கூகிள் க்ரோமிற்கு (Google Chrome) ஏற்ற 8 சிறந்த Add Ons.

View previous topic View next topic Go down

கூகிள் க்ரோமிற்கு (Google Chrome) ஏற்ற 8 சிறந்த Add Ons.

Post by முஸ்லிம் on Sat Feb 19, 2011 8:19 pm


கணிணி பயன்படுத்தும் அனைவரும் தங்களது மனதிற்கு பிடித்த உலாவியை கணிணியில் நிறுவி இணையதளங்களை உலா வருகின்றனர். தற்போது பல மக்களிடம் அமோக வரவேற்பை பெற்று இணையத்தில் ஒரு கலக்கு கலக்கி கொண்டிருக்கும் உலாவி எது என்று நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அனேகமாக இந்த பதிவை கூட நீங்கள் கூகிள் க்ரோம் உலாவியை பயன்படுத்தி படித்து கொண்டிருக்கலாம். இந்த பதிவு  கூகிள் க்ரோமிற்கு (Google Chrome) ஏற்ற 8 சிறந்த Add Ons பற்றியது. 01. கூகிள் மெயில்: இந்த கூடுதல் வசதி மூலம் நாம் நமது உலாவியை கொண்டு நமது கூகிள் இணைய கடிதங்களை வாசிக்க முடிகிறது. மேலும் நமக்கு ஏதனும் புதிய செய்தி வந்திருப்பின் இந்த வசதி நமக்கு எளிதாக உலாவியில் தெரியப்படுத்துகிறது.


02. ஓட்டும் குறிப்பேடு(Sticky Notes): ஒரே சமயம் நாம் பல இணையத்தளங்களில் உலவும் போது நமக்கு தெரியாமலே சில நல்ல செய்திகள் அல்லது சில நல்ல கருத்துகள் கிடைக்க பெறுவோம். அத்தகய சமயத்தில் அதை நினைவிப்படுத்தி கொள்ள நமக்கு கை கொடுக்கிறது ஓட்டும் குறிப்பேடு(Sticky Notes) என்ற கூடுதல் வசதி. இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் நாம் ஒரு இணையத்தளத்தில் எடுத்த குறிப்பை மீண்டும் நாம் அதே தளத்தில் நுழையும் போது தானாகவே இது செயல்படுகிறது.


03. Shareaholic: இன்றைய தகவல் தொழில்நுட்பக்காலத்தில் தகவல் பரிமாற்றங்கள் மிகவும் விரைவாக நடைபெறுகிறது. இதற்கு நமக்கு பெரிய பலமாக இருப்பது பல சமூக வலைத்தளங்கள். நாம் சில பல இணையதளங்களில் பார்க்கும் அல்லது உலவும் செய்தியை பிறருடன் பகிந்து கொள்ள எதுவாக உருவாக்கப்பட்ட கூடுதல் சேவைதான் Shareaholic. 04. நினைவு படுத்து (Remind Me):  மனித நாகரிகம் எவ்வளவு வளர்ந்தாலும் மனிதர்களுக்கு உரித்தான சில விசயங்களுள் முக்கியம் பெற்றது ஞாபகமறதி. இந்த விஷயம் கணிணி உபயோக படுத்தும் நபர்களிடம் இப்போது அதிகரித்து வருகிறது. இதை அறிந்து உருவாக்கப்பட்ட சேவை தான் நினைவு படுத்து (Remind மீ). இதை கொண்டு நாம் சில செயல்களை சரியான நேரத்திற்குள்  செய்ய இதன் துணையை நாடலாம். 
05. பிக்னிக் (Picnik): நாம் ஒவ்வொருவரும் கண்டிப்பாக புகைப்படங்களின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக இருப்போம். இதை தெரிந்து வைத்து உள்ள பிக்னிக் (Picnik) சேவை நாம் எந்தவொரு இணையத்தளத்தில் உலாவி கொண்டு  இருந்தாலும் அதன் உள்ளே உள்ள படங்களை நாம் நமது மனதிற்கு ஏற்ற வகையில் அதை மாற்றலாம். அந்த படங்களில் பல செயல்களை செய்ய இந்த சேவை வித்திடுகிறது. 06. நெருப்புப்புச்சி (FireBug) : இணையத்தள வடிவமைப்பாளர்கள் மிகவும் ரசிக்கும் மற்றும் அவர்களக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்ட சேவை தான் இந்த  நெருப்புப்புச்சி (FireBug) . இதன் சிறப்பம்சம் என்னவென்றால் நம் எந்தவொரு தளத்தில் இருந்தாலும் சரி அதில் உள்ள எந்தவொரு பகுதியை தேர்ந்தெடுத்து இந்த  நெருப்புப்புச்சியை  (FireBug) சொடுக்கினால் அதன் அனைத்து கோடிங் முறையும் நமக்கு அகப்படுகிறது.7. கூகிள் டாக்: இந்த கூடுதல் வசதி மூலம் நாம் நமது க்ரோம் உலாவியின் மூலமாகவே நமது நண்பர்களுடன் அரட்டை அடிக்கும் வசதியை ஏற்படுத்தி தருகிறது.
08. X- க்ரோம்: இந்த கூடுதல் வசதி நமது க்ரோம் உலாவியை அழகு படுத்த உதவி செய்கிறது. ஆம், இதை கொண்டு நாம் நமது உலாவிக்கு ஏற்ற வண்ணங்களையும், சிறப்பு அம்சங்களையும் நிறுவ முடிகிறது.


நன்றி : Ivan's Blog


"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.
avatar
முஸ்லிம்
FOUNDER
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
மதிப்பெண் மதிப்பெண் : 8604
மதிப்பீடு மதிப்பீடு : 42
வயது வயது : 29
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum