இந்தியா: கலவர பூமி?

Go down

இந்தியா: கலவர பூமி?

Post by முஸ்லிம் on Thu Mar 01, 2012 5:18 pm

தனியார் தொலைக்காட்சி சேனல்கள் அதிகமான பிறகு நடந்த மிகப் பெரும் கலவரம் கோத்ரா ரயில் எரிப்பும் அதை தொடர்ந்து முஸ்லீம்கள் மீது நடத்தப்பட்ட மிகப் பெரும் கலவரங்களும் என்பது நிதர்சனமான உண்மை.

ஆனால், அது குஜராத்தில் நடைபெற்ற முதல் கலவரமல்ல என்பதும் ஒரு கசப்பான உண்மை. 2002 ல் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனக்கலவரத்தினைத் தூண்டிவிட்டதாக குற்றம்சுமத்தப்படும் குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடி தன் வாயாலேயே இதனை ஒத்துக்கொண்டுள்ளார்.

இந்தியா பிறந்ததே ரத்த வெள்ளத்தில் தான். இந்தியா, பாகிஸ்தான் என இரண்டாக நாடு பிளவுபட்ட போது இரு தரப்பிலும் நடந்த வன்முறை வெறியாட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் மாண்டு போனதோடு கோடிக்கணக்கான சொத்துக்களுக்குச் சேதமும் ஏற்பட்டது.

தற்போது 2012ல் அக்காயங்கள் ஓரளவு ஆறினாலும், அனைவருக்கும் தெரிந்த அசிங்கமான ரகசியம் என்னவெனில் பிஜேபி, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் கலவரங்கள் நடப்பதை வெளியில் கண்டித்தாலும் உள்ளுக்குள் அதனை விரும்பவே செய்கின்றனர். ஏனென்றால் கலவரங்கள் வாக்காளர்களை மொத்தமாக ஒரு கட்சியின் பால் சாய செய்கின்றது.

சிறுபான்மையினரை தாஜா செய்யும் அரசியல்வாதிகளும் சரி, அல்லது சிறுபான்மையினர் எதிர்ப்பை மையமாக வைத்து அரசியல் நடத்தும் அரசியல்வாதிகளும் சரி; இந்த இரு கூட்டமுமே கலவரங்களை விரும்புகின்றன. கோத்ராவின் வடு பிஜேபியின் மீது இருப்பது போலவே காங்கிரஸ் மேலும் பல கவலர வடுக்கள் இருக்கத் தான் செய்கின்றன.

இந்தியாவின் அரசியல் சாசனம் மதசார்பின்மை அடிப்படையில் உள்ளது. ஆனால் இந்தியாவின் அரசியல் முறையோ மதவாதத்தை அடிப்படையாக கொண்டே உள்ளது.

இந்திய நாட்டில் யாரொருவர், எந்த ஒரு தனி மனிதரைக் கொன்றாலும் சட்டத்தின் முன்னால் அது கொலையாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் முறைப்படுத்தப்பட்ட ஒரு கும்பல் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது நடத்தப்படும் திட்டமிட்ட தாக்குதலுக்கு மதச்சாயம் பூசப்படும் போது அது மிகப் பெரும் ஆபத்தாய் முடிகிறது.

முன்னாள் காவல்துறை அதிகாரி விபூதி நாராயண ராவ், "ஒரு கலவரம் 24 மணி நேரத்திற்குள் அடங்க வில்லையெனின் நிச்சயமாக அதற்கு அரசியல் பின்னணி இருக்கும்" என்று கூறியது நிச்சயமான உண்மை. இப்படிப்பட்ட வகுப்புவாத கலவரங்களின் போது கலவரங்களை ஒடுக்க வேண்டிய காவல்துறை மெளனமாகவும் சில போது கலவரக்காரர்களுக்கு உடந்தையாகவும் இருப்பதைப் பார்க்கின்றோம்.

குஜராத் கலவரத்தின் போது நடந்தவை அனைத்தும் தெஹல்கா எனும் இதழ் ஆதாரத்துடன் வெளிக்கொணர்ந்தும் இதுவரை குற்றவாளிகள் தண்டிக்கப்படாததோடு, பாதிக்கப்பட்டவர்கள் பலர் இதுவரை தங்கள் சொந்த இடத்திற்கு திரும்பமுடியவில்லை என்பது ஜனநாயகத்தின் தோல்வியாகவே பார்க்கப்படுகிறது..

அதனால் தான் இந்தியாவில் வகுப்புவாத கலவரங்கள் தொடர்கதையாக நடப்பதைக் காண்கின்றோம். 32 வருடங்களுக்கு முன்பு மொராதாபாத்தில் நடந்த கலவரங்களில் 1500க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டதும், 45 வருடங்களுக்கு முன் நூற்றுக்கணக்கானோர் ராஞ்சியில் கொல்லப்பட்டதற்கும் இது வரை தீர்வு கிடைக்கவில்லை.

சுமார் 500 நபர்கள் 43 வருடங்களுக்கு முன் அஹமதாபாத்தில் கொல்லப்பட்டதற்கும், 28 வருடங்களுக்கு முன் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையில் 2700 நபர்கள் கொல்லப்பட்டதற்கும் 23 வருடங்களுக்கு முன் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறையில் 1000 நபர்கள் கொல்லப்பட்டதற்கும் இது வரை முழுமையான தீர்வு கிடைக்கவில்லை.

இந்தியாவில் நடந்த கலவரங்களில், 29 வருடங்களுக்கு முன் ஆயிரக்கணக்கான சிறுபான்மையினர் அஸ்ஸாமில் உள்ள நெல்லியில் கொல்லப்பட்டதையும் பாபரி மஸ்ஜித் இடிப்புக்கு பின் 1993ல் ஆயிரக்கணக்கானோர் மும்பையில் கொல்லப்பட்டதையும் நம்மால் மறக்க முடியாது.

இங்கு பட்டியிலிடப்பட்டவை அல்லாமல் ஏராளமான கலவரங்கள் இந்தியாவெங்கும் நடந்தன, நடந்து கொண்டும் இருக்கின்றன. சிறியதோ, பெரியதோ எல்லா கலவரங்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலியை தருகிறது என்பதை யாரும் மறக்க முடியாது.

இதில் ஒரு விஷயத்தை மட்டும் யாரும் மறக்க கூடாது; இந்தியா கலவர பூமியாக கொதித்துக் கொண்டேயிருப்பதன் பின்னணியில் பெரும் பங்கு வகிப்பது அரசியல்வாதிகளும் அரசியல்கட்சிகளும்தான்! எனவே குற்றவாளிகளாக கூண்டில் நிறுத்தப்படவேண்டிய பட்டியலில் அரசியல் கட்சிகளுக்குப் பிரதானமான இடம் வழங்கப்படவேண்டும்!

"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.
avatar
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 8963
Points Points : 42
வயது வயது : 30
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum