ஈரானை தாக்கக் கூடாது – பிரான்சு எச்சரிக்கை

View previous topic View next topic Go down

ஈரானை தாக்கக் கூடாது – பிரான்சு எச்சரிக்கை

Post by முஸ்லிம் on Mon Jan 23, 2012 8:38 pm

பாரிஸ்:ஈரானின் அணுசக்தி திட்டத்திற்கு
எதிரான ராணுவ நடவடிக்கை போரையும், அராஜகத்தையும் உருவாக்கும் என பிரான்சு
அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுக்குறித்து அவர் கூறியது: ராணுவ
நடவடிக்கையை தவிர்க்க எங்களால் இயன்ற அளவு முயற்சிப்போம். ராணுவ நடவடிக்கை
என்பது பிரச்சனைக்கு தீர்வு ஆகாது. மாறாக, பிரச்சனையை மேலும்
சீர்குலைக்கும்.

வளைகுடா பகுதியை மட்டுமல்ல, உலகம் முழுவதையும் போரை நோக்கி தள்ளும் என்று சர்கோஸி கூறினார்.

ஈரான் மீது தாக்குதல் நடந்தால் ஹோர்முஸ்
ஜலசந்தியை மூடுவோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகில் எண்ணெய்
வர்த்தகத்தின் 20 சதவீதமும் இவ்வழி மூலமாகத்தான் நடக்கிறது. இதனை கவனத்தில்
கொண்டுதான் சர்கோஸி ஈரான் மீதான ராணுவ தாக்குதலுக்கு எதிர்ப்பு
தெரிவித்துள்ளார் என கருதப்படுகிறது.

ராணுவ நடவடிக்கைக்கு பதிலாக பொருளாதார தடையை வலுப்படுத்த வேண்டும் என சர்கோஸி கருத்து தெரிவித்துள்ளார்.


"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.
avatar
முஸ்லிம்
FOUNDER
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
மதிப்பெண் மதிப்பெண் : 8579
மதிப்பீடு மதிப்பீடு : 42
வயது வயது : 29
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum