தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பேஸ்புக்கின் புத்தம் புதிய பாதுகாப்பு வசதிகள்

Go down

பேஸ்புக்கின் புத்தம் புதிய பாதுகாப்பு வசதிகள் Empty பேஸ்புக்கின் புத்தம் புதிய பாதுகாப்பு வசதிகள்

Post by முஸ்லிம் Fri Oct 07, 2011 4:33 pm

கூகுள் பிளசின் அறிமுகத்தையும் அசுர வளர்ச்சியையும் கண்டு பேஸ்புக் இப்போது அதிரடி மாற்றங்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது.இதில்
இப்போது நம் கணக்கின் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்து புதிய
வசதிகள் சிலவற்றை சேர்த்துள்ளார்கள். அதில் ஒன்றுதான் Trusted Friends என்ற
வசதி.

இந்த வசதியானது உங்கள் கணக்கு செயலிழந்தாலோ அல்லது முடக்கப்பட்டாலோ எளிதில் இந்த கணக்கை மீட்க உதவுகிறது.

1. முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் லொகின் செய்து கொண்டு அதில் Account Settings என்பதை தேர்ந்தெடுங்கள்.

2. அதில் இடதுபுறத்தில் உள்ள Security என்பதை தேர்ந்தெடுங்கள்.

3. இப்போது தோன்றும் ஆப்ஷன்களில் Trusted Friends என்பதற்கு நேராக உள்ள Edit என்பதை க்ளிக் செய்யவும்.

4. இப்போது திரையில் ஒரு செய்தி தோன்றும் அதில் உள்ள Choose Trusted Friends என்பதை தேர்வு செய்யவும்.

5. இப்பொழுது திரையில் தோண்றும் சிறிய விண்டோவில் உங்கள் கணக்கின் கடவுச்சொல்லை அளிக்கவும்.

6. இப்பொழுது தோன்றும் திரையில் உங்கள் நண்பர்கள் பட்டியல் தோன்றும்.
அதில் உங்களுக்கு நம்பகமான மற்றும் முகநூல் இல்லாத நேரத்திலும் உங்களால்
அணுகமுடிந்த நபர்களில் ஐந்து பேரை தேர்வு செய்துவிட்டு Continue என்பதை
க்ளிக் செய்யவும்.

7. இப்போது தோன்றும் விண்டோவில் Confirm Friends என்பதை சொடுக்கவும்,
உங்களின்(Trusted Friends)பட்டியல் தயார். உங்கள் கணக்கு முடக்கப்பட்ட
நிலையில் நீங்கள் அதனை இந்த பட்டியல் மூலம் சரிசெய்து கொள்ளலாம்.

8. அதாவது உங்கள் கணக்கு செயலிழந்த நிலையில் நீங்கள் இந்த வசதி மூலம்
அதனை மீட்டெடுக்க விரும்பினால் உங்கள் நண்பர்களுக்கு ஒரு இரகசிய எண்
அனுப்பப்படும். அந்த எண்ணை கொண்டு மீண்டும் உங்கள் கணக்கை செயல்படுத்தலாம்.




பேஸ்புக்கின் புத்தம் புதிய பாதுகாப்பு வசதிகள் Logo
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11138
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum