மகனுக்கு ஒரு மடல் ! (வலை குடா வாழ் அன்பர்களுக்கு )

Go down

மகனுக்கு ஒரு மடல் ! (வலை குடா வாழ் அன்பர்களுக்கு )

Post by srivai.khader on Sun Mar 25, 2012 10:42 pm

பாலை மணல் பணம் தேடி கண்ணே - என்
இளமை எல்லாம் தொலைகிறது இங்கே

சோலை மலர் உன் வளமை அங்கே -உன்
சொல் அழகை கேட்டிடனும் எங்கே

இருள் சூழ்ந்து பகல் மறைந்த போதும் - கண்ணே
உன் இளமை வளம் தான் கண்முன்னே தோன்றும்

நீ கருவுற்று மாதங்கள் ஆறு - நான்
பொருள் ஈட்ட புறப்பட்டேன் அரபு நாடு

காசு மோகம் யாரை விட்டது பாரு - இங்கே
என் வேர்வை கூட முதுமை ஆனது கேளு

நீ பிறந்து விட்ட செய்தி மடல் கண்டேன் - என்
பேராசையும் உனை பார்த்து விட எண்ணும்

இங்கே நிலமைகளை யோசித்து தினமும்
செத்துவிடும் என் ஆசைகள் திண்ணம்

வள்ர் பி‌றையே வான் நிலவே கண்ணே
வாப்பாவின் மடல் கண்டு அமைதி கொள் முன்னே !


-ஸ்ரீவை.காதர்-
srivai.khader
srivai.khader
Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 91
ஸ்கோர் ஸ்கோர் : 2946
Points Points : 26
வயது வயது : 57

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum