முஸ்லிம்களுக்கு ஏற்படும் பாதிப்புகளின் பிரதிபலிப்பு பெண்கள், குழந்தைகளிடம்தான் தாக்கத்தை ஏற்படுத்துகிறது – NWF-ன் தமிழக தலைவர் ஃபாத்திமா தூது ஆன்லைனுக்கு அளித்த சிறப்பு பேட்டி!

View previous topic View next topic Go down

முஸ்லிம்களுக்கு ஏற்படும் பாதிப்புகளின் பிரதிபலிப்பு பெண்கள், குழந்தைகளிடம்தான் தாக்கத்தை ஏற்படுத்துகிறது – NWF-ன் தமிழக தலைவர் ஃபாத்திமா தூது ஆன்லைனுக்கு அளித்த சிறப்பு பேட்டி!

Post by முஸ்லிம் on Sun Jun 24, 2012 4:26 pm

முஸ்லிம் ஆயுள் கைதிகளில் 7 ஆண்டுகளை
சிறையில் கழித்தவர்களை விடுதலைச் செய்யக்கோரி நேசனல் விமன்ஸ் ஃப்ரண்ட்
சார்பாக சென்னை, மதுரை, கோவை, நெல்லை ஆகிய நகரங்களில் இன்று(ஜூன்24)
ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடைபெறுகிறது. இதுக்குறித்து நேசனல் விமன்ஸ்
ஃப்ரண்டின் தமிழக தலைவர் ஃபாத்திமா அவர்கள் தூது ஆன்லைனுக்கு அளித்த
சிறப்பு பேட்டியை வெளியிடுகிறோம்.

கேள்வி
1: சிறைக்கைதிகள் குறித்து பெரும்பாலான சமுதாய அமைப்புகள் எவ்வித
அக்கறையும் செலுத்தாத வேளையில் பெண்கள் அமைப்பான NWF இந்த பிரச்சனையை
கையில் எடுத்ததன் பின்னணி குறித்து கூற இயலுமா?


பதில்:அரசாங்கத்தாலும்,
அதிகார வர்க்கத்தினாலும் இன்று அதிகமாக முஸ்லிம்கள் தான் பாதிக்கப்பட்டு
கொண்டிருக்கிறார்கள். இந்த பாதிப்புகளின் பிரதிபலிப்பு எங்கே தெரிகிறது
என்றால் பெண்களிடமும், குழந்தைகளிடமும்தான்.

NWF ஆயுள் சிறைவாசிகளுக்கான போராட்டத்தை
இப்பொழுது மட்டும் நடத்தவில்லை. கடந்த 2010-லும் 7 ஆண்டுகள் கழிந்த ஆயுள்
சிறைவாசிகளை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

2006-ல் கோவையை தகர்க்க சதி என்ற பொய்
காரணத்தை கூறி உளவுத்துறை AC ரத்தின சபாபதி மூலம் அப்பாவி முஸ்லிம்
இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் அரசு நியமித்த சி.பி.சி.ஐ.டி
விசாரணையில் ரத்தினசபாபதி போலி நாடகம் ஆடியது தெரியவந்தது. ஆனால்,
ரத்தினசபாபதி நடவடிக்கை எடுக்காமல் அரசு பதவி உயர்வு அளித்ததை கண்டித்தும்
அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தொடர் போராட்டங்கள்நடத்தப்பட்டு
வந்தன. இந்நிலையில் NWF சார்பாகவும் 2011-ஆம் ஆண்டு ரத்தின சபாபதியை பதவி
நீக்கம் செய்யக்கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தற்பொழுது எங்களின் அடுத்த கட்ட
முயற்சியாகதான் ஜூன் 24-ல், 7 ஆண்டுகள் கழிந்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை
செய்யக் கோரி பேரணி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.

எல்லோரும் பாதிப்புகளை மேலோட்டமாக
பார்க்கிறார்கள். அந்த பாதிப்பின் பிரதிபலிப்பு பெண்களிடமும்,
குழந்தைகளிடமும் இருப்பதை யாரும் கவனிப்பதில்லை. எனவே பாதிக்கப்பட்ட
சகோதரிகளுக்காக வேண்டி பெண்கள் இயக்கமான NWF இந்த போராட்டத்தை நடத்த முடிவு
செய்துள்ளது.

கேள்வி 2: முஸ்லிம் கைதிகளுக்கு மட்டும்அரசு பாரபட்சம் காட்டுவதாக நீங்கள் எதன் அடிப்படையில் குற்றம் சாட்டுகின்றீர்கள்?

பதில்:
நீதிபதி சச்சார் அறிக்கை, இந்தியாவில் முஸ்லிம்கள் தங்களின் மக்கள்
விகிதாச்சாரத்தை விட அதிகமாக சிறையில் இருப்பதாக கூறுகிறது. இன்றும்
1992-ல் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதை தொடர்ந்தும் 1993-ஆம் ஆண்டிலும்
கலவரத்தை நடத்தியவர்கள் ஆர்.எஸ்.எஸ், சிவசேனா அமைப்பினர் ஆவர். ஆனால் அதில்
பாதிக்கப்பட்டவர்களும் முஸ்லிம்கள், அதிகமாக சிறையில் இருப்பவர்களும்
முஸ்லிம்கள் என ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் கூறுகிறது.

இன்றும் ஆயுள் கைதிகளில் 90% பேர் விசாரணை கைதிகளாக உள்ளனர். அவர்கள் தீவிரவாதிகளைப் போல் பார்க்கப்படுகிறார்கள்.

அதுமட்டுமல்ல கடந்த 2008-ல் பேரறிஞர்
அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 7 ஆண்டுகள் கழிந்த 1405 ஆயுள்
சிறைவாசிகளை தி.மு.க அரசு விடுதலை செய்தது. இதில் ஒரு முஸ்லிம் ஆயுள் கைதி
கூடஇல்லை. மற்ற கைதிகள் எல்லாம் எந்த பாதுகாப்பும் இன்றி பரோலில்
செல்கிறார்கள். ஆனால் முஸ்லிம்களுக்கு பரோல் கூட இல்லை. அப்படியே பரோலில்
விட்டாலும் காவல்துறையின் கடுமையான கெடுபிடியில் தான் செல்ல வேண்டியுள்ளது.

கேள்வி
3:கடந்த தி.மு.க ஆட்சியில் அண்ணாபிறந்த நாளையொட்டி கைதிகள் விடுதலைச்
செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த இன்றைய தமிழக முதல்வரான ஜெயலலிதா
உங்களது கோரிக்கைக்கு செவி சாய்ப்பாரா?


பதில்:எதிர்க்கட்சி
என்ற அடிப்படையில் முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்து இருக்கலாம்.
ஏனெனில் 1991-ஆம் ஆண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசு
பொறுப்பேற்ற பிறகு, பிப்ரவரி 24 அன்று முதலமைச்சரின் பிறந்த நாளை
முன்னிட்டு 1992, 1993 மற்றும்1994 ஆகியவருடங்களில் பல ஆண் மற்றும் பெண்
சிறைக் கைதிகளை பொது மன்னிப்பில் தமிழக அரசு விடுதலை செய்துள்ளது.

1996-ஆம் ஆண்டு உலகத்தமிழ் மாநாட்டை
முன்னிட்டு 3 முதல்10 ஆண்டுகள் வரைகழிந்த ஆயுள் சிறைவாசிகளை அ.தி.மு.க அரசு
விடுதலை செய்துள்ளது. எனவே முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்தது ஒரு
அரசியல் ஆதாயமாக இருக்கலாம் என்று நினைக்கிறோம்.

கேள்வி 4: உங்களது போராட்டத்திற்கு சமுதாய அமைப்புகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளிடமிருந்து ஆதரவு கிடைத்துள்ளதா?

பதில்:நாங்கள்
எல்லா சமுதாய அமைப்புகளிடமும் ஆதரவு கேட்டுள்ளோம். பாப்புலர் ஃப்ரண்ட்
ஆஃப் இந்தியா மற்றும் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI)
போன்ற சமுதாய அமைப்பு மற்றும் அரசியல் கட்சி ஆதரவு தந்துள்ளது.

மற்ற அமைப்புகள் இப்பொழுது எங்களுக்கு ஆதரவு தராவிட்டாலும், பின்னால் எங்களுக்கு ஆதரவு தருவார்கள் என்று நம்பிக்கை வைக்கிறோம்.

கேள்வி
5: கோவை சிறைவாசிகளை விடுதலைச்செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தமிழகத்தின்
முன்னணி முஸ்லிம் இயக்கங்களான பாப்புலர் ஃப்ரண்ட், த.மு.மு.கஆகியன கடந்த
சில ஆண்டுகளாக எழுப்பி வருகின்றன. ஆனால், உங்கள் கோரிக்கை 49 முஸ்லிம்
கைதிகளை மட்டும் விடுதலைச்செய்ய வேண்டும் என்பதாகும். இதில் முரண்பாடு
தென்படுகிறதே?


பதில்:இதில்
முரண்பாடு எதுவும் இல்லை. 49 பேரில் கோவை சிறைவாசிகளும் அடங்குவர்.
குறிப்பாக 49 ஆயுள் சிறைவாசிகளை மட்டும் ஏன் விடுதலை செய்ய கோருகின்றோம்
என்றால் ஆயுள் கைதிகளை இத்தனை வருடம்தான் சிறைச்சாலையில் வைக்க வேண்டும்
என்று சட்டம் இல்லை. இவர்கள் பலஆண்டுகளாக சிறைச்சாலையில் வாடி
வதங்குகின்றனர். அவர்களுக்கு பரோல் கூட இல்லை. சரியான மருத்துவ வசதிகள்
இல்லை. குடும்பத்தாரரை நிம்மதியாக பார்க்க முடியாது. அவர்களின் எதிர்கால
வாழ்க்கையைப் பார்க்கும் போது வெறும் வெற்றிடமாகத் தான் உள்ளது. எனவே
எங்கள் போராட்டத்தின் முதல் கட்டமாக ஆயுள் கைதிகளுக்கு முக்கியத்துவம்
கொடுத்துள்ளோம். இனி வரும் காலங்களில் மற்ற கைதிகளுக்காகவும் இன்ஷா அல்லாஹ்
குரல் கொடுப்போம்.

கேள்வி
6: ஜூன் 26-ஆம் தேதி சித்திரவதை எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
அந்த தினத்தில் உங்கள் போராட்டத்தை நடத்தியிருக்கலாமே?


பதில்:ஜூன்
26-ஆம் தேதி உலக சித்ரவதைக்கு எதிரான தினத்தன்று இந்த பேரணியும்
ஆர்ப்பாட்டமும் நடத்தி இருந்தால் மிகச் சிறந்ததாக இருந்திருக்கும். இதில்
எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இருந்தாலும் பெண்களை வைத்து நடத்துவதால்
பெண்களின் வசதிக்கு ஏற்ப ஜூன் 24, ஞாயிற்றுக்கிழமை நடத்துகிறோம்.

கேள்வி
7: ‘சிறைச்சாலை என்றும் துன்புறுத்தும் இடமல்ல, சீர்படுத்தும்இடம்’
என்பதுதான் உலகெங்கும் உள்ள மனிதநேய மாண்பாளர்கள் ஏற்றுக்கொண்ட
கருத்தாகும். ஆனால் அவை இந்தியாவில் சித்திரவதைக் கூடங்களாக மாறிவருவது
குறித்து என்ன கூற விரும்புகின்றீர்கள்?


பதில்:சிறைச்சாலை
துன்புறுத்தும் இடமல்ல, சீர்படுத்தும்இடம் என்று மனித நேய மாண்பாளர்கள்
கூறுவதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. சிறைச்சாலையில் மரணங்கள்
நிகழ்வது குறித்து நாம் செய்திகளில் கண்டுவருகிறோம்.

அனைத்து மனித ஆர்வலர்கள், சமுதாய
அமைப்புகள் ஒன்று சேர்ந்து ஒருமித்து போராடினால் சீர்திருத்த சட்டங்களை
கொண்டுவர முடியும். அப்படி ஒரு காலம் வந்தால் இன்ஷா அல்லாஹ் NWF –ம் இந்த
போராட்டத்தில் முன்னிலையில் நிற்கும்.

கேள்வி
8: உங்கள் இயக்கம் சார்பாக பெண்கள் முன்னேற்றம், பெண்களுக்கு
இழைக்கப்படும் அநீதிகளை தடுத்து நிறுத்துவது தொடர்பாக ஏதேனும் திட்டங்கள்
உள்ளனவா?


பதில்:இதுவரைக்கும்
பெண்களின் முன்னேற்றம் மற்றும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை
தடுத்து நிறுத்தும் விதமாக மார்ச் மாதம் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு,
மது மற்றும் ஆபாசம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை எதிர்த்து பேரணிகள்,
ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள் நடத்தியுள்ளோம்.

பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும்
விதம் மருத்துவ முகாம்கள், கவுன்சிலிங் என்று பல நிகழ்ச்சிகளை நடத்தி
வருகிறோம். மேலும் பெண்கள் ஒழுக்க சீலர்களாக, மகிழ்ச்சியான குடும்பமாக வாழ
மாதாந்திர பாட வகுப்புகள் நடத்தி வருகிறோம். இன்ஷா அல்லாஹ் காலத்திற்கு
ஏற்றவாறு பல திட்டங்களை வரும் காலங்களில் செயல்படுத்துவோம்.


"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.
avatar
முஸ்லிம்
FOUNDER
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
மதிப்பெண் மதிப்பெண் : 8583
மதிப்பீடு மதிப்பீடு : 42
வயது வயது : 29
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum