பலஸ்தீனர்களை அகதிகளாக்கும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபை
Page 1 of 1

ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரின் ஷெய்க் ஜர்ராஹ் பகுதியில் இருந்த குடியிருப்பில் வாழ்ந்துவந்த பலஸ்தீன் குடும்பங்களை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபை பலவந்தமாக வெயியேற்றியுள்ளதாக ஜெரூசலத்தின் ஊடக வட்டாரங்கள் கடந்த திங்கட்கிழமை (29.11.2010) செய்தி வெளியிட்டுள்ளன.
மேற்படி குடியிருப்பைத் திடீரென சுற்றிவளைத்துக் கொண்ட இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் பொலிஸாரும் இராணுவத்தினரும் குறித்த கட்டிடத்தை நோக்கி சரமாரியான தாக்குதல் நடாத்தியதோடு, குழந்தைகள், வயோதிகர்கள் உட்பட சுமார் ஐம்பது பலஸ்தீனர்களைத் தமது சொந்த இருப்பிடங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றி அவர்களுக்குச் சொந்தமான வீட்டுத் தளபாடங்களை தெருவில் வீசி எறிந்ததாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி குடியிருப்பைச் சேர்ந்த வீட்டு உரிமையாளர்களில் ஒருவரான உம்மு ஹாஃபிஸ் அல் அரப் இணையதளத்துக்குத் தகவலளிக்கையில், தமது குடியிருப்புப் பகுதியில் இடம்பெறும் அசம்பாவிதத்தைக் கேள்வியுற்று ரமல்லாவிலிருந்து அவசர அவசரமாகத் தனது இருப்பிடத்தை நோக்கி விரைந்தபோது, வீட்டுக்குள் நுழைய விடாமல் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் பொலிஸார் தன்னை வழிமறித்துத் தடுத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரில் வீடுகள், கட்டிடங்களை சொந்தமாகக் கொண்டவர்கள் எக்காரணம் கொண்டும் அவற்றைவிட்டு வெளியேறிவிடாமல் இருக்கவேண்டும் என்றும், அப்படியில்லாத பட்சத்தில் அவற்றைப் பலவந்தமாக அபகரித்துக் கொள்ளும் வகையில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கம் தந்திரமான சட்டங்களை வகுத்து அமுல்நடாத்திவருகின்றது என்றும் பலஸ்தீனர்களை நோக்கி அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நேரம்

Similar topics
» வளைகுடாவின் செல்வாக்கான 100 இந்திய அதிகார சக்திகளின் விபரங்கள்
» ராணுவம் கடும் எதிர்ப்பு:கஷ்மீரில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் உடனடியாக வாபஸ் இல்லை
» அமெரிக்கா : லிபிய ஆக்கிரமிப்பு
» ஆக்கிரமிப்பு இராணுவத் தாக்குதலில் 9 பலஸ்தீனர்கள் படுகாயம்
» மே 2011: ஆக்கிரமிப்பு இராணுவத்தால் 370 பலஸ்தீனர்கள் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum