கணினி டிவைஸ் டிரைவர்களை பேக்கப் எடுக்க எளிய மென்பொருள்

View previous topic View next topic Go down

கணினி டிவைஸ் டிரைவர்களை பேக்கப் எடுக்க எளிய மென்பொருள்

Post by முஸ்லிம் on Mon Jan 03, 2011 5:16 pmகணிப்பொறி பயன்படுத்தும் நம்மில் பலர் கணிணியில் உள்ள தகவல்களை அல்லது முக்கியமான மென்பொருள்களை குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறையாவது காப்பு நகல் எடுப்பதே இல்லை. ( Backup Copy ). இதனால் நீங்கள் திடிரென்று எதாவது பிரச்சினை என்று கணிணியை முழுதும் Format செய்யும் போது உங்களுடைய மென்பொருள்கள் அல்லது தகவல்கள் திரும்பக்கிடைக்குமா என்று பார்த்தால் சந்தேகமே வரும்.

இதில் முக்கியமான விசயம் எதுவென்று பார்த்தால் பலர் அவர்கள் கணிணியில் உள்ள வன்பொருட்களின் ( Hardware ) டிரைவர் கோப்புகள் ( Device Drivers ) அல்லது டிரைவர் கோப்புகள் உள்ளடக்கிய தாய்ப்பலகையின் நெகிழ்வட்டு ( Motherboard CD ) கூட இருக்காது. திடிரென்று கணிணியை Format செய்து விட்டால் எங்கிருந்து ஆடியோ , வீடியோ மற்றும் கிராபிக்ஸ் டிரைவர் கோப்புகளை பெறுவது ?

டிவைஸ் டிரைவர் கோப்புகள் ( Device Driver Files) என்றால் என்ன?

கணிப்பொறியின் இயங்குதளமும் மற்ற துணைநிலை சாதனங்கள் (சான்றாக விசைப்பலகை, மவுஸ், பிரிண்டர் போன்றவை) தொடர்பு கொள்ளுவதற்கும் குறிப்பிட்ட சாதனங்களை கட்டுப்படுத்துவதற்கும் இருக்கின்ற கோப்புகளே டிரைவர் கோப்புகள் எனப்படும். இவை இயங்குதளத்தால் வழங்கப்படும் அல்லது வன்பொருள் கருவிகளை தயாரிக்கிற நிறுவனங்களாலும் வழங்கப்படும். உதாரணமாக,

Audio Drivers for Sound,
VGA Drivers for Display, கிராபிக்ஸ்

இவை கண்டிப்பாக உங்கள் கணிணிக்கு தேவைப்படும். நீங்கள் புதிதாய் எதாவது ஒரு கருவியை கணிணியுடன் இணைக்க்ப்போகிறீர்கள் என்றால் அதற்கான டிவைஸ் டிரைவர் கோப்புகள் கணிணியில் பதியப்பட்டால் மட்டுமே அது ஒழுங்காக வேலை செய்யும். உதாரணமாக Barcode Reader.

Double Driver


நீங்கள் புதிதாய் கணிணி வாங்கினால் இந்த கோப்புகள் அடங்கிய மென்வட்டுகளும் கொடுக்கப்படும். இதை தொலைத்துவிட்டால் கிடைப்பது கடினம். அதனால் இந்த டிவைஸ் டிரைவர் கோப்புகளை அப்படியே பேக்கப் எடுத்துக்கொள்ள ஒரு எளிய மென்பொருள் உள்ளது. இதன் பெயர் Double Driver.

இந்த மென்பொருள் மூலம் ஒரு முறை அனைத்து டிவைஸ் டிரைவர்களையும் பேக்கப் எடுத்து விட்டால் போதும். எப்போது வேண்டுமானாலும் நீங்கள் இதைக்கொண்டு பழையவற்றை மீட்டுக்கொள்ளலாம்.

நன்மைகள் :

1. இதைக்கொண்டு நிறுவப்பட்டுள்ள டிவைஸ் டிரைவர்களின் பெயர், பதிப்பு, தேதி, நிறுவனம் அறியலாம்.
2. ஒரு கிளிக்கில் பேக்க்ப் மற்றும் ரீஸ்டோர் செய்யலாம்.
3. இலவச மென்பொருள்.
4. எல்லா டிவைஸ் டிரைவர்களின் பெயர்களை அச்சிடலாம்.நன்றி : பொன்மலர்


"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.
avatar
முஸ்லிம்
FOUNDER
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
மதிப்பெண் மதிப்பெண் : 8604
மதிப்பீடு மதிப்பீடு : 42
வயது வயது : 29
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum