இந்தியாவுக்கு நிதியுதவி: பிரிட்டனில் எதிர்ப்பு வலுக்கிறது

Go down

இந்தியாவுக்கு நிதியுதவி: பிரிட்டனில் எதிர்ப்பு வலுக்கிறது

Post by முஸ்லிம் on Mon Feb 06, 2012 6:25 pm

லண்டன்:பிரிட்டனை கழற்றிவிட்டு
பிரான்சிடம் போர் விமானங்களை வாங்க இந்தியா முடிவு எடுத்ததற்கு எதிர்ப்பு
தெரிவித்து இந்தியாவுக்கு அளித்து வரும் நிதியுதவியை நிறுத்த வேண்டும் என்ற
கோரிக்கை பிரிட்டனில் வலுத்து வருகிறது.

கடந்த வாரம் பிரான்சு நாட்டு
நிறுவனத்திடம் இருந்து போர் விமானங்களை வாங்க இந்தியா தீர்மானித்தது.
பிரிட்டனின் அற்பமான பொருளாதார உதவி இந்தியாவுக்கு தேவையில்லை என கடந்த
ஆகஸ்ட் மாதம் மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறிய
கருத்து அவை நடவடிக்கைகளில் இருந்து நீக்கப்பட்டது. இதுவரை இக்கருத்து
பிரிட்டீஷ் பத்திரிகைகளில் செய்தியாக மாறவில்லை. ஆனால், இந்தியா போர்
விமானங்களை பிரான்சு நாட்டு நிறுவனத்திடம் இருந்து வாங்க தீர்மானித்த
பொழுது மேற்கண்ட செய்தியை ‘த சண்டே டெலிக்ராஃப்’ பத்திரிகை
வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் முடிவின் அடிப்படையில்
நிதியுதவி அளிப்பதை நிறுத்தவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுப்பதாக ‘த
சண்டே டெலிக்ராஃப்’ பத்திரிகை கூறுகிறது.

28 கோடி பவுண்ட் தொகையை வருடம் தோறும் இந்தியாவுக்கு பிரிட்டன் அளித்துவருகிறது.

அதேவேளையில்,இந்தியாவுக்கான நிதியுதவி இரு
நாடுகளின் தேசிய விருப்பத்தை அடிப்படையாக கொண்டது என வளர்ச்சி விவகார
செயலாளர் ஆண்ட்ரூ மிச்சல் கூறியுள்ளார். ஆனால், இந்தியாவுடனான
அணுகுமுறையில் மாற்றம் வரும் என அவர் தெரிவித்துள்ளார். பிரிட்டனின்
நிதியுதவியை நேரடியாக மத்திய அரசிடம் வழங்குவதற்கு பதிலாக பிற்படுத்தப்பட்ட
3 மாநிலங்களுக்கு நேரடியாக அளிக்கப்படும். தனியார் துறையில் அதிக முதலீடு
செய்யப்படும் என மிச்சல் கூறினார்.

இந்தியாவில் அதிக காலம் தொடர விரும்பவில்லை என்றும், ஆனால் வாபஸ் பெறுவதற்கான நேரம் இதுவல்ல என்றும் மிச்சல் மேலும் கூறினார்.



"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.
avatar
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 8908
Points Points : 42
வயது வயது : 30
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum