மத்தியபிரதேசம்:இன்று சூரிய நமஸ்காரம் செய்ய பள்ளி மாணவர்களுக்கு பா.ஜ.க அரசு நிர்பந்தம் – கடும் எதிர்ப்பு

View previous topic View next topic Go down

மத்தியபிரதேசம்:இன்று சூரிய நமஸ்காரம் செய்ய பள்ளி மாணவர்களுக்கு பா.ஜ.க அரசு நிர்பந்தம் – கடும் எதிர்ப்பு

Post by முஸ்லிம் on Thu Jan 12, 2012 8:50 pm

போபால்:சுவாமி விவேகானந்தரின் பிறந்த
நாளான இன்று மத்திய பிரதேச மாநில பள்ளிக்கூட மாணவர்கள் சூரிய நமஸ்காரம்
செய்யவேண்டும் என அம்மாநில பா.ஜ.க அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிகழ்ச்சிக்கு முஸ்லிம் மார்க்க அறிஞர்களும், எதிர்கட்சிகளும் கடும்
எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

கல்வித்துறையை காவிமயமாக்க மாநில பா.ஜ.க
அரசு முயல்வதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. அதேவேளையில், சூரிய
நமஸ்காரம் இஸ்லாத்திற்கு எதிரானது என முஸ்லிம் மார்க்க அறிஞர்கள்
ஃபத்வா(மார்க்க தீர்ப்பு) வழங்கியுள்ளனர்.

மாணவர்கள் அனைவரையும் பெரும் திரளாக சூரிய
நமஸ்கார நிகழ்ச்சியில் பங்கேற்கவைத்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில்
இடம்பெற பா.ஜ.க அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிகழ்ச்சியை மிகப்பெரிய
வெற்றிகரமாக மாற்றுவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் மாநில அரசு செய்துள்ளது.
பெரும்பாலான மாணவர்களின் வருகைய உறுதிச்செய்ய மாநிலத்தின் அனைத்து அரசு
மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்வித்துறைக்கும்
பா.ஜ.க அரசு உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில், சூரிய நமஸ்காரத்திற்கு
எவரையும் நிர்பந்திக்கவில்லை என ம.பி மாநில பா.ஜ.க முதல்வர் சிவராஜ்சிங்
சவுகான் கூறியுள்ளார்.

சூரிய நமஸ்காரம் என்பது ஒரு வகையான
விக்கிரக வழிபாடு என முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் கூறுகின்றனர். இஸ்லாம்
அல்லாஹ்வை தவிர வேறு எந்தப் பொருளையும், எவரையும் வணங்குவதை கடுமையாக
தடைச்செய்கிறது. ஆதலால் இந்நிகழ்ச்சி இஸ்லாத்திற்கு எதிரானது என ஷஹர் காழி
முஷ்தாக் அலி நத்வி உள்ளிட்ட முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் வெளியிட்ட
ஃபத்வாவில் கூறியுள்ளனர்.

கல்வியில் தரத்தை மேம்படுத்துவதற்கும்,
அடிப்படை வசதிகளை விரிவாக்குவதற்கும் பதிலாக வளங்களை அரசு பாழாக்குகிறது என
எதிர்கட்சி தலைவர் அஜய்சிங் குற்றம் சாட்டியுள்ளார். பகவத் கீதையை
பள்ளிக்கூட பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக மாற்றுவதில் துவங்கிய காவி
மயமாக்கலின் தொடர்ச்சிதான் புதிய முயற்சி என அவர் கூறியுள்ளார்.
"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.
avatar
முஸ்லிம்
FOUNDER
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
மதிப்பெண் மதிப்பெண் : 8583
மதிப்பீடு மதிப்பீடு : 42
வயது வயது : 29
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum