துஆ கேட்பது எப்படி?

Go down

துஆ கேட்பது எப்படி?

Post by முஸ்லிம் on Wed Jul 28, 2010 2:39 pm
சந்தேகமின்றி ஒருவிசுவாசி, எல்லா நிலைகளிலும் எங்கிருந்த போதிலும் அவனுடைய இறைவனிடமே பிரார்த்திக்கவேண்டும். அந்த தூய்மையான இறைவன் தன் அடியார்களுக்கு மிக சமீபத்தில் இருக்கின்றான்.உயர்வானவனாகிய அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.

(நபியே!) என்அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; "நிச்சயமாக நான் சமீபமாகவேஇருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால்விடையளிக்கிறேன். அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும், என்னையேநம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்" என்று கூறுவீராக.
(அல்குர்ஆன் 2: 186)

இன்னும் உங்களுடையஇரட்சகன் கூறுகிறான், நீங்கள் என்னையே அழை(த்துப் பிரார்த்தி)யுங்கள், நான்உங்களு(டைய பிரார்த்தனை)க்கு பதிலளிப்பேன். நிச்சயமாக, என்னை வணங்குவதை விட்டும்பெருமை அடிக்கிறார்களே, அத்தகையோர் அவர்கள் இழிவடைந்தவர்களாய் நரகம்புகுவார்கள்.
(அல்-குர்ஆன் 40: 60)

உயர்ந்தவனாகியஉங்களின் இரட்சகன் வெட்கமுள்ளவன், சங்கையானவன் அவனிடன் இருகைகளையும் உயர்த்தினால் (பிரார்த்தித்தால்) அவ்விரண்டையும் வெறுமையாகதிருப்பிவிடஅவன் வெட்கப்படுகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாவம்சம்பந்தப்படாத இரத்த பந்தத்தை துண்டிக்காத விஷயத்தில் எந்த ஒரு முஸ்லிமாவதுபிரார்த்தனை செய்தால் அல்லாஹ் அவனுக்கு மூன்றில் ஒன்றை கொடுக்காமலில்லை,

1. அவனின்பிரார்த்தனையை உடன் ஏற்றுக் கொள்கின்றான்.
2. அல்லது (அப்பிரார்த்தனையை ஏற்றுக்கொள்ளாமல்) அதனுடைய நன்மையை மறுமைக்காக சேகரித்து வைக்கின்றான்.
3. அல்லதுஅப்பிரார்த்தனையைப் போன்று (அவனுக்கு நேரவிருந்த) ஒரு ஆபத்தை தடுத்து விடுகின்றான்என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், அப்படியானால் நாம் அதிகம்பிரார்த்தனை செய்வோமே என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ்விடம் மிகவும்அதிகம் இருக்கின்றது எனக்கூறினார்கள்.

ஆகவே வல்ல இறைவன்அல்லாஹுவிடம் அதிகமதிகம் பிரார்த்தனை செய்ய வேண்டும். குறிப்பாக பாவமன்னிப்புத் தேடவேண்டும். அவன் நமது பிரார்த்தனைகளை ஏற்று எங்களின் பாவங்களையும் மன்னிப்பான்.

ஆனாலும், குறிப்பாகஇங்குகூறப்படும் நேரங்கள், நிலைகள், இடங்களில்பிரார்த்தனைகளை அதிகமாகசெய்ய வேண்டும். அதேபோன்றுபிரார்த்தனை செய்யும் முறைகளைப் பேணி நாமும் பிரார்த்தித்தால் அல்லாஹ்நம்பிரார்த்தனைகளை ஏற்றுக்கொள்வான்


பிரார்த்தனை செய்யும் ஒழுக்கங்கள்1. தூய மனதோடுபிரார்த்தனை செய்ய வேண்டும்.

2. பிரர்த்தனையைத் துவங்கும் போதும், முடிக்கும் போதும்அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துக் கூறி பிரார்த்தனைசெய்ய வேண்டும்.

3. பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடும், உறுதியோடும்பிரார்த்தனை செய்ய வேண்டும்.

4. அவசியத்தைக்கூறிபிரார்த்திக்க வேண்டும். பிரார்த்தனையில் அவசரப்படக்கூடாது. (அதாவது அல்லாஹ்விடம்ஒன்றிரண்டு முறைகள் பிரார்த்தனை செய்து, கேட்டது கிடைக்கவில்லையானால், அல்லாஹ்வின்மீது அவநம்பிக்கை கொண்டு, பிரார்த்தனையை விட்டுவிடுவதுகூடாது)

5. உள்ளச்சத்தோடுபிரார்த்திக்க வேண்டும்.

6. சந்தோஷநேரத்திலும், கஷ்ட நேரத்திலும் பிரார்த்திக்க வேண்டும்.

7. அல்லாஹ்வைத்தவிர வேறு யாரிடமும் பிரார்த்திக்கக் கூடாது.

8. தன் குடும்பம், பொருள், பிள்ளை மற்றும் தனக்கும் கேடாகபிரார்த்தனை செய்யக் கூடாது.

9. சத்தத்தைமிகவும் உயர்த்தாமலும் மிகவும் குறைக்காமலும் அவ்விரண்டிற்கும் மத்தியில், நடுநிலையோடு பிரார்த்தனை செய்ய வேண்டும்.

10. செய்த பாவத்தைமனப்பூர்வமாய் ஏற்று, அதற்காக பிழை பொறுப்புத் தேடி, அல்லாஹ் அவருக்கு அளித்தஅருட்கொடைகளை உளமாற ஒப்புக்கொண்டு, அவற்றிற்காக அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தவேண்டும்.

11. துஆச் செய்யும் போது அளவுக்கு மேல் சிரமத்தை மேற்கொள்ளாமல்இருக்க வேண்டும்.

12. தெளிவான உள்ளத்தோடும் பயபக்தியோடும் அல்லாஹ்வின் அருள் மீதுநம்பிக்கை வைத்து, அவனது தண்டனையிலிருந்து பயந்து பிரார்த்தனை செய்யவேண்டும்.

13. மற்றவர்களின்பொருளை எடுத்து அல்லது அவர்களுக்கு அநியாயம் செய்திருந்தால் அந்தப் பொருட்களைஉரியவர்களிடம் திருப்பிக் கொடுத்து அவர்களிடம் மன்னிப்புக் கேட்டபின்அப்பாவத்திற்காக தவ்பாச் செய்ய வேண்டும்.

14. (பிரார்த்திற்கும் ஒவ்வொன்றையும்) மும்மூன்று தடவை பிரார்த்திக்க வேண்டும்.

15. கிப்லாவைமுன்னோக்க வேண்டும்.

16. பிரார்த்தனைசெய்யும்போது கைகளை உயர்த்த வேண்டும்.

17. முடியுமாகஇருந்தால் துஆச் செய்வதற்கு முன் ஒழுச் செய்து கொள்ள வேண்டும்.

18. ஒழுக்கத்துடன்அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யவேண்டும். "துஆ" ஒரு வணக்கம் என்பதாக நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
19. முதலில்தனக்காக பிரார்த்தித்து பின்பு மற்றவர்களுக்காக பிரார்த்திக்க வேண்டும். (இறைவா! எனது பாவங்களையும், இன்னாருடைய பாவங்களையும்மன்னிப்பாயாக என்று கேட்பது போல்).

20. அல்லாஹ்வின்அழகிய திருநாமங்கள் மற்றும் அவனுடைய உயர்ந்த பண்புகளைக் கொண்டு அல்லது தான் செய்தநல்அமல்களைக் கொண்டு அல்லது உயிரோடு வாழக்கூடியநல்லவர்களிடம் (தனக்காக) பிரார்த்தனை செய்யும்படி கேட்டு (இஸ்லாத்தில் வஸீலாதேடுவதற்கு அனுமதிக்கப்பட்ட இம்மூன்று வகைகளில் ஒன்றைக் கொண்டு) அல்லாஹுவிடம் உதவி (வஸீலா) தேடவேண்டும்.

21. உணவு, குடிபானங்கள் அணியும் ஆடை இவைகள் ஹலாலானவைகளாக இருக்கவேண்டும்.

22. பாவமானகாரியங்களுக்காக அல்லது இரத்த உறவுகளை முறிப்பதற்காக பிரார்த்தனை செய்யக்கூடாது.

23. பிரார்த்தனைசெய்பவர் நன்மையை ஏவி தீமையைத் தடுத்து பாவங்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொண்டவராக இருக்க வேண்டும்.

பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்கள்1. இரவின் நடுப்பகுதி

2. இரவில் கடைசிமூன்றாவது பகுதி

3. ஒவ்வொரு தொழுகையின் கடைசி நேரத்தில் (அதாவது அத்தஹியாத்தில்ஸலாம் கொடுப்பதற்கு முன்பு)

4. அதானுக்கும் இகாமத்திற்கும் மத்தியில்

5. பர்ளான தொழுகைக்கு அதான் சொல்லப்படும் போது

6. மழை பொழியும் போது

7. உண்மையான (நம்பிக்கையான) எண்ணத்துடன் ஸம்ஸம் தண்ணீரைக் குடிக்கும் போது

8. (தொழுகையில்)ஸுஜூது செய்யும் போது

9. ஒரு முஸ்லிம் தன்னுடைய இன்னொரு முஸ்லிம் சகோதரருக்குசெய்யும் பிரார்த்தனை

10. அரஃபாவுடைய நாளில் செய்யும் பிரார்த்தனை

11. தந்தைபிள்ளைகளுக்கும், பிள்ளைகள் தந்தைக்கும் செய்யும் பிரார்த்தனை

12. பிரயாணியின் பிரார்த்தனை

13. பெற்றோருக்குக் கட்டுப்பட்டு நடக்கும் பிள்ளையின்பிரார்த்தனை

14. சிறிய ஜம்ராவிற்குக் கல் எறிந்தபிறகுகேட்கும் பிரார்த்தனை

15. நடு ஜம்ராவிற்குக் கல் எறிந்த பிறகுகேட்கும் பிரார்த்தனை

16. கஃபாவிற்குள் கேட்கும்பிரார்த்தனை. ஹிஜ்ருக்குள் (கஃபத்துல்லாஹ்வை ஒட்டிஇருக்கும் அரைவட்ட வடிவத்திற்குள்) யார் தொழுகின்றாரோ அவர் கஃபாவிற்குள்தொழுதவரைப் போல் கணக்கிடப்படுவார்.

17. ஸஃபா மற்றும் மர்வா மலைகள் மீது கேட்கும்பிரார்த்தனை.

18. (முஸ்தலிஃபாவிலுள்ள) மஷ்அருள் ஹராம் என்னுமிடத்தில் கேட்கும்பிரார்த்தனை

19. நோன்பாளியின் பிரார்த்தனை.

20. நோன்பு திறக்கும் நேரத்தில்கேட்கும் பிரார்த்தனை


avatar
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 8963
Points Points : 42
வயது வயது : 30
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

Re: துஆ கேட்பது எப்படி?

Post by rabikmoulana on Sun Oct 09, 2011 2:40 am

மிகவும் பயனுள்ளதாக இருந்தது .
avatar
rabikmoulana
New Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2
ஸ்கோர் ஸ்கோர் : 2627
Points Points : 2
வயது வயது : 43

View user profile

Back to top Go down

Re: துஆ கேட்பது எப்படி?

Post by முஸ்லிம் on Sun Oct 09, 2011 12:28 pm

சகோ
avatar
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 8963
Points Points : 42
வயது வயது : 30
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

Re: துஆ கேட்பது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum