மின்சாரம் கேட்டுப் போராடிய பொதுமக்கள்மீது துப்பாக்கி சூடு!
Page 1 of 1

ஜம்மு காஷ்மீர்-பாரமுல்லா மாவட்டத்திலுள்ள போனியார் என்ற கிராமத்தில் மின் தட்டுப்பாட்டைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
அவர்கள்மீது எவ்வித அறிவுப்புமின்றி மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்களின் ஒருவர் கொல்லப்பட்டார், 2 பேர் படுகாயமடைந்தனர். இதனால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெரும் பதட்டம் நிலவுகிறது.
தொடர்ந்து மின் தட்டுப்பாடு நிலவி வருவதால் அதைக் கண்டித்தும், முறையாக மின்விநியோகம் செய்யுமாறும் கோரியும் சுமார் 500 பேர் அங்குள்ள மின் நிலையத்திற்கு வெளியே கூடி போராட்டத்தில் ஈடுபட்டபோது போராட்டம் நடத்தியவர்கள் மின் நிலைய மெயின் கேட்டை நோக்கி முன்னேறினர். இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதனால் போராட்டம் நடத்தியவர்கள் அதிர்ச்சி அடைந்து சிதறி ஓடினர். இந்த திடீர் துப்பாக்கிச் சூட்டில், அல்தாப் அகமது என்ற 25 வயது இளைஞர் பரிதாபாமாக சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். மேலும் முதியவர் அப்துல் மஜீத்கான், பர்வேஸ் அகமது கான் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மத்திய தொழிலக பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய உள்துறை அமைச்சகத்திடம், ஜம்மு காஷ்மீர் மாநில அரசு புகார் கொடுத்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொதுமக்கள்மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து ஜம்மு காஷ்மீர் மாநில அரசு கடும் அதிருப்தியும், வருத்தமும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உள்துறை அமைச்சகத்திடம் முறையிடப்பட்டுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.
அஹிம்சை வழியில் போராடிய மக்களுக்கு மத்திய பாதுகாப்புப் படையின் புத்தாண்டு பரிசு கொஞ்சம் அதிகம்தான்!

Similar topics
» லிபியாவில் அரசுக்கெதிரான ஊர்வலத்தில் ராணுவம் துப்பாக்கி சூடு : 200 பேர் பலி?
» முருகையன் துப்பாக்கி சூட்டில் இறக்கவில்லை - இந்திய தூதரகம்!
» கறைபடிந்த அலகாபாத் உயர் நீதிமன்றம் : உச்ச நீதிமன்றம் சூடு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum