தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குஜராத்:ஆறாத ரணங்கள்! தண்டிக்கப்படாத குற்றவாளிகள்! தீர்வுதான் என்ன?

Go down

குஜராத்:ஆறாத ரணங்கள்! தண்டிக்கப்படாத குற்றவாளிகள்! தீர்வுதான் என்ன?  Empty குஜராத்:ஆறாத ரணங்கள்! தண்டிக்கப்படாத குற்றவாளிகள்! தீர்வுதான் என்ன?

Post by முஸ்லிம் Thu Mar 01, 2012 5:38 pm

ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொடூரமாக
கொலைச் செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் கடுமையாக காயமுற்றனர். ஐந்து
லட்சம் பேர் சொந்த வீடுகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். 10
ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால்
அரங்கேற்றப்பட்ட மிகக்கொடூரமான இனப் படுகொலையின் போது நிகழ்த்தப்பட்ட
அக்கிரமங்கள் இந்திய வரலாறு காணாதது.

2002 பிப்ரவரி 28-ஆம் தேதி துவங்கிய
ஹிந்துத்துவ இனவெறியின் இரத்த தாகம் அடங்க 4 மாதம் ஆனது. 2002 பிப்ரவரி
27-ஆம் தேதி கோத்ராவில் நடந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிக்கு
தீவைத்த சம்பவத்தை தொடர்ந்து நடந்த இனப்படுகொலை சர்வதேச ஊடகங்களில்
இந்தியாவின் முகத்தை களங்கப்படுத்தியது.

கோடிக்கணக்கான முஸ்லிம்களின் சொத்துக்கள்
அழித்தொழிக்கப்பட்ட இனப் படுகொலையில் சிறிய, பெரிய வழிப்பாட்டுத்தலங்கள்
இடித்து தள்ளப்பட்டன. 151 நகரங்கள், 993 கிராமங்களில் முஸ்லிம்களின் குருதி
ஓட்டப்பட்டது. வதோதரா, பஞ்ச்மஹல், தாஹோத், நர்மதா, பரூச், அஹ்மதாபாத்,
ஆனந்த், கேதா, மெஹ்ஸாரா, பனஸ்காந்தா ஆகிய மாவட்டங்கள் இனப் படுகொலையின்
கோரத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டன.

மனித உரிமைகளை அழித்தொழித்த மோடிக்கு
அமெரிக்கா விசா மறுத்தது. மோடிக்கு தற்போதும் ஐரோப்பாவிலும்,
அமெரிக்காவிலும் தடை தொடர்கிறது. மாநிலம் பற்றி எரியும் வேளையில் பிடில்
வாசித்த நவீன கால நீரோ என்று உச்சநீதிமன்ற நீதிபதி அரிஜித் பஸாயத் மோடியை
விமர்சித்தார். இத்தகைய விமர்சனங்கள் எல்லாம் மோடியை அசைக்கவில்லை.

அன்று மோடிக்கு, ரதயாத்திரை புகழ்
அத்வானியின் பூரண ஆதரவு கிடைத்தது. மிகவும் கொடூரமான நினைத்து பார்க்கையில்
பயங்கரமான நிகழ்வுகளாக குஜராத் இனப் படுகொலை மாறியது. அண்டை அயலாராக
வசித்த ஹிந்துக்கள் கூட வெறி பிடித்து முஸ்லிம் பெண்களையும், சிறுமிகளையும்
பாலியல் பலாத்காரம் செய்ய தயங்கவில்லை.

ரண்டாக்பூரில் பல்கீஸின் மூன்று வயதான
மகளை தலையை தரையில் அடித்துக் கொலைச் செய்தவன் அண்டை வீட்டு ஹிந்து வெறியன்
ஆவான். பல்கீஸை ஹிந்துத்துவா வெறியர்கள் கூட்டு பாலியல் வன்புணர்வுச்
செய்து இறந்துவிட்டார் என கருதி தூக்கி எறிந்துவிட்டு சென்றனர். அந்த
சகோதரிக்கு தனது துயரக் கதைகளை கூற உயிர் மிச்சம் இருந்தது.

கெளஸர் பானுவின் கருவறையில் தூங்கிக்
கொண்டிருந்த வெளியுலகை காணாத சிசுவை கூட வயிற்றைக் கிழித்து திரிசூலத்தில்
செருகி தீயிட்டு பொசுக்கிய ஹிந்துத்துவா வெறிக் கும்பல் தாங்கள் மனிதர்களே
அல்லர் என்பதை உலகுக்கு அறிவித்தனர்.

சர்தார்புராவில் வீட்டில் அபயம் தேடி வந்த
33 பேர் தீயில் பொசுக்கப்பட்டு கொலைச் செய்யப்பட்டனர். பேக்கரியில் ரொட்டி
தயாரிக்கும் நெருப்பு சூளையில் தூக்கி எறியப்பட்டு 14 முஸ்லிம்களின்
உயிர்கள் பொசுக்கப்பட்டன. பந்தர்வாடாவில் போலீஸ் 32 பேரின் உடலை ஒரே
குழியில் போட்டு மூடியது. ஆதாரங்களை அழிப்பதற்காக மோடி போலீஸ் நடத்திய
தந்திரமான நடவடிக்கையாகும் இது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி
இஹ்ஸான் ஜாஃப்ரியும் மற்றும் பலரும் குல்பர்கா சொஸைட்டியில் கொலைச்
செய்யப்பட்ட சம்பவத்தை அறியாதவர்கள் யார் உள்ளனர்?

சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டி எரிப்பு
சம்பவம் நிகழ்ந்த கோத்ராவுடன் இணைந்த சிக்னல் ஃபாலியாவில் முஸ்லிம்
இளைஞர்களுக்கு இன்றும் எவரும் வேலை அளிப்பது கிடையாது. சிக்னல் ஃபாலியா
என்ற முகவரியே வேலை புறக்கணிப்பிற்கான ஒரு காரணமாக மாறிவிட்டது. ரெயில்
பெட்டி எரிப்பை தொடர்ந்து கைது செய்யப்பட்ட அப்பாவிகள் சட்டத்தின் முன்னால்
நிரபராதிகள் என்றாலும் அவர்கள் கொடூர பயங்கரவாதிகளாகவே
சித்தரிக்கப்படுகின்றார்கள்.

அஹ்மதாபாத்தில் நெருக்கடி மிகுந்த
தெருக்களில் நடந்துசெல்லும் போது நேருக்கு நேராக முகம் பார்த்து நடக்கும்
முஸ்லிம்களும், ஹிந்துக்களும் மனோரீதியாக எவ்வளவோ தூரம் விலகியே உள்ளனர்.
ஒரு கூட்டம் அகம்பாவத்தால் நெஞ்சை நிமிர்த்தி நடக்கும்போது இன்னொரு கூட்டம்
கூனிக் குறுகிசெல்லும் நிலை.

இந்தியாவின் பல மாநிலங்களிலும் வகுப்புக்
கலவரமும், இனப் படுகொலைகளும் நிகழ்ந்திருந்தாலும் குஜராத்தில் நிகழ்ந்தது
மிகவும் வித்தியாசமான இனப் படுகொலைகளாகும்.

ஆரம்பத்தில் முஸ்லிம்கள் மோசமானவர்கள்,
நமது கலாச்சாரத்திற்கு ஒவ்வாதவர்கள் என்ற பிரச்சாரம் வேகமாக முன்னெடுத்து
செல்லப்பட்டது. முஸ்லிம்கள் மாமிசம் புசிப்பதால் அவர்கள் அதர்மத்தை
கடைப்பிடிப்பவர்கள் என்று பரப்புரைச் செய்யப்பட்டது. சில சைவப் பிரியர்களான
காந்தியவாதிகள் இப்பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்பட்டனர். மாமிசம்
சாப்பிடுவது ஹிந்துக் கலாச்சாரத்திற்கு எதிரானது என்ற உணர்வு ஹிந்துக்களின்
உள்ளங்களில் ஆழமாக பதிவுச் செய்யப்பட்டது. பழங்குடி மக்களின் உள்ளங்களில்
ஹிந்துத்துவா சக்திகள் விதைத்த முஸ்லிம் துவேஷ வித்துக்கள் இனப்
படுகொலையின் போது அறுவடைச் செய்யப்பட்டன. மேல்ஜாதி ஹிந்துக்களின்
கூலிப்படையாக மாறிய பழங்குடியின வெறியர்கள் கொலைகளை செய்வதிலும்,
கொள்ளையடிப்பதிலும் நேரடியாக பங்கேற்றனர்.

