2011 இல் அதிகமாக சம்பாதித்த 10 இணையதளங்கள். 700 மில்லியன் வாசகர்கொண்ட Facebook 16ம் இடத்தில்

Go down

2011 இல் அதிகமாக சம்பாதித்த 10 இணையதளங்கள். 700 மில்லியன் வாசகர்கொண்ட Facebook 16ம் இடத்தில்

Post by முஸ்லிம் on Fri Jan 13, 2012 3:49 pm

பெரும்பாலானவர்கள் கூகுள் தளம் தான் அதிகமாக
சம்பாதித்து முதல் இடத்தில் இருக்கும் என நினைப்போம் ஆனால் உண்மை அது
அல்ல. ஆன்லைனில் பொருட்களை வாங்க உதவும் அமேசான் தளம் தான் இணையத்தில்
அதிகமாக சம்பாதிக்கும் இணையதளமாகும்
10. iTunes
பட்டியலில்
பத்தாவது இடத்தில் இருப்பது ஆப்பிள் நிறுவனத்தின் iTunes இணையதளமாகும்.
பத்தாவது இடம் என்றவுடன் சாதாரணமா நினைச்சிடாதிங்க இந்த தளத்தின் ஒரு
வினாடிக்கான வருமானம் 60.21$ இந்தியமதிப்பில் Rs. 3130 ரூபாய். ஆண்டிற்கு
$1,900,000,000 வருமானம் இந்த தளம் மூலம் வருகிறது.
9. Paypal
ஆன்லைனில்
பணம் பரிமாற்றம் செய்யும் அனைவருக்கும் இந்த தளம் பற்றி தெரிந்திருக்கும்.
உலகம் முழுவதும் பணம் பணம் பரிமாற்றம் செய்ய மிகப் பிரபலமான பயனுள்ள
இணையதளமாகும். இந்த தளம் வினாடிக்கு 91.90$ ஆண்டிற்கு $2,900,000,000
சம்பாதிக்கிறது.
8. Expedia
பயணம்
செய்பவர்களுக்கு பயனுள்ள தளமாகும். டிக்கெட்டுகள் வாங்குவதில் இருந்து
விமானங்களின் நேரங்கள் மற்றும் பல தகவல்களை அறிந்து கொள்ளலாம். இந்த தளம்
வருடத்திற்கு $2,937,010,000 வருமானம் பெற்று தருகிறது. இந்த தளத்தின் ஒரு
வினாடிக்கான வருமானம் $93.07 ஆகும். இந்த தளத்தின் உரிமையாளர் Mark
schroeder என்பவர்.

Expedia
7. AOL
இந்த
தளம் இணையத்தில் பல்வேறு தலைப்புகளில் லேட்டஸ்ட் செய்திகளை பகிரும்
தளமாகும். அலேக்சாவில் 61 வது இடத்தை பிடித்துள்ள தளமாகும். இந்த தளத்தின்
உரிமையாளர் எரிக பிரின்ஸ் என்பவர். இந்த தளம் வினாடிக்கு 99.41$ ஆண்டிற்கு
$3,137,100,000 வருமானமும் தளத்தின் உரிமையாளருக்கு பெற்று தருகிறது.

6. Reuters
இதுவும்
ஆன்லைனில் செய்தி பகிரும் தளமாகும். இதன் உரிமையாளர் மார்சல் வாஸ்
என்பவர். வினாடிக்கு 107$ வருமானமும் ஆண்டிற்கு $ 3,400,000,000 வருமானமும்
பெற்று தருகிறது.

Reuters
5. Yahoo


இந்த
தளத்தை பற்றி அனைவரும் அறிந்திருப்போம். இணையத்தில் மிகப்பிரபலமான
தளமாகும். News, Search, mail என பல்வேறு வசதிகளை கொண்டது. அலேக்சாவில் 4
இடத்தில் உள்ளது. இதனுடைய ஆண்டு வருமானம் $6,460,000,000 ஆகும். சராசரியாக
ஒரு வினாடிக்கு $204.71 ஆகும்.

yahoo
4. ebay


Amazon
தளத்தை போன்று இதுவும் ஆன்லைனி பொருட்களை வாங்க உதவும் இணையதளமாகும். இந்த
தளத்தின் உரிமையாளர் Pierre Omidyar என்பவர். வினாடிக்கு 276.56$
ஆண்டிற்கு $8,727,360,000 சம்பாதிக்கிறது.

ebay
3. Comcast


அதிகம்
சம்பாதிக்கும் பட்டியலில் இந்த தளம் மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்த
தளத்தின் ஆண்டு வருமானம் $8,727,360,000 ஆகும். சராசரியாக ஒரு வினாடிக்கு
276.56$ சம்பாதிக்கிறது.

comcast
2. Google


அப்பாடா
நீங்க ஆவலுடன் எதிர்பார்த்த தளம் வந்துவிட்டது. இதனை பற்றி அதிகம் சொல்ல
வேண்டியதில்லை. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இணையத்தின் நாடித்துடிப்பு
இந்த தளம் ஒரு நாளைக்கு இதன் சேவை நிறுத்தப்பட்டால் கோடிக்கணக்கானவர்கள்
பாதிக்கப்படுவார்கள். கூகுளின் ஒரு வருடத்திற்கு வருமானம் $23,650,560,000
ஆகும். சராசரியாக ஒரு வினாடிக்கு $749.46 ஆகும். இந்திய மதிப்பில் Rs.
38971(இப்பவே கண்ண கட்டுதே) ஆகும்.

Google search engine
1. Amazon


வெற்றிகரமாக
முதல் இடத்திற்கு வந்தாச்சு. ஆன்லைனில் பொருட்களை வாங்க உதவும் தளமாகும்.
கூகுளிடம் ஒப்பிடுகையில் இந்த தளத்தின் வாசகர் வரத்து , அலெக்சா மதிப்பு
அனைத்தும் குறைவு தான் ஆனால் பொருட்களை வாங்க மொத்த சந்தையாக இந்த தளம்
உள்ளதால் தான் கூகுளை காட்டிலும் அதிகம் சம்பாதிக்கிறது.

Amazonஎன்னடா ஏதோ மிஸ் ஆகுதேன்னு பாக்குறீங்களா!!
பெரும்பாலானவர்களின் விருப்பமான அலேக்சாவில் 2 இடத்தில் உள்ள பேஸ்புக்
தளத்தை பட்டியலில் காணவில்லையே என யோசிக்கிறீங்களா?கூகுளையே
ஆட்டி வைத்த பேஸ்புக் தளம் இல்லையே என்பது எல்லோருக்கும் வரக்கூடிய
சந்தேகம் தான் ஆனால் அதிகம் சம்பாதிக்கும் பட்டியலில் 16 வது இடத்தை
பிடித்துள்ளது. அந்த தளத்தின் ஆண்டு வருமானம் $1,000,000,000 வினாடிக்கு
$31.69 வருமானம் ஈட்டுகிறது.
"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.
avatar
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 8963
Points Points : 42
வயது வயது : 30
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum