1
கேரட் தோசை on Mon Feb 14, 2011 3:37 pm
முஸ்லிம்'s Info
FOUNDER ![]() |

தோசை மாவு - ஒரு கப்,
கேரட் - ஒன்று,
மிளகுத்தூள் - தேவையான அளவு,
வெங்காயம் - சிறிதாக நறுக்கியது ஒன்று,
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை :
எப்போதும் போல் தோசைக்கு அரைக்கும் மாவு ஒரு கப் எடுத்துக்கொண்டு அதனுடன் மிக்சியில் போட்டு நன்றாக அரைத்த கேரட்டைக் கலந்து கொள்ள வேண்டும். தோசை தவாவில் மாவை ஊற்றி அதன்மேல் நறுக்கிய வெங்காயம் மற்றும் மிளகுத்தூள் தூவி எண்ணெய் ஊற்றி திருப்பிப் போட்டு சுட்டு எடுக்கவும்.
குறிப்பு: இந்தத் தோசை மெலிதாகவோ அல்லது மொத்தமாகவோ எப்படியும் சுடலாம். கேரட்டுடைய கலர் மாவுடன் கலப்பதால், தோசையும் கலர்புல்லாக இருப்பதால் நம் வீட்டு சிறிய குழந்தைகள் மட்டுமல்ல பெரிய குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். கேரட்டின் சத்தும் நேரடியாக சேரும். செய்வதற்கும் மிக எளிதானது. செய்து ருசித்துப் பார்த்து கருத்து கூறுங்கள்.
வழங்கியவர் : இனியவள்
கை-யொ-ப்-ப-ம் ____________________
"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.






பதிவுகள்

