சங்பரிவாரும் தேசீயச் சின்னங்களும்

Go down

சங்பரிவாரும் தேசீயச் சின்னங்களும்

Post by முஸ்லிம் on Sun Jan 30, 2011 2:37 pm

தேசபக்தியை மொத்தக் குத்தகைக்கு எடுத்துள்ளதாகச் சொல்லிக் கொள்ளும் சங்பரிவார், அதை உலகுக்கு உணர்த்துவதற்காகக் காஷ்மீரில் குடியரசு நாளில் மூவண்ணக் கொடியேற்றுவதற்காகப் பல இடங்களிலும் இருந்து ஆட்களைத் திரட்டிக் கொண்டு சென்றது. இதைச் சாக்காக வைத்துக் கொண்டு ஆர் எஸ் எஸ் அபிமானிகள் தங்களைத் தவிர மற்றவர்களுக்கு - குறிப்பாக முஸ்லிம்களுக்கு -  'அது' இல்லை என வலைத்தளங்களில் திட்டித் தீர்த்தனர்.

"ஒரு நாட்டில் அமைதியும் ஒருமைப்பாடும் நிலவும்போதுதான் அந்நாடு மற்றவர்களால் மதிக்கப்படும். எட்டு மதங்களும் எண்ணத்தொலையா ஜாதிகளும் அவற்றின் உட்பிரிவுகளும் நூற்றுக்கணக்கான மொழிகளும் அவற்றைவிட அதிகமான கட்சிகளும் இருந்தும் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு இந்தியா வளர்ந்து கொண்டிருக்கிறது என்றால் இந்தியாவில் வாழும் அனைவரின் தேசபக்தியும் அர்ப்பணிப்பும் உழைப்பும்தாம் காரணங்களே தவிர, வெற்று 'தேசபக்திக் கூச்சல்' போடும் சங்பரிவார் அங்கங்கள் அல்ல" எனக் கடந்த வாரம் சொல்லியிருந்தேன்.


பீஜேபியின் காஷ்மீர் யாத்திரை மீண்டும் அதை நிரூபித்து விட்டது.


"இந்தியாவே காஷ்மீரை விட்டு வெளியேறு" எனப் பிரிவினைக் கூச்சல் எழுப்பிக்கொண்டிருக்கும் காஷ்மீரில் எரியும் தீயில் எண்ணெய் வார்த்துக் குளிர் காயும் திட்டமே தவிர பீஜேபீக்கு வேறு நோக்கம் இதில் இல்லை


காஷ்மீரிலுள்ள மசூதி ஒன்றின்மீது பலவந்தமாக கொடிகட்டும் பாஜக, விஹெச்பி தொண்டர்கள்இந்தியா, ராணுவ அடக்குமுறையால் தங்கள் மக்களைக் கொன்று குவிக்கிறது என்ற கோபம் நிறைந்திருக்கும் காஷ்மீர் மக்களின் உள்ளத்தை இந்தியாவுக்கு இணக்கமாகத் திருப்ப வேண்டிய நேரத்தில், குறுகிய அரசியல் லாபங்களுக்காக பீ ஜே பீ  காஷ்மீரில் கொடியேற்றும் நாடகத்தை நடத்த முயன்றது. பீ ஜே பீ இந்தியாவை ஆண்ட காலத்தில் காஷ்மீரும் இருந்தது; குடியரசு மற்றும் விடுதலைநாள் கொண்டாட்டங்களும் வந்தன; இப்போது கொடியேற்றுவதற்காகத் தனிவிமானத்தில் பறந்து சென்ற அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், ஆனந்த குமார் போன்ற பி ஜே பீ தலைவர்களும் அந்தக் கட்சியில்தான் இருந்தனர். ஆனால் அப்போது அவர்களுக்கு அங்கே கொடியேற்றும் எண்ணம் வராத மர்மம் என்ன? இப்போது இந்தியாவை ஆளும் காங்கிரஸுக்கும் காஷ்மீரை ஆளும் ஓமர் அப்துல்லாவுக்கும் நெருக்கடி கொடுக்க நினைத்ததைத் தவிர வேறு நோக்கம் என்ன?பீ ஜே பீ யின் கொடியேற்றும் திட்டத்தால் பிரிவினை பேசுவோரின் வலிமையும் அவர்களுக்கு மக்கள் ஆதரவும் கூடுமே தவிர அவர்களின் நெஞ்சங்கள் இந்தியாவிடம் நெருங்கா!


"இந்தியாவில் எங்கும் கொடியேற்றும் உரிமை உண்டு" என முழங்கும் பீ ஜே பீ க்கு,  அவர்களின் தலைமைக் கட்சியான ஆர் எஸ் எஸ் தலைமையக நாக்பூர் அலுவலகத்தில் கடந்த இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்புவரை இந்தியத்  தேசீயக்கொடி ஏற்றப்பட்டதில்லை என்ற உண்மை தெரியாதா?


RSS தலைமையகத்தில் காவிக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள்நாட்டு விடுதலை நாளில் இந்நாட்டுக் குடிமக்களான முஸ்லிம்கள் தங்கள் அமைப்பு சார்பாக விடுதலைநாள் பேரணி நடத்தி மூவண்ணக் கொடியேற்றுவதற்கு எதிராகக் குரல் எழுப்பித் தடை கோர முயலும் சங்பரிவார் அமைப்புகளுக்கு, "இந்தியாவில் எங்கும் கொடியேற்றும் உரிமை உண்டு" என்பது வெற்றுக் கூச்சல்தானா?


நாட்டு விடுதலை மற்றும் தன்னாட்சி தொடர்பான நாட்களும் நாட்டுக் கொடியும் உணர்வு பூர்வமானவை; உண்மையான தேசபக்தனின் போற்றுதலுக்குரியவை. உண்மையான தேச பக்தர்கள் அவற்றைத் தம் குறுகிய ஆசை அல்லது லாபத்துக்காகப் பயன்படுத்த மாட்டார்கள். கோடிக்கணக்கான ஏழைப் பாட்டாளி மக்களின் உணவாகப் பயன்படும் மாடுகளை அறுப்பதற்கு எதிராக உணர்ச்சிக் குரல் எழுப்பும் சங்பரிவார், தேசீய நாட்களையும் தேசீயக் கொடியையும் சுயலாபத்துக்காகப் பயன்படுத்துவது தன் அரசியல் வாழ்விற்காகவும் வெடிகுண்டு வழக்குகளில் சிக்கியிருக்கும் சங்பரிவார் முகத்தைக் காப்பதற்காகவுமே என்பது இந்திய மக்களுக்குத் தெரியாதா?


சங்பரிவார் தலைவர்கள் திரைமறைவில் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதல்கள் தற்போது வழக்கு-விசாரணைகளில் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்து கொண்டிருப்பதும் அவற்றைக் காஷ்மீரில் கொடியேற்றும் நாடகம்போல் எத்துணை முயன்றாலும் திசைதிருப்பிவிட முடியாது என்பதும் மக்களுக்குப் புரியாதா என்ன?.


 - ரஸ்ஸல்.நன்றி : இந்நேரம்


"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 9008
Points Points : 42
வயது வயது : 30
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum