தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ரமலானே வருக !

Go down

ரமலானே வருக ! Empty ரமலானே வருக !

Post by srivai.khader Thu Jul 18, 2013 12:34 pm

ஷாபான் பிறையே ரமலானை நினைவு கூறுதே
கண்ணியம் மிக்க ரமலான் மாதம் வருதே

ஐந்து கடமைகளில் நிறைவு செய்ய ஓன்று
ஈமான் கொண்டோருக்கு கட்டாயம் நோன்பு

மாதங்களில் புனிதமான மாண்புமிகு ரமலான்
மேன்மையான நோன்பை நிறைவேற்ற நாம்

இறைவன் அருட் கொடை இறங்கும் மாதம்
இயன்றவரை அமல்களை செய்வோம் நாமும்

பகல் பொழுது பசித்திருந்து இறைவனுக்காக
இரவு விழித்திறுந்து வணக்கங்கள் அவனுக்காக

சொர்க்கத்தின் வாசல் சுந்தரமாய் திறந்திருக்கும்
நரகத்தின் வாசல் மாதமெல்லாம் மூடி இருக்கும்

தராவிக் தொழுகை வணக்கத்தின் மேன்மை –இது
தவறாமல் நிறைவு செய்வோம் துவாவுடன் நின்று

ரமலானின் அமல்கள் இரட்டிப்பு நன்மைகள்-இன்னும்
மலக்குமார்கள் சிபாரிசு இறைவனிடத்தில் செய்யும்

புண்ணியம் மிகுந்த மாதம் இந்த ரமாலான் மாதம்
மறுமைக்கு அமல் சேர்ப்போம் தவறாமல் நாமும்

-ஸ்ரீவை.காதர்-
srivai.khader
srivai.khader
Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 91
ஸ்கோர் ஸ்கோர் : 4837
Points Points : 26
வயது வயது : 62

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum