ஏகாதிபத்திய பைத்தியத்திற்கு எதிராக ஈரானுடன் ஒத்துழைப்போம் – சாவேஸ்

Go down

ஏகாதிபத்திய பைத்தியத்திற்கு எதிராக ஈரானுடன் ஒத்துழைப்போம் – சாவேஸ்

Post by முஸ்லிம் on Thu Jan 12, 2012 7:08 pm

கராக்கஸ்:ஏகாதிபத்தியத்தின் பைத்தியம்
கூடுதல் பலம்பெற்று வருகிறது. இதற்கு எதிராக ஈரான் மக்களுடன் ஒத்துழைப்போம்
என வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸ் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு எதிராக
ஆதரவுகோரி தென் அமெரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஈரான்
அதிபர் அஹ்மத் நஜாதிற்கு அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் உரையாற்றினார்
சாவேஸ்.

அஹ்மத் நஜாதை தனது சகோதரர் எனகூறிய
சாவேஸ், ’அமெரிக்கா நம் இருவரையும் பிசாசுகள் என அழைக்கிறது’ என்பதை
நினைவூட்டினார். இந்த இரண்டு பிசாசுகளும் ஒன்றிணையும் போது அமெரிக்காவிற்கு
பைத்தியம் அதிகரிக்கவே செய்யும் என சாவேஸ் கிண்டலாக தெரிவித்தார்.

ஈரான் அணுஆயுதம் தயாரிக்கிறது என்ற
குற்றச்சாட்டை நிராகரித்த நஜாத், இதே குற்றச்சாட்டைஎ ழுப்பித்தான் ஈராக்கை
அமெரிக்கா ஆக்கிரமித்தது என சுட்டிக்காட்டினார். எந்த நாட்டின் வசம்
குண்டுகள் இருக்கின்றன என்பது தென் அமெரிக்க நாடுகளுக்கு தெளிவான
விழிப்புணர்வு உண்டு.

ஈரானின் வளர்ச்சித் திட்டங்களில் மிரண்டுபோன அமெரிக்கா பொய்ப் பிரச்சாரத்தை நடத்துகிறதுஎன அஹ்மத் நஜாத் தெரிவித்தார்.




"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.
avatar
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 8817
Points Points : 42
வயது வயது : 29
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum