9/11 வழக்குகளை வெற்றி கண்டது பின்லேடன் நிறுவனம்!

Post new topic   Reply to topic

View previous topic View next topic Go down

9/11 வழக்குகளை வெற்றி கண்டது பின்லேடன் நிறுவனம்!

Post by முஸ்லிம் on Sat Jan 14, 2012 9:12 pm

சவூதி
அரேபியாவின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்களுள் ஒன்று பின்லேடன் நிறுவனம்.
பாக்கிஸ்தானின் அபோதாபாதில் அமெரிக்கப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட
அல்காய்தா தலைவர் ஒஸாமா பின்லேடன் இந்நிறுவனத்தலைவரின் மகன்களுள் ஒருவரே.




அமெரிக்காவில் 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற
9/11 எனப்படும் இரட்டைக் கோபுரத் தகர்ப்பு சம்பவத்தில் இந்நிறுவனமும்
உடந்தையாக இருந்ததாக அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பலரும் வழக்குத்
தொடர்ந்திருந்தனர். இந்நிறுவனம் மீது ஆறு வழக்குகள் பதியப்பட்டிருந்தன.

அந்த
வழக்குகள் அனைத்தும் போதிய ஆதாரங்கள் இல்லாமல் இருப்பதாகக் கூறி
மன்ஹாட்டன் கூட்டாளுமை நீதிமன்றத்தில் விலக்கம் செய்யப்பட்டுள்ளன. "1993ல்
குடும்பத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்ட ஒஸாமாவுக்கு குடும்பத்தினர்
1993க்கு முன் ஆதரவாக இருந்தமை இவ்வழக்குகளை நிரூபிக்கப் போதுமானவையல்ல"
என்று நீதிபதி தெரிவித்தார்

முன்னதாக, அமெரிக்க மாவட்ட நீதிபதி
ரிச்சர்ட் கேஸி என்பவர், 2005 ஆம் ஆண்டு இந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்ய
கோரிய பின்லேடன் நிறுவன மனுவுக்கு மறுப்பு தெரிவித்திருந்தார். அதேவேளை,
சவூதி அரேபியாவின் மற்ற சில தரும அறக்கட்டளைகளுக்கு எதிரான வழக்குகளை அவர்
தள்ளுபடி செய்திருந்தார்.




"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.
avatar
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 8636
Points Points : 42
வயது வயது : 29
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You can reply to topics in this forum