விபத்து என்று விசாரணை கமிஷனின்
அறிக்கையில் கூறப்பட்ட கோத்ரா ரெயில்பெட்டி எரிப்பு சம்பவம் முஸ்லிம்களின்
சதித் திட்டம் என்று சித்தரிக்கப்பட்டது. சந்தேஷ், குஜராத் சமாச்சார் போன்ற
உள்ளூர் பத்திரிகைகள் கோத்ரா ரெயில்பெட்டி எரிப்பு சம்பவத்தை வகுப்புவாத
வெறியை தூண்டும் விதத்தில் ஒருதலை பட்சமாக செய்திகளை வெளியிட்டன.

சாதாரண போலீஸ் கான்ஸ்டபிள் முதல் ஐ.பி.எஸ்
அதிகாரிகள் வரை இனப் படுகொலைகளை தடுக்காமல் பார்வையாளர்களாக மாறினர்.
ஐ.பி.எஸ் அதிகாரிகள் தனது கடமையை நிறைவேற்றாதது, வகுப்புவாத தீ பரவுவதற்கு
முக்கிய காரணமானது என்று முன்னாள் குஜராத் மாநில டி.ஜி.பி
ஆர்.பி.ஸ்ரீகுமார் சுட்டிக்காட்டியுள்ளார். ஐ.பி.எஸ் அதிகாரிகள்
துணிச்சலுடன் செயல்பட்டதால் சூரத், பூஞ்ச் ஆகிய இடங்களில் வகுப்புவாத வெறி
எடுபடாமல் போனது. ஆனால், இங்கேயெல்லாம் பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் மீது
மோடி அரசு அநீதம் இழைத்து தனது பகையை தீர்த்துக்கொண்டது.

ஒரு சில காந்தியவாதிகளை தவிர குஜராத்தில்
எந்த பிரபல தலைவர்களும் இனப் படுகொலைகளை கண்டிக்காதது நடுங்கச் செய்யும்
உண்மைகளாகும். மிகவும் சுதந்திர சிந்தனையாளர் என அழைக்கப்படும் மூராரிபாப்
உள்பட எந்த ஹிந்து சன்னியாசியும் குஜராத்தின் கூட்டுக் குருதியை கண்டிக்க
தயாராகவில்லை. வகுப்புவாத வெறியர்கள் நடத்திய கோரத்தாண்டவத்திற்கு எந்த
ஹிந்து தலைவரும் மன்னிப்பும் கோரவில்லை.

அதேவேளையில் அம்பானியும், டாட்டாவும்
உள்ளிட்ட தொழிலதிபர்கள் முதலீட்டாளர்களின் மாநாட்டில் மோடிக்கு புகழாரம்
சூட்டினர். மோடி பிரதமராவதற்கு தகுந்தவர் என்றும் பாராட்டப்பட்டது. குறைந்த
விலையில் அரசு நிலங்களையும், குறைந்த கட்டணத்திற்கு மின்சாரமும் உள்பட
ஏராளமான அரசு சலுகைகளை அளித்து அம்பானி, டாட்டா போன்ற பண முதலைகளை
வசப்படுத்தினார் மோடி. தொழிலபதிபர்களின் புகழாரமும், இனப் படுகொலை
வேளைகளில் மத தலைவர்களின் மவுனமும் மோடிக்கு துணிச்சலை கொடுத்தது. மேலும்,
ஜனநாயகத்தின் பெயரால் நடத்தப்பட்ட தேர்தலில் வகுப்புவாத ஹிந்து சமூகம்
அளித்த வாக்குகளின் பின்புலத்தில் தொடர்ந்து முதல்வர் பதவியை வகிப்பதும்
மோடிக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்தது.

போலீசாரை பார்வையாளர்களாக மாற்றி
ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு முழு சுதந்திரம் அளித்து முஸ்லிம்களுக்கு
எதிராக மிகப்பெரிய இனப் படுகொலைக்கு தலைமை தாங்கி மிருக சிந்தனையுடன்
நடமாடும் மனித தோல் போர்த்திய மோடியை பிரதமராக கற்பனை செய்வதுகூட
குற்றகரமானது. ஒரு வேளை பிரதமர் பதவிக்கு மோடி முன்னிறுத்தப்பட்டால் அதனை
தடுப்பது மனித நேயம் கடுகளகேனும் உள்ளத்தில் இடம் பெற்றிருக்கும்
இந்தியர்களுக்கு மிக முக்கிய கடமையாக அமையும்.

குஜராத் இனப்படுகொலை நிகழ்ந்து பத்து
ஆண்டுகள் கழிந்த பிறகும் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீரை துடைக்கவோ, நீதியை
பெற்றுத்தரவோ இயலவில்லை. இனப் படுகொலையில் பலியானவர்களின் இறப்பு சான்றிதழ்
கூட கிடைக்காத அவலம்.

பல்கீஸ் பானு வழக்கிலும், சர்தார்புரா
வழக்கிலும் மட்டுமே தீர்ப்பு வெளியாகியுள்ளது. ஏராளமான வழக்குகள்
நீதிமன்றங்களில் தூசு படிந்து குவிந்து கிடக்கின்றன. சட்டம் தனது கடமையை
நிறைவேற்றுவதை தடுப்பதற்கு பகீரத முயற்சிகளை மோடி மேற்கொண்டுள்ளார்.

காலம் தாழ்ந்தேனும் மோடிக்கு எதிராக
உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த மூத்த ஐ.பி.எஸ்
அதிகாரி சஞ்சீவ் பட்டை பணியிலிருந்து நீக்கினார். பழைய வழக்கு ஒன்றை தூசு
தட்டி எடுத்து பட்டை கைது செய்து சிறையில் அடைத்தார். நீதிமன்றம் பின்னர்
பட்டை பிணையில் விடுவித்தது.

முன்னால் சி.பி.ஐ தலைவர் ஆர்.கே.ராகவன்
தலைமையில் உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வு குழு(எஸ்.ஐ.டி)
மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
மோடியின் மனம் கோணாத வகையில் ஒரு கண் துடைப்பு விசாரணையை ஆர்.கே.ராகவனின்
தலைமையிலான எஸ்.ஐ.டி மோடியிடம் நடத்தியது .

தனிப்பட்ட ஆதாயங்களுக்காக ராகவன் மோடியை
பாதுகாக்க முனைந்துள்ளார் என்ற காங்கிரஸின் குற்றச்சாட்டு கவனிக்கத்தக்கது.
இந்திய வரலாறு காணாத அளவுக்கு கொடூரங்கள் அரங்கேறிய பிறகும் நீதி
கிடைக்காதது முஸ்லிம்களிடம் நிராசையை ஏற்படுத்தியுள்ளது.

பத்து ஆண்டுகளாக தனது கணவர் உள்பட
குல்பர்க் சொஸைட்டியில் உயிரோடு எரித்துக் கொலைச் செய்யப்பட்டவர்களுக்காக
சட்டரீதியான போராட்டத்தை தொடர்ந்த ஸாகியா ஜாஃப்ரி தான் தளர்ந்துவிட்டதாக
மனம் உடைந்து கண்ணீர் மல்க கூறுகிறார்.

இனப் படுகொலையை தொடர்ந்து சொந்த
கிராமங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டவர்கள் மீண்டும் தங்களது சொந்த
ஊருக்கு திரும்ப முடியாத அளவுக்கு பீதியும், மிரட்டலும் நிலவுகின்றன.
குஜராத்தில் ஹிந்துக்களின் வீடுகளையோ, நிலங்களையோ கூட முஸ்லிம்கள்
வாங்கக்கூடாது என்பதை தடுப்பதற்கு ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கம் தனியாக
ஒரு அமைப்பையே துவக்கியுள்ளது. பல இடங்களிலும் முஸ்லிம்கள்
ஒடுக்கப்பட்டும், சேரிப் பகுதிகளில் ஒதுக்கப்பட்டும் வாழ்க்கையை
கழிக்கின்றனர். அரசு திட்டங்களும், அடிப்படை வசதிகளும் இல்லாத பகுதிகளில்
வீடுகளை கட்டும் கட்டாயத்திற்கு முஸ்லிம்கள் ஆளாகின்றனர். இத்தகைய கடுமையான
கொடுமைகளையும், அநீதங்களையும், பாரபட்சங்களையும் எதிர்கொண்டு கூடுதல்
முன்னேறுவதற்கான வழிகளை குஜராத் முஸ்லிம் சமூகம் தேடியுள்ளது
ஆச்சரியமானதுதான்.

வியாபாரம், கல்வி உள்படபல துறைகளிலும்
கடந்த பத்து ஆண்டுகளில் அவர்கள் சொந்தமாக பெறுவதில் ஓரளவு வெற்றி
பெற்றுள்ளனர். ஒருவேளை இதர மாநிலங்களில் உள்ள முஸ்லிம்களுக்கும்
முன்மாதிரியாக அவர்கள் சுயமாக மோடி அரசின் எவ்வித உதவிகளும் இன்றி
முன்னேற்ற பாதையில் காலடி தடங்களை பதித்து வருகின்றனர். முஸ்லிம் இனப்
படுகொலைகளுக்கு பிந்திய சமுதாய மறுகட்டமைப்பு என்று இதனை அழைக்கலாம்.

சொந்த பிரச்சனைகளுக்கு சுயமாகவே தீர்வு
காணும் மனோநிலையை அவர்கள் பெற்றுள்ளார்கள். சல்லிக் காசுகள் கூட அரசு உதவி
இல்லாமல் ஆங்கில கல்வி பள்ளிக்கூடங்களையும், ஆதரவு நிலையங்களையும் அவர்கள்
கட்டியுள்ளார்கள். அரசு அதிகாரிகளின் தயவை நாடாமல் சொந்தமாகவே முயற்சிகளை
மேற்கொள்கின்றார்கள். 109 பேர் கோரமாக படுகொலைச் செய்யப்பட்ட நரோடா
பாட்டியாவில் ஆங்கில வழி கல்வி நிலையங்களிலும், மருத்துவக் கல்லூரிகளிலும்
முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தகர்க்கப்பட்ட கடைகளை புனர்
நிர்மாணித்துள்ளனர்.

இனப் படுகொலையில் கடுமையாக பாதித்த
அஹ்மதாபாத், வதோதரா ஆகிய இடங்களில் பல மாடி கட்டிடங்களையும்,
பங்களாக்களையும் முஸ்லிம்கள் கட்டியுள்ளனர். இது முஸ்லிம்களின்
தன்னம்பிக்கையின் வெளிப்பாடாக கருதலாம். ஆனால், ஹிந்துதுத்துவா
பயங்கரவாதிகள் அடங்கிவிட்டதாக அவர்கள் தப்புக் கணக்கு போடாமல் இருந்தால்
சரி. மீண்டும் ஒரு பயங்கரத்தை இந்த தேசம் சந்திக்க கூடாது. அதற்கு கல்வி
நிலையங்களையும், வியாபார மையங்களையும் கட்டினால் மட்டும் போதாது.
முக்கியமான ஒன்றை இந்தியாவில் வாழும் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் கவனத்தில்
கொள்ளவேண்டும். அதுதான் தன்னை பாதுகாத்துக்கொள்ளும் தற்காப்பு சிந்தனை.
இந்த எண்ணம் எப்பொழுது முஸ்லிம்களின் உள்ளத்தில் உறுதியாக பதிகின்றதோ
அன்றுதான் முஸ்லிம்களுக்கு கண்ணியம் கிடைக்கும். துயரங்களை அனுபவிப்பதும்,
கண்ணீரை சிந்துவதும் முஸ்லிம்களின் வாடிக்கையாக மாறிவிடக் கூடாது. தங்களது
உயிரையும், சொத்துக்களையும், வழிப்பாட்டுத் தலங்களையும், தங்களது
சொந்தங்களின் மானத்தையும் பாதுகாக்க இந்தியாவில் வாழும் முஸ்லிம் சமூகம்
சுயமாக பலம் பெறவேண்டும்.

குஜராத்தில் நடந்த கோர நிகழ்வுகளுக்கு 10
ஆண்டுகள் நிறைவுறும் வேளையில் முஸ்லிம்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய
முக்கியமான பாடம் இதுவேயாகும்.

அ.செய்யது அலீ.


குஜராத்:ஆறாத ரணங்கள்! தண்டிக்கப்படாத குற்றவாளிகள்! தீர்வுதான் என்ன?  Logoto

முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10898
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» இஸ்லாம் என்றால் என்ன? ஈமான் என்றால் என்ன? இவற்றிக்கிடையே உள்ள வேறுபாடு என்ன?
» குஜராத் கலவர ஆவணங்கள் பாதுகாப்பாக உள்ளன: குஜராத் அரசு பல்டி
» அணு விஞ்ஞானி கொலை:குற்றவாளிகள் கைது – ஈரான் அறிவிப்பு
» தேடப்படும் குற்றவாளிகள்:மரணித்தவர்களும் பட்டியலில் இடம் பிடித்த அதிசயம்
» ஜார்ஜ் புஷ், டொனி பிளேயர் இருவரும் போர்க் குற்றவாளிகள் என மலேசிய நீதிமன்றம் தீர்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum