தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

யுரேனிய செறிவூட்டல் நேரடி ஒளிபரப்பு, பெட்ரோல் ஏற்றுமதிக்கு தடை - ஈரான் அதிரடி

Go down

யுரேனிய செறிவூட்டல் நேரடி ஒளிபரப்பு, பெட்ரோல் ஏற்றுமதிக்கு தடை - ஈரான் அதிரடி    Empty யுரேனிய செறிவூட்டல் நேரடி ஒளிபரப்பு, பெட்ரோல் ஏற்றுமதிக்கு தடை - ஈரான் அதிரடி

Post by முஸ்லிம் Thu Feb 16, 2012 6:27 pm

தெஹ்ரான் : ஈரான் தெஹ்ரானில் அமைத்துள்ள அணு உலையில் யுரேனியம் செறிவூட்டும் பணிகளை செய்து வந்தது. ஈரான் அணுகுண்டு தயாரிக்க இதை பயன்படுத்துவதாகவும் இதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கோரிய அமெரிக்காவின் கோரிக்கையை ஈரான் ஏற்காததால் அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை ஈரான் மேல் விதித்தது.

ஆனால் ஈரானோ அவை ஆக்கபூர்வமான முறையில் மின்சாரம் தயாரிக்கவே பயன்படுத்தப்படுவதாக தெரிவித்தது. இச்சூழலில் எந்த அணு உலையை அமெரிக்கா மூட சொன்னதோ அதே அணு உலையில் யுரேனியம் செறிவூட்டும் காட்சிகளையும் யுரேனிய ப்ளேட்டுகள் பொருத்தப்படும் காட்சியையும் ஈரான் அதிபர் அஹ்மது நிஜாத் உத்தரவின் பேரில் ஈரான் அரசு தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பியது.

தன் உத்தரவை மீறியதோடு முகத்தில் கரி பூசும் விதமாக தன் வல்லமையை ஈரான் பறை சாற்றியது அமெரிக்காவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. உலக நாடுகள் அனைத்தும் ஈரானை தனிமைப்படுத்த வேண்டும் என்று ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்கிடையில் ஈரான் அணு உலை உற்பத்தியை நிறுத்தாவிட்டால் ஈரானிடமிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்வதை நிறுத்துவோம் என்று அச்சுறுத்திய 6 ஐரோப்பிய நாடுகளுக்கு ஈரான் பெட்ரோல் ஏற்றுமதி செய்வதை நிறுத்தி அதிரடி காட்டியுள்ளது.

ஈரான் ஒரு அணு மின் நிலையம் அமைப்பதை எதிர்த்த அமெரிக்காவின் கோபத்தை கிளறும் விதமாக ஈரானின் மின் உற்பத்தியை நிவர்த்தி செய்ய இன்னும் 4 அணு உலை நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் ஈரான் அதிபர் அஹ்மது நிஜாத் கூறியுள்ளார்.


யுரேனிய செறிவூட்டல் நேரடி ஒளிபரப்பு, பெட்ரோல் ஏற்றுமதிக்கு தடை - ஈரான் அதிரடி    Logo
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10898
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» சவூதி தூதரை கொல்ல ஈரான் சதித்திட்டம் தீட்டியதாக அமெரிக்கா – ஈரான் மறுப்பு
» ஈரான் அணுவிஞ்ஞானி படுகொலை
» பெரியப்பட்டிணத்தில் நடந்தது என்ன? – தூது நிருபரின் நேரடி அலசல்!
» பூங்காவில் போராட்டம் நடத்தலாம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி
» இஸ்ரேல் தூதர், அதிகாரிகள் வெளியேற்றம், ஒப்பந்தங்கள் ரத்து : துருக்கி அதிரடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum