தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஏணிப்படிகள் !

Go down

ஏணிப்படிகள் !   Empty ஏணிப்படிகள் !

Post by srivai.khader Thu Jul 18, 2013 1:29 pm

ஓவ்வொருவர் வாழ்விலும் உயர்விற்கு-அன்று
யாரவது ஒருவர் ஏணிப்படியாய் ! ஏறி செல்ல

இது சாய்ந்த நிலையில் இருந்தாலும் ஏறியவர்
நிலை மட்டும் என்றும் தாழ்வதில்லை

கற்ற கல்வியும் ,பெற்ற திறமையையும் போதாது
நல்ல வழிகாட்டுதல் இன்னும் தேவையாகிறது

நல்ல எண்ணம் வேணும் செய்ய மனது வேண்டும்
எல்லோருக்கும் இருப்பதில்லை எண்ணம் மட்டும்

எல்லோரும் சொல்வார் நானும் நினைத்தேன் என்று
இது பெருமைக்கு கூறி கொள்ளும் சிறுமை

உறவு வேண்டும் உரிமை கொண்டு – இன்னும்
செய்யும் எண்ணம் மனதில் கொண்டு

தாழ்ந்த குடும்பம் உயர வேண்டி – அங்கே
உயர்ந்த உள்ளம் ஏணிப்படியாய் வாழ்வில்

ஏறி சென்றவர்கள் திரும்பி பார்ப்பதில்லை –இந்த
ஏறி ஏணி வாழ்ந்துவரும் உயர்வு நிலையும்

இன்று ஏணி துரு பிடித்த நிலையில் இருந்தாலும்
ஏறி சென்றவர் பேசுவார் பெருமையாக ஒரு நாள்

ஏற்றி விட்டதால் ஏணிக்கு ஒரு மகிழ்மை
ஏறி வந்தவனுக்கு நல்ல வாழ்வாள் வளமை

மாற்றம் தந்த இறைவனுக்கே எல்லா பெருமை............

-ஸ்ரீவை.காதர்-

srivai.khader
srivai.khader
Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 91
ஸ்கோர் ஸ்கோர் : 4858
Points Points : 26
வயது வயது : 62

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum