முஸ்லிம்கள் மீதான வெறுப்பே மஸ்ஜித் மீது குண்டுவீச காரணம் – ரே லேசியர்

Go down

முஸ்லிம்கள் மீதான வெறுப்பே மஸ்ஜித் மீது குண்டுவீச காரணம் – ரே லேசியர்

Post by முஸ்லிம் on Sat Jan 07, 2012 7:37 pm

வாஷிங்டன்:அனைத்து முஸ்லிம்கள் மற்றும்
அரபு வம்சா வழியை சார்ந்தவர்கள் மீதான வெறுப்புதான் முஸ்லிம்களின் மஸ்ஜித்
மீது குண்டுவீச காரணம் என நியூயார்க் போலீசாரால் கைது செய்யப்பட்ட ரே
லேசியர் லெங்கன்ட் கூறியுள்ளான்.

கிறிஸ்துமஸ் தினத்தில் நியூயார்க்
நகரத்தில் மஸ்ஜித் அடங்கிய இஸ்லாமிய மையம் மற்றும் ஹிந்துக் கோவில் மீது
குண்டுவீசி தாக்குதல் நடத்திய ரே லேசியர் போலீசாரிடம் அளித்த
வாக்குமூலத்தில் இதனை தெரிவித்துள்ளான்.

மேலும்,’முஸ்லிம்களை எனது உயிருக்கு
அச்சுறுத்தலாக கருதுகிறேன். குண்டுவீச்சு தாக்குதலின் மூலம்
முஸ்லிம்களுக்கு அதிகபட்சமான இழப்பை ஏற்படுத்துவதுதான் எனது திட்டம்’ என ரே
லேசியர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளான்.

கயானாவில் இருந்து குடியேறி அமெரிக்க
குடியுரிமையை பெற்றுள்ள ரே லேசியர் மீது ஆயுள்தண்டனை விதிக்கப்படும்
வகையிலான குற்றத்தை போலீசார் சுமத்தியுள்ளனர்.




"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.
avatar
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 8816
Points Points : 42
வயது வயது : 29
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum