வாருங்கள் (கஅபா அழைக்கிறது)

View previous topic View next topic Go down

வாருங்கள் (கஅபா அழைக்கிறது)

Post by afsan on Sat Jun 04, 2011 5:50 pm

தோற்றுப் போனவர்களே !
வெற்றிபெற வாருங்கள் !
ஆற்றுப் படுத்துதற்கு
அழைக்கின்றேன் வாருங்கள் !

கண்ணீரில் ஆன்மாவைக்
கழுவிச் சலவை செய்யப்
பாவதாரிகளே! என்
படித்துறைக்கு வாருங்கள் !

மோகத்தில் மூச்சிறைக்க
முத்தமிட்டுக் கருத்துவிட்ட
சுண்டுகளின் அர்த்தத்தை
கண்டுகொள்ள வாருங்கள் !
என்-
முந்தானையில் நான்
முடிந்துவைத் திருக்கின்ற
கருப்பமுதக் கல்சுவைக்க
கருத்துடனே வாருங்கள் !

“குமரு கரை ஏறட்டும்
கொண்டகடன் தீரட்டும்”
என்றநிலை மறந்துவிட்டு
என்னிடத்தில் வாருங்கள் !

ஆயுளுக்கும் சிரமங்கள்
ஆழியலைக் கைபோல
அலைகழிக்கும்; மறந்துவிட்டு
ஆசையுடன் வாருங்கள் !

மையித்து உடையணிந்து
மறுமைக்கு நடைபயின்று
பொய் அற்றுப் போவதற்கு
புறப்பட்டு வாருங்கள் !

நாடுமொழி மறந்து இறை
நாடுகின்ற மனமோடு
பாடுகின்ற “தல்பியாப்”
பண்ணிசைக்க வாருங்கள் !

எதிர்காலம் என்பதெல்லாம்
எவரிடத்தும் இல்லையதால்
புதிர்க் குமிழி உடையுமுன்னே
புறப்பட்டு வாருங்கள் !

ஆன்மாவின் புல்வெளியில்
அலைகின்ற மிருகத்தை
அறுத்துப் பலியிடுதற்கு
அழைக்கின்றேன் வாருங்கள் !

ஆன்மாவின் முகவரியை
அகிலத்தில் தொலைத்தோரே !
அடையாளம் கண்டுகொள்ள
ஆர்வமுடன் வாருங்கள் !

சாத்தானின் வலைவிரிப்பில்
“ஆமீன்கள்” துள்ளிவிழ
வெறுங்கையோ டிருப்போரே !
விரைந்திங்கே வாருங்கள் !

புவியீர்ப்பு மையம்
புதைந்திருக்கும் இடம்நோக்கி
புடம் போட நினைப்போரே !
புறப்பட்டு வாருங்கள் !

திசைகள் சங்கமிக்கும்
திருத்தலத்தை நோக்கியினி
திருந்திட நினைப்போரே !
திரளாக வாருங்கள் !

தொழுதறியேன் ! நடைமுறையின்
பழுதறியேன் என்னாமல்
முழுமனது வைத்தென்னை
முத்தமிட வாருங்கள் !

காணிக்கைத் தொழுகைஎன்
கண்முன்னே தொழுதுவிட்டால்
பேணிக்கை வந்துவிடும்
பிரியமுடன் வாருங்கள் !

நோயரக்கன் கைகளிலே
நொம்பலப் பட்டுடல்
மரணிக்கும் முன்னே
மரணிக்க வாருங்கள் !

மக்கத்து இறை இல்லம்
மனம் வைத்து அழைக்கின்றேன் !
சொர்க்கத்தை உங்களுக்கு
சொந்தமாக்க வாருங்கள் !


நன்றி: கமால் கடையநல்லூர்.
இந்தக்கவிதை மிகவும் மன ஆறுதலையும் பேணுதலையும் ஏற்ப்படுத்துகிறது வாசிக்கையில்...
avatar
afsan
New Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 7
ஸ்கோர் ஸ்கோர் : 2445
Points Points : 9

View user profile

Back to top Go down

Re: வாருங்கள் (கஅபா அழைக்கிறது)

Post by முஸ்லிம் on Sat Jun 04, 2011 5:55 pm

---திரி நகர்த்தப்பட்டது---


"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.
avatar
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 8636
Points Points : 42
வயது வயது : 29
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum