ரமழானை வரவேற்போம் ! பகுதி -2

View previous topic View next topic Go down

ரமழானை வரவேற்போம் ! பகுதி -2

Post by abuajmal on Mon Aug 01, 2011 1:03 am


சென்ற பதிவின் தொடர்ச்சி

அம்மாதத்தில் நாம் செய்ய வேண்டியது நோன்பு நோற்பது மட்டும் தானா...??????இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து. நன்மைகளை எதிர்பார்த்து நோன்பு நோற்க வேண்டும்.

அதே அடிப்படையில் இரவு வணக்கங்களை நிறைவேற்ற வேண்டும்.இவ்விரண்டு செயற்பாடுகளும் நம்முடைய முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு காரணமாக அமைந்துவிடும்.

ஐவேளை தொழுகைகளையும் பள்ளிவாசலுக்கு சென்று கூட்டா(ஜமாஅத்தா)க நிறைவேற்ற வேண்டும்.இது கூட்டு வாழ்க்கை முறையையும். சகோதர பாசத்தையும் பலப்படுத்த உதவி செய்யும்.

தினந்தோறும் திருக்குர்ஆனை உள்ளச்சத்துடன். பொருள் விளங்கி, ஓத வேண்டிய முறையில் ஓத வேண்டும்.இது இறைவனின் கருணையும். மன நிம்மதியும் ஏற்பட வழிவகுக்கும்.

இஸ்லாமிய அறிவை கற்றுக்கொள்ள அல்லது கற்றுக்கொடுக்க முயற்சி செய்ய வேண்டும்.இது ஈருலுக வெற்றிக்குண்டான பாதையை திறந்து வைக்கும்.

இரவு வணக்கம் என்ற தராவீஹ் மற்றும் தஹஜ்ஜத் தொழுகைகளை அதிகமாக தொடர்ந்து தொழுது வர வேண்டும்.இவை இறைவனின் நெருக்கத்தை ஏற்படுத்தும் சிறந்த வழிமுறையாகும்.

உறவுமுறையை பேணி வாழ வேண்டும்.இது குடும்ப சீரமைப்பிற்கும். சொந்தங்கள் சேர்ந்து வாழ்வதற்கும் சீரான வழியை காட்டும்.

இல்லாருக்கும். எளியோருக்கும் முடிந்த வரை உதவிகள் புரிய வேண்டும்.இது பிறர் மீது அன்பு செலுத்துதல் என்ற மேலான குணத்தை உள்ளத்தில் ஊற்றெடுக்க வைக்கும்அன்பின் இஸ்லாமியச் சகோதர, சகோதரிகளே...!

தயாராகுவோம் நாம்...!

இறைவழிபாட்டில் திளைத்திருப்போம்!

இறைமறை குர்ஆனை ஓதுவதில் மூழ்கியிருப்போம்!

வீண் பேச்சுகளை தவிர்ந்திருப்போம்!

வீணாணவைகளை விட்டும் ஒதுங்கியிருப்போம்!

பகல் முழுவதும் பசித்திருந்து நோன்பிருப்போம்!

இரவு முழுவதும் விழித்திருந்து இறையைத் தொழுவோம்!

புனித ரமழானில் புதையலைத் தேடிப் புறப்படுவோம்!

நாளை மறுமையில் பொன்னான வாழ்வை சென்றடைவோம்!

இங்கே நாள்தோறும் நன்மைகள் பல புரிவோம்!

ஈருலகிலும் நாயன் அல்லாஹ்வின் அருளைப் பெற முயற்சிப்போம்!

அல்குர்ஆனின் வழிமுறையில் செல்வோம்!அல்லாஹ்வின் அளவிலா அருளைப் பெறுவோம்!

சுன்னத்தைப் பேணி சிறப்பாக வாழ்வோம்!

சுகந்தரும் சுவனத்தில் சுதந்திரமாக நுழைவோம்!
avatar
abuajmal
New Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 12
ஸ்கோர் ஸ்கோர் : 2421
Points Points : 13
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Happy

View user profile http://www.tndawa.blogspot.com http://www.tndawa.blogspot.com

Back to top Go down

Re: ரமழானை வரவேற்போம் ! பகுதி -2

Post by முஸ்லிம் on Mon Aug 01, 2011 2:59 pm

மாஷா அல்லாஹ் பயனுள்ள பதிவுக்கு jazaakAllah சகோ.... smile
avatar
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 8637
Points Points : 42
வயது வயது : 29
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum