கல்விக் கடனுக்கு வட்டி தள்ளுபடி!!!

Go down

கல்விக் கடனுக்கு வட்டி தள்ளுபடி!!!

Post by முஸ்லிம் on Tue Dec 14, 2010 3:24 pm

கல்வி இன்று வணிகமாகிவிட்டது. பணம் இருந்தால் தான் உயர்கல்வி என்ற மோசமான
நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இஞ்சினியரிங் படிக்க வேண்டும் என்றால் 4-5 லட்சம்
வரை தேவைப்படுகிறது. மாறிப்போன மக்களின் மனநிலை தான் இதற்கு காரணம்.

இஞ்சினியரிங் படிக்கும் எல்லா மாணவர்களுக்கும் வேலை உறுதியாக கிடைக்கும் என்ற
நிலை இருக்கிறது என்றால், சரி பரவாயில்லை என்று கடன் வாங்கியாவது படிக்க
வைப்பதில் நியாயம் இருக்கிறது. வேலைக்கு எந்தவித உத்திரவாதமும் இல்லாத நிலையில்
கூட அறியாத அடித்தட்டு, நடுத்தர மக்கள் தங்கள் சக்திக்கு மீறி வீடு வாசலை
விற்று வட்டிக்கு வாங்கி படிக்க வைக்கின்றனர். இந்நிலையில் வங்கிகளில் கல்விக்
கடன் பெறுவது அவ்வளவு சுலபமான வழியல்ல. ஆனாலும் வங்கிகளில் வழங்கப்படும்
கல்விக் கடனுக்கு 2010-2011 ஆம் ஆண்டிலிருந்து வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது
என்று வங்கிகள் அறிவித்துள்ளன.

பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மாணவ மாணவியர் உயர் கல்வி / தொழிநுட்பக்
கல்வி பயில இத்திடத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் அதற்கு கீழ்காணும்
தகுதிகள் இருக்க வேண்டும் என்றும் வங்கிகள் அறிவித்துள்ளன.

தகுதிகள் :

1) 12ஆம் வகுப்பு முடித்த மாணவ மாணவியர் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில்
அனுமதிக்கப்பட்ட தொழில் நுட்பம் மற்றும் தொழில் முறை சார்ந்த படிப்பை
வெளிநாட்டில் மேற்கொள்வதற்கு.

2) பெற்றோர் வருமானம் அனைத்து வழிவகைகளிலும் ஆண்டிற்கு ரூ. 4.50 லட்சத்திற்கு
மிகாமல் உள்ள குடும்பத்தைச் சார்ந்த, பொருளாதார நீதியாகப் பின்தங்கியுள்ள மாணவ
மாணவியர்கள். (மாநில அரசால் இத்திட்டத்திற்கான வருமானச் சான்றிதழ் வழங்க
அங்கீகரிக்கப்பட்டுள்ள அதிகாரியிடமிருந்து சான்றிதழ் பெறவேண்டும்.

3) 1.4.2009 லிருந்து 31.3.2010 வரை (கல்வியாண்டு 2009-10) பெற்றுள்ள
கல்விக்கடன் தொகை இத்திட்டத்தில் வட்டி மானியம் கிடைக்கும்.

4) 1.4.2009க்கு முன் கல்விக்கடன் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு மேற்குறிப்பிட்ட
ஓராண்டில் (2009-10) பெற்ற கடன் தொகைக்கு மட்டும் வட்டிமானியம் கிடைக்கும்.

5) படிப்பு முடித்து அதன்பின் ஓராண்டு அல்லது வேலை கிடைத்த 6 மாதம் இவற்றில்
எது முன்னரோ அதுவரை வட்டி மானியம் வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு www.indianbank.com


"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.
avatar
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 8966
Points Points : 42
வயது வயது : 30
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum