உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் .........

Go down

உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் .........

Post by srivai.khader on Thu Jul 18, 2013 1:02 pm

உலகம், உறவு மதிக்கும் உன்னை
உன் நிலை நல்ல உயர்வில் இருந்தால்

தாழ்வு நிலை வந்துவிட்டால் – இனி
வாழும் உலகம் உன்னை ஏசும்

உன்னை கொண்டு வேலை இருந்தால்
வாழ்த்தும் உன்னை போற்றும்

முடிந்த பின்னால் உன்னை தேடாது
பழி போட்டு பாவமாய் தூற்றும்

உலகம் எல்லாம் இப்படி என்றால்
உறவுகளும் பார்க்கும் அப்படித்தான்

இட்டுக்கட்டி கதைகள் பேசும் – இன்னும்
இல்லாததை சொல்லி காட்டும்

காசு உள்ளவனிடம் கருத்து கேட்கும்
வெள்ளை காக்கா என்று கண்முடி பேசும்

உண்மையை கூற நாவு கூசும் –இன்னும்
பொய்யை கூறி அதை நம்ப செய்யும்

உலகம் ஒரு நாடக மேடை –இங்கே
நம்பாத உறவும், ஏமார்ந்த நிலையும்

தாழ்ந்தவனை உயர்த்தாது மனத்தால்
வாழ்பவனை வாழ்த்தும் புகழ் தரத்தால்

உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
உறவு உன்னை மிதிக்கும் ........................

பெற்ற அனுபவம் கொண்டு
உங்களோடு பகிர்ந்து கொள்ளும்
¬¬-ஸ்ரீவை.காதர்-


மு.அ.காதர்.
avatar
srivai.khader
Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 91
ஸ்கோர் ஸ்கோர் : 2673
Points Points : 26
வயது வயது : 56

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum