றிவளைத்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை 14, 16 வயதுடைய
இரண்டு சிறுவர்களைக் கைதுசெய்துள்ளது.




20 இராணுவ வாகனங்கள் சூழ இக்கிராமத்தினுள்
அத்துமீறிப் புகுந்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம், அப்பகுதியில் வாழும்
பலஸ்தீனர்களை அச்சுறுத்துமுகமாகப் பல்வேறு அடாவடித்தனங்களை
மேற்கொண்டுள்ளது.

மேற்படி இரண்டு சிறுவர்களையும் பிடித்துக்
கரங்களை முதுகுப் புறமாய்க் கட்டிய ஆக்கிரமிப்பு இராணுவம், அவர்களின்
கண்களைத் துணியால் கட்டி இழுத்துச் சென்றுள்ளது. இச்சிறுவர்களின்
குடும்பத்தவர்களையும் அக்கிராமத்தில் வாழும் ஏனைய பலஸ்தீன்
குடும்பங்களையும் அச்சுறுத்துமுகமாகவே அவ் இரண்டு சிறுவர்களையும்
ஆக்கிரமிப்புப் படை கடத்திச் சென்றுள்ளது என உள்ளூர்வாசிகள்
தெரிவித்துள்ளனர்.

இதே தினத்தில் அல் கலீல் பிரதேசத்தின் பல
பகுதிகளிலும் அத்துமிறி நுழைந்து தாக்குதல் நடாத்திய இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு
இராணுவம், நகரின் பிரதான நுழைவாயில்களுக்கு அருகில் பாதைத் தடைகளை
ஏற்படுத்தியுள்ளது.

சோதனையிடுதல் என்ற போர்வையில்
ஆக்கிரமிப்பு இராணுவம் மேற்கொண்ட கடுமையான கெடுபிடிகள் காரணமாக அப்பிரதேச
மக்களின் சுமுக வாழ்வு சீர்குலைந்து எங்கும் ஒருவித பதற்றம் நிலவியதாக
உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

ஞாயிறன்று மேற்குக்கரை பிராந்தியத்தின்
பல்வேறு பலஸ்தீன் கிராமங்களிலும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர்
அத்துமீறிப் புகுந்து அடாவடித்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அனேகமான இடங்களில் பலஸ்தீன் பொதுமக்களைக் கிளர்ந்து எழத்தூண்டும் வகையிலேயே
ஆக்கிரமிப்பாளரின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன என்று அத்தகைய சம்பவங்களை
நேரில் கண்ட சாட்சிகள் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் "வெகுவிரைவில் காஸா மீது மற்றொரு உக்கிரமான தாக்குதல் முன்னெடுக்கப்படும்"
என்று இஸ்ரேலிய இராணுவ உயரதிகாரி பென்னி கான்ட்ஸ் செய்தி
வெளியிட்டிருந்தார். அது குறித்து, "காஸா மீது மற்றொரு காண்டுமிராண்டித்
தாக்குதலை இஸ்ரேல் மேற்கொள்ளும் பட்சத்தில் சர்வதேச சமூகம் அதனை வெறுமனே
வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது" என பலஸ்தீன் பாராளுமன்றப் பேச்சாளர்
கலாநிதி அஹ்மத் பஹ்ஹார் பதிலடி கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தமது அடாவடித்தனங்களின்
மூலம் பலஸ்தீன் பொதுமக்களையும் விடுதலைப் போராளிகளையும் போருக்குத்
தூண்டிவிட்டு, தாம் ஏற்கெனவே திட்டமிட்டுள்ள காஸா தாக்குதலை சர்வதேச
சமூகத்தின் முன்னிலையில் நியாயப்படுத்துவதற்கான இஸ்ரேலின் தந்திரமாகவும்
இது இருக்கலாம் என அரசியல் அவதானிகள் ஐயுறுகின்றனர்.

15 சிறுவர்கள் உட்பட 73 பலஸ்தீனர்கள் கைது!   Logo
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10898
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum