தர்காவின் மோகம் !

Go down

தர்காவின் மோகம் !

Post by srivai.khader on Mon Mar 25, 2013 7:10 pm

தர்காவின் மோகம் கொண்டு
துனியாவிலே ஒரு கூட்டம்

இன்னும் மண்ணறை மேல்
இவர்கள் நாட்டம்

வியாழன் மாலை நேரம் - இங்கு
ஈமானை இழந்த நெஞ்சம்

பூ , பழம் , பத்தி புத்தாடை பூண்டு
தட்டுடன் தரிசனம் வேண்டி

மண்ணறை மேல் மண்டி இடுவார்கள்
மயில் இறகில் ஆசி பெறுவார்கள்

கலிமா சொன்ன கல்பு - இன்று
மறையோனை மறந்து நின்று

இறைவனுக்கு சிபாரிசு இல்லை
இன்னுமா உங்களுக்கு புரிய வில்லை

இணைவைப்பது பெரும் பாவம்
அல்லாஹுவிடம் ஏற்படுத்தும் கோபம்

அழுது , தொழுது கேளுங்கள்
அல்லாஹுவிடமே உங்கள் வேண்டுதலை

அவனே படைத்து பரிபாலிப்பவன் - இன்னும்
வணக்கத்துக்குரியவன் அவன் ஒருவனே !

=ஸ்ரீவை.காதர் =

srivai.khader
srivai.khader
Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 91
ஸ்கோர் ஸ்கோர் : 2946
Points Points : 26
வயது வயது : 57

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum