பொருளாதார நெருக்கடியால் அமெரிக்க இளைஞர்கள் அதிகளவில் பாதிப்பு

Go down

பொருளாதார நெருக்கடியால் அமெரிக்க இளைஞர்கள் அதிகளவில் பாதிப்பு

Post by முஸ்லிம் on Sat Feb 11, 2012 5:49 pm

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளால் அங்குள்ள இளைஞர்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.





பியு ஆய்வு மையம் நடத்திய ஆராய்ச்சியில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள வேலை வாய்ப்பின்மையால் அங்கு அதிகமாக இளைஞர்கள்
பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. 18 வயது முதல் 34
வயது வரை உள்ள பிரிவில் உள்ளவர்களில் 54 சதவிகித மக்களுக்கு மட்டுமே வேலை
இருக்கிறது. 1948 ஆம் ஆண்டிலிருந்து கணக்கெடுத்ததில் தற்போதுதான் அதிகளவில்
இந்தப்பிரிவில் வேலைவாய்ப்பின்றி காணப்படுகின்றனர்.

”பொருளாதார நெருக்கடிக்கு பின்பு அமெரிக்க இளைஞர்கள் மன நிம்மதி
குறைந்து காணப்படுவதாக” பியு ஆய்வு மையத்தின் இணை இயக்குநர் கிம் பார்க்கர்
தெரிவித்துள்ளார். ”இதனால்தான் வால்ஸ்டீரிட் பகுதியில் நடைபெற்ற
ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள் அதிகளவில் கலந்து கொண்டதாகவும்” அவர்
குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் தலைவர் பென் பெர்னாங்கேயும் அமெரிக்காவின்
பொருளாதார நிலைமை குறித்து கவலை தெரிவித்துள்ளார். பென் பெர்னாங்கேயும்
அமெரிக்காவின் பொருளாதார நிலைமை குறித்து கவலை தெரிவித்துள்ளார்.



"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.
avatar
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 8910
Points Points : 42
வயது வயது : 30
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum