மௌத்தையே நீ மறந்தது .................... !

Go down

மௌத்தையே நீ மறந்தது .................... !

Post by srivai.khader on Mon Mar 25, 2013 7:15 pm

மரணம் வரும் நமக்கு - அது
மறுமை நாள் கணக்கு

இதை மறந்து வாழும் நமக்கு
அல்லாஹுவின் பயம் எதுக்கு

துனியா வாழ்வு இல்லை நிரந்தரம்
பொழுதை களித்தோம் தினம் தினம்

தூங்கி எழுவோம் நிலையில்லை
தூங்கும் முன் நமக்கு பயமில்லை

கலிமா சொல்லி நம் கல்பு -இன்று
மறந்த நிலை கொண்டு

கலங்கிடும் நாள் அருகில் உண்டு
வரும் முன் தொழுதிடுவோம் நின்று

கடமைகள் நமக்கு ஐந்து -இதை
நிறைவு செய்தோமா என்று

நமக்குள் கேள்வி உண்டு - அந்த
மறுமையை நினைவு கொண்டு

நிச்சயம் மரணம் வரும் நமக்கு
இறுதி நாள் கேள்வி கணக்கு

மௌத்தையே நீ மறந்து வாழ்வதகுமா ?

ஸ்ரீவை.காதர்

avatar
srivai.khader
Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 91
ஸ்கோர் ஸ்கோர் : 2904
Points Points : 26
வயது வயது : 57

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum