புலால் உணவு உண்ணுவது மனிதனை வன்முறையாளனாகவும் - மூர்க்கமானவனாகவும் மாற்றுமே?

View previous topic View next topic Go down

புலால் உணவு உண்ணுவது மனிதனை வன்முறையாளனாகவும் - மூர்க்கமானவனாகவும் மாற்றுமே?

Post by முஸ்லிம் on Sun Jan 16, 2011 9:13 pm
தமிழில் : அபு இஸாரா
கேள்வி


மனிதன் என்ன உண்கிறானோ - அதனுடைய தாக்கம் அவனது
நடவடிக்கைகளில் தென்படும் என்பது அறிவியல் கூற்று.
அப்படி இருக்கும்போது - இஸ்லாம் புலால் உணவு உண்ண
அனுமதியளிப்பது எப்படி?. ஏனெனில் - புலால் உணவு
உண்ணுவது மனிதனை வன்முறையாளனாகவும் -
மூர்க்கமானவனாகவும் மாற்றுமே எப்படி?பதில்:1. இஸ்லாமிய மார்க்கம் - தாவர உண்ணிகளான ஆடு மாடு
ஒட்டகம் போன்ற கால்நைடகளை மாத்திரம் மனிதர்கள் உணவாக
உட்கொள்ள அனுமதியளித்துள்ளது.


மனிதன் என்ன உண்கிறானோ - அதனுடைய தாக்கம் அவனது
நடவடிக்கைகளில் தென்படும் என்பதை நான் ஏற்றுக்
கொள்கிறேன். எனவேதான் இஸ்லாமிய மார்க்கம் - மாமிச
உண்ணிகளான சிங்கம் - புலி - சிறுத்தை போன்ற
விலங்கினங்களை மனிதர்கள் உணவாக உட்கொள்வதை தடை
செய்துள்ளது. ஏனெனில் மேற்படி விலங்கினங்கள் மூர்க்க
குணம் கொண்டவை. மேற்படி விலங்கினங்களின் இறைச்சியை
உண்பவர்கள் மூர்க்கக் குணம் கொண்டவர்களாக மாறலாம்.
அதனால்தான் இஸ்லாம் தாவர உண்ணிகளான ஆடு - மாடு -
ஒட்டகம் போன்ற பிரானிகளின் இறைச்சியை மனிதர்கள் உணவாக
உட்கொள்ள அனுமதித்துள்ளது. மேற்படி பிராணிகள் -
அமைதியானதும் - பணிவானதும் ஆகும். இஸ்லாமியர்களான
நாங்கள் - அமைதியான பிராணிகளான - ஆடு - மாடு - ஒட்டகம்
போன்றவைகளை உணவாக உட்கொள்கிறோம். எனவேதான் நாங்கள்
அமைதியை விரும்புகிறவர்களாக - இருக்கின்றோம்.
2. அருள் மறை குர்ஆனும் - நபிகளாரின் பொன்மொழியும் -
கெட்ட உணவு வகைகளை உண்பதை தடை செய்துள்ளது.


'(நபியாகிய) அவர் நன்மையான காரியங்களைச் செய்யுமாறு
ஏவுவார். பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்.
தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார்.
கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்துவிடுவார்..'

(அல்-குர்ஆன் அத்தியாயம் 07 - ஸுரத்துல் அஃராப் -
157வது வசனம்)'மேலும் (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ
அதை எடுத்துக்கொள்ளுங்கள். இன்னும் எதைவிட்டும் உங்களை
விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்.'

(அல்-குர்ஆன் அத்தியாயம் 59 - ஸுரத்துல் ஹஷ்ர் - 7வது
வசனம்)சில பிராணிகளின் இறைச்சியை மனிதர்கள் உணவாக உட்கொள்ள
அனுமதியளித்திருக்கும் அல்லாஹ் - சில பிராணிகளின்
இறைச்சியை மனிதர்கள் உணவாக உட்கொள்ள அல்லாஹ் தடை
செய்திருக்கிறான் என்பதை ஒரு இஸ்லாமியன் தெரிந்து
கொள்ள - நபிகளாரின் பொன்மொழி ஒன்றே போதுமானதாகும்.


3. மாமிசம் உண்ணும் பிராணிகளை மனிதர்கள் உணவாக
உட்கொள்ளத் தடை பற்றி நபி (ஸல்) அவர்கள் அறிவித்த
செய்தி:


முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அறிவித்ததாக இப்னு அப்பாஸ்
(ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்படி செய்தி ஸஹீஹுல்
புஹாரி - ஸஹீஹுல் முஸ்லிம் (ஹதீஸ் எண் 4752) ஸுனன்
இப்னு மாஜா (ஹதீஸ் எண் - 3232 முதல் 3234 வரை) போன்ற
ஹதீஸ் (செய்தி) நூல்களில் இடம்பெற்றுள்ளன.


அ. மாமிசம் உண்ணக்கூடிய கூரிய பற்களையும் நகங்களையும்
உடைய காட்டு விலங்குகளான - சிங்கம் புலி நாய் ஓநாய்
போன்றவைகள்.

ஆ. கொறித்துத் திண்ணக்கூடிய பற்களை உடைய எலி
பெருச்சாலி அணில் போன்றவைகள்

இ. ஊர்ந்து திரியக் கூடிய பாம்பு முதலை போன்ற
பிராணிகள்


ஈ. கூரிய அலகுகளையும் - கால் நகங்களையும் உடைய கழுகு
பருந்து காகம் ஆந்தை போன்ற பறவைகள் ஆகியவை மனிதர்கள்
உணவாக உட்கொள்ள தடை செய்யப்பட்ட பிராணிகள் மற்றும்
பறவைகள் ஆகும்.நன்றி : ஒற்றுமை"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.
avatar
முஸ்லிம்
FOUNDER
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
மதிப்பெண் மதிப்பெண் : 8583
மதிப்பீடு மதிப்பீடு : 42
வயது வயது : 29
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum