இந்தியா குடியரசு தினம்: நாடெங்கும் கொண்டாட்டம்

View previous topic View next topic Go down

இந்தியா குடியரசு தினம்: நாடெங்கும் கொண்டாட்டம்

Post by முஸ்லிம் on Thu Jan 26, 2012 5:55 pm

நாட்டின் 63 வது குடியரசு தினம் வழக்கமான உற்சாகத்துடன் நாடெங்கிலும் கொண்டாடப்பட்டது. இந்நாளையொட்டி நாட்டின் குடிமக்களுக்கான விருதான பத்ம விருகளும், காவல்துறையில் சிறப்பாக பணியாற்றுபர்களுக்கு குடியரசு தலைவர் விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

குடியரசு தினத்தின் முதல் நிகழ்ச்சியாக பிரதமர் மன்மோகன்சிங் டில்லியில் உள்ள அமர்ஜவான் ஜோதியில் அஞ்சலி செலுத்தினார். குதிரைப்படை சூழ ஜனாதிபதி பிரதீபாதேவி சிங் பாட்டில் ராஜ்பத்துக்கு அழைத்து வரப்பட்டார். இவருடன் சிறப்பு விருந்தினரான தாய்லாந்து பிரதமர் யுங்லுக் ஷனாவத்ரா வந்தார். சரியாக 10 மணிக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்கிட ஜனாதிபதி தேசிய கொடியேற்றி வைத்தார்.

சென்னை மெரீனா கடற்கரையில் நடந்த விழாவில் கலந்துக்கொள்ள தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா காலை 7-57 மணிக்கு மோட்டார் சைக்கிள் வீரர்கள் புடை சூழ வந்தார். அங்கு கூடியிருந்த பொது மக்களை பார்த்து வணக்கம் தெரிவித்தார். கவர்னர் ரோசையா 7-58 மணிக்கு வந்தார். அவரை முதல்-அமைச்சர் ஜெயலலிதா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

தென் பிராந்திய முப்படை தளபதிகள், டி.ஜி.பி. ராமானுஜம், கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜ், சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி ஆகியோரை கவர்னருக்கு ஜெயலலிதா அறிமுகம் செய்து வைத்தார். சரியாக 8 மணிக்கு கவர்னர் ரோசையா தேசிய கொடி ஏற்றி வைத்தார். அப்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டது. விமானப்படை ஹெலிகாப்டர் சுற்றி வந்து தேசிய கொடிக்கு மலர் தூவியது

விழாவில் வீர தீர செயல்கள் புரிந்த தீயணைப்பு அலுவலர்கள், காவல்துறையினருக்கு பதக்கம் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டது. காந்தியடிகள் காவலர் விருது 4 போலீஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது. சமீபத்திய எழிலக தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த மற்றும் காயமுற்ற தீயணைப்பு அலுவலர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் அண்ணா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

சென்னை ஐகோர்ட்டில் நடந்த விழாவில் தலைமை நீதிபதி இக்பால் கொடியேற்றி வைத்தார். விழாவில் நீதீபதிகள், வக்‌கீல்கள், மற்றும் கோர்ட் அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்ககள் தேசிய கொடியை ஏற்றி வைத்தனர், அரசு - தனியார் நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் ஆகியவற்றிலும் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.
avatar
முஸ்லிம்
FOUNDER
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
மதிப்பெண் மதிப்பெண் : 8583
மதிப்பீடு மதிப்பீடு : 42
வயது வயது : 29
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum