தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இறைவனை நெருங்குவதற்குரிய வழி (வஸீலா)

Go down

இறைவனை நெருங்குவதற்குரிய வழி (வஸீலா) Empty இறைவனை நெருங்குவதற்குரிய வழி (வஸீலா)

Post by முஸ்லிம் Fri Dec 10, 2010 4:57 pm

S.அஸ்லம். இலங்கை




يَا
أَيُّهَا الَّذِينَ آمَنُواْ اتَّقُواْ اللّهَ وَابْتَغُواْ إِلَيهِ
الْوَسِيلَةَ

மூமின்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவன் பால் நெருங்குவதற்குரிய வழியைத் (வஸீலா)
தேடிக்கொள்ளூங்கள்,  (அல்குர்ஆன் 5:35)


வஸீலா
என்றால் அரபி அகராதியில் ஏணி, துணைச்சாதனம் என்ற அர்த்தத்தை கொண்டிருக்கிறது. வல்ல அல்லாஹ் நமக்கு
மூன்று வகையான வஸீலாக்களை அனுமதித்துள்ளான்.

1, இறைவனின் அழகிய திருநாமங்களைக் கொண்டு வஸீலா தேடுதல்.


2, நம்முடுடைய ஸாலிஹான நல்ல அமல்களைக்கொண்டு வஸீலா தேடுதல்


3, ஸாலிஹான செயல்களையுடைய அடியார்களிடம் அவர்கள் உயிருடன் இருக்கும் பொழுது நமக்காக துஆ செய்யச்
சொல்லி வஸீலா தேடுதல்.



وَلِلّهِ
الأَسْمَاء الْحُسْنَى فَادْعُوهُ بِهَا وَذَرُواْ الَّذِينَ يُلْحِدُونَ
فِي أَسْمَآئِهِ سَيُجْزَوْنَ مَا كَانُواْ يَعْمَلُونَ


அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன. அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள்.அவனுடய
திரு நாமங்களில் தவறிழைப்போரை(புறக்கணித்து) விட்டு விடுங்கள். அவர்களுடைய  செயல்களுக்காக
அவர்கள் தக்க கூலி கொடுக்கப்படுவார்கள். (அல்குர்ஆன் 7:180) 
மேற்சொன்ன வசனத்தின் வாயிலாக இறைவனது அழகிய திருநாமங்களைக் கூறி பிறார்த்தித்து "வஸீலா"
தேடுவதற்கு அனுமதி இருப்பதை காணலாம்.


وَاسْتَعِينُواْ بِالصَّبْرِ وَالصَّلاَةِ

 நீங்கள் பொருமையைக்கொண்டும், தொழுகையைக்கொண்டும் அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள். (அல்குர்ஆன்
2:45) பனூ இஸ்ரவெல் காலத்தில் நடந்ந குகையில் அடைப்பட்ட மூன்று நபர்களின் சம்பவம் ஸாலிஹான நல் அமல்களைக்
கொண்டு வஸீலா தேடுவதற்கு ஒரு சரியான எடுத்துக்கட்டாகும்.




கடுமையான  மழையின்  காரணமாக  மூவர்  ஒரு  குகையினுள்  ஒதுங்கிய  போது,  கடுங்காற்று  அத்துடன் வீசியதால்
பெரிய கல் ஒன்று உருண்டு வந்து குகை வாயிலை அடைத்துக்கொண்டது. அங்கிருந்த கல்லை நகற்ற முடியாத அம்மூவரும்
அவரவர்களின் நல்அமல்களை இறைவனிடம் முறையிட்டு வழி திறக்க துஆ செய்தார்கள். இது நீண்ட
சம்பவத்தின் சுருக்கம் (புஹாரி,முஸ்லிம் ஹதீஸ் நூல்களில் காணலாம்) மெற்கண்ட சம்பவத்தின் மூலம் நல் அமல்களைக் கொண்டு வஸீலா
தேடலாம் என்பதை அறிகிறோம்.




ஒரு நல்ல  அடியார் உயிருடன்  இருக்கும் பொழுது  நம்முடைய  தேவைகளுக்காக  துஆ செய்யச் சொல்லி



وَسِيلَةَ

"வஸீலா"
தேடுவதற்கு உமர்(ரழி) அவர்கள் காலத்தில் நடந்த சம்பவம் ஒரு சிறப்பான எடுதுக்காட்டாகும். உமர்(ரழி)
காலத்தில் மழை இல்லாமல் கடுமையியான பஞ்ஞம் ஏற்பட்டது. அப்பொழுது உமர்(ரழி) அவர்கள் அன்றைய கால
கட்டத்தில் நல்லடியாராகக் கருதப்பட்ட நபி (ஸல்) கொண்டு மழைக்காக பிரார்தனை செய்யச்சொல்லி,
மழை வந்து செழிப்புற்று பஞ்சம் நீங்கியது. (புஹாரி)



வஸீலா தேடுவதற்குரிய வழிகளை இறைவனும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் இவ்வளவு தெளிவாக்கிய ஒரு விஷயத்தில்
தவறான கருத்துக்களைப் புகுத்தி, மார்க்கதிற்க்கு முரணாக இறந்த நமது முன்னோர்களின் பொருட்டால் கேட்டு
பலர் வழி தவறிக்கொண்டிருக்கின்றனர்.



இப்பொழுது நாமும் உயிருடன் விழித்த நிலையில் இருக்கும் ஸாலிஹான நல்லடியார் ஒருவரை அழைத்து துஆ செய்யச்
சொல்லலாம். நமது தேவையைக் கேட்டுப் பெறலாம். ஆனால் சிறிய மெளத்தாகிய தூக்கத்தில் இருக்கும் ஒரு
நல்லடியாரிடம் நமது தேவைகளைக் கேட்டால் பதில் அளிக்கமாட்டார்; இந்நிலையில் இவ்வுலகை விட்டுப் பிரிந்து
அடக்கமாகி விட்டவர்களிடம் போய் கேட்டால் பதில் கிடைகுமா? கபுருகளுக்கு சென்று முறையிடும் நமது
சமுதாய மக்கள் சிந்திக்க வேண்டாமா?




وَمَا يَسْتَوِى الاٌّحْيَآءُ وَلاَ
الاٌّمْوَات
ُ

 உயிருள்ளோரும்,  மரணித்தோரும்  சமமாக  மாட்டார்கள். (அல்குர்ஆன் 35:22) என்ற  தெளிவான  இவ்வசனத்தையும் கவனிக்க
வேண்டாமா? இம்மாதிரி நல்லடியார்களிடம் முறையிடுவதை வல்ல அல்லாஹ் வண்மையாக கண்டிப்பதைப் பாருங்கள். 




أَفَحَسِبَ الَّذِينَ كَفَرُوا
أَن يَتَّخِذُوا عِبَادِي مِن دُونِي أَوْلِيَاء إِنَّا أَعْتَدْنَا
جَهَنَّمَ لِلْكَافِرِينَ نُزُلًا


"இந்த காபிர்கள் அல்லாஹ்வாகிய நம்மை விட்டுவிட்டு நம்முடைய அடியார்களை
தங்களுடைய அவுலியாக்களாக எடுத்துக் கொள்ளலாம் என எண்ணுகிறார்களா? நிச்சயமாக அப்படிப்பட்ட
காபிர்களை உபசரிக்க நாம் நரகத்தை சித்தப்படுத்தி வைத்திருக்கிறோம். (அல் குர்ஆன் 18:102) மேலும் இறைவன்  இவர்களைப் பற்றி கூறுகிறான்.





قُلْ هَلْ نُنَبِّئُكُمْ
بِالْأَخْسَرِينَ أَعْمَالًا


தங்களுடைய அமல்களில் பெரிய நஷ்டம் அடைந்தவர்களை நாம் அறிவித்து தரட்டுமா (நபியே!) நீர் கேளூம்
(அல்குர்ஆன் 18:103)



 الَّذِينَ
ضَلَّ سَعْيُهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ
يُحْسِنُونَ صُنْعًا



அவர்கள் பாவமான கருமங்களைச் செய்து கொண்டு, மெய்யாகவே நாங்கள் மிக நல்ல காரியங்களைச்
செய்வதாக எண்ணிக் கொள்வார்கள் .(அல்குர்ஆன் 18:104)  இவ்வுளவு தெளிவாக உள்ள இவ்விஷயத்தை உலக
ஆதாயம் தேட முனையும் சிலர் பின் வரும் வசனத்தை காட்டி மக்களை
வழி கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.




وَلاَ
تَقُولُواْ لِمَنْ يُقْتَلُ فِي سَبيلِ اللّهِ
أَمْوَاتٌ بَلْ أَحْيَاء وَلَكِن لاَّ تَشْعُرُونَ


 அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்து விட்டவர்கள்
என்று கூறாதீர்கள். அப்படியல்ல அவர்கள் உயிருள்ளவர்கள் எனினும் நீங்கள் இதை உண்ர்ந்து கொள்ளமாட்டீர்கள்.
(அல்குர்ஆன் 2:154)

இவ்வசனத்தை ஆதாரமாகக் காட்டி அல்லாஹ்வின் பாதையில்  இறந்த  நல்லடியார்கள்  இறக்கவில்லை உயிரோடு இருக்கிறார்கள்
என்று இறைவன் கூறுகிறான். எனவே அவர்களிடம் உதவி கேட்கலாம், சிபாரிசு செய்யச் சொல்லாம் என
வாதிடுகின்றனர். இதே வசன இறுதியில் அவர்கள் எப்படி உயிருள்ளவர்கள் என்பதை நீங்கள் உணரமாட்டீர்கள்
என்று இறைவன் தெளிவாகக் கூறுவதை இவர்கள் உணரவில்லை.


மேலும் இவ்வசனத்திற்கு விளக்கமாக நபி(ஸல்)அவர்கள் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்கள். நல்லடியார்களின்
உயிர்கள் பச்சை நிற பறவைகளின் உடலில் புகுத்தப்பட்டு சுவர்க்கத்தில் உலவி கொண்டுயிருப்பார்கள்: அங்குள்ள
கனிகளைப்புசித்து மகிழ்வார்கள். (நூல்: அபூதாவூத்)




எனவே நல்லடியார்கள் சுவர்கத்தில் உயிருடன் இருக்கிறார்கள்,  கபுருகளில் உயிருடன் இல்லை. அல்லாஹ் கூறுவது போல் நம்மால் உணர முடியாத ஒரு
வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்  என்பது தெளிவு.
எனவே கண்ணியமிக்க இஸ்லாமிய சமுதாயத்தவர்களே! இறைவன் அனுமதித்த வழியில் இறைவனை
நெருங்குவதற்குரிய வழியைத்தேட முற்பட்டு இம்மையிலும், மருமையிலும் ஈடேற்றம் அடையுங்கள். வல்ல அல்லாஹ்
முஸ்லிம்கள் அனைவரையும் அவனது நேர் வழியில் நடத்தாட்டுவானாக!
 




நன்றி :ரீட்இஸ்லாம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10898
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